Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இட்லி, தோசைக்கு ஏற்ற ஆந்திரா ஸ்டைல் கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Andhra Style Kaara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
ஆனால் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை இந்த கார சட்னியை செய்தால், அடுத்தமுறை இந்த ஸ்டைலில் தான் கார சட்னியை செய்வீர்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* மல்லி - 1/2 ஸ்பூன்
* வேர்க்கடலை - 1 ஸ்பூன்
* சீரகம் - 1/2 ஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* வரமிளகாய் - 5
* பூண்டு - 2 பல்
* தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பு,
உளுத்தம் பருப்பு, மல்லி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து இறக்கி தனியாக
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளி
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து, மஞ்சள் தூளை தூவி 1 நிமிடம் வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் வதக்கி
வைத்துள்ளதையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கார சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
