Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்
ஆந்திரா உணவுகள் அனைத்தும் அவ்வளவு காரமாகவும், அதே நேரம் சுவையாகவும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் இன்னும் அற்புதமாக இருக்கும். அதில் பலரும் விரும்பி உண்ணக்கூடிய ஓர் சமையல் என்றால், அது ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபி.
பொதுவாக ஆந்திரா ரெசிபிக்கள் என்றாலே நினைவிற்கு வருவது காரம் தான். ஏனெனில் ஆந்திரா உணவுகள் அனைத்தும் அவ்வளவு காரமாக இருக்கும். அதே நேரம் சுவையாகவும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் இன்னும் அற்புதமாக இருக்கும். அதில் பலரும் விரும்பி உண்ணக்கூடிய ஓர் சமையல் என்றால், அது ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபி. இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே உங்களுக்காக ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெப்பர் சிக்கன் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக சளி பிடித்திருக்கும் போது ஆந்திரா பெப்பர் சிக்கனை சாப்பிட்டால், சளி அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். இப்போது ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டியது)
* பூண்டு - 10 பற்கள்
* இஞ்சி - 2 இன்ச்
* எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
பெப்பர் சிக்கன் மசாலாவிற்கு...
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகு - 2 1/2 டேபிள் ஸ்பூன் (பொடித்து கொள்ளவும்)
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
அலங்கரிப்பதற்கு...
* கொத்தமல்லி - சிறிது
* மிளகு - 1 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்)
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சிக்கனுடன் சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
* பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து, வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அப்போது கறிவேப்பிலையையும் போட்டு வதக்க வேண்டும்.
* வெங்காயம் பொன்னிறமானதும், ஊற வைத்துள்ள சிக்கனைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் மல்லித் தூள், பொடித்த மிளகு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். பின் சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வையுங்கள்.
* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் நீர் இருந்தால் அதை வற்ற வைத்து இறக்குங்கள்.
* பின் அதன் மேல் பொடித்த மிளகு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டினால், சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
