Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பெற்றோர்களே! உங்க குழந்தை பயப்படாமலும் பதட்டப்படாமலும் இருக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
உங்கள் குழந்தையிடம் தன்னம்பிக்கையூட்டும் வகையில் உரையாடலை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இது அவர்களின் பயத்தை போக்கி, வலிமையானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் மாற்றும்.
பெரியவர்களை பொறுத்தவரை குழந்தை பருவம் என்பது மிகுந்த மகிழ்ச்சியானது. எந்த கவலையும் இல்லாமல் இருக்கும் ஒரு பருவமாக இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு அது மிகுந்த சவாலானதாக இருக்கும். ஏனெனில், கல்வித் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது முதல் கொடுமைப்படுத்துதலைக் கையாள்வது வரை, வீட்டுப்பாடம் செய்ய போராடுவதிலிருந்து சரியான நேரத்தில் பள்ளிக்குச் செல்வது வரை பல சவால்களை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். குழந்தை பருவம் ஒரே மாதிரியாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியனவர்கள் இல்லை. சில குழந்தைகள் மிகவும் புத்திசாலியாகவும், துணிச்சலானவர்களாகவும் இருப்பார்கள்.

இன்னும் சில குழந்தைகள் எதற்கெடுத்தலும் பயந்தவர்களாக இருப்பார்கள். பயந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர்கொள்வது மிகுந்த சவாலாக இருக்கும். இந்த சவால்கள் குழந்தைகளுக்கு கவலை மற்றும் பயத்தை தூண்டலாம். இது குழந்தைகளிடம் கோபம், அழுகை மற்றும் கூச்சல் போன்ற உணர்வுகளாக வெளிப்படும். எப்போதும் பதட்டமாக அல்லது பயப்படும் குழந்தையை பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தலைமையை ஏற்கட்டும்
உங்கள் குழந்தையுடன் உரையாடும் போது, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை மட்டும் நீங்கள் வழங்குங்கள். எல்லாவற்றிலும் ஆலோசனையை வழங்க வேண்டாம். அவர்களுடைய பிரச்சனைகளை அவர்களே சமாளிக்கட்டும். வயதுக்கு ஏற்ற சவால்களை சுயமாக அவர்கள் எதிர்கொள்ளட்டும். உங்கள் குழந்தைகளின் திறனை அவர்கள் நம்பட்டும். ஒரு செயலை சுயமாக அவர்களே செய்யும்போது, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சமாளிக்க முடியும். எதிலும் தலைமை பொறுப்பு ஏற்று அவர்களால், வழிநடத்த முடியும்.

விளையாட விடுங்கள்
குழந்தைகளுக்கு கவலை மற்றும் பயத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை சமாளிக்க அவர்களை விளையாட விடுங்கள். விளையாட்டின்போது, வழிமுறைகளை பின்பற்றி விளையாடவும் அவர்களின் மனதை ஒருநிலை படுத்தவும், வெற்றியை நோக்கி செல்லவும் அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் குழந்தைகள் பின்வாங்க விரும்பும்போது, அவர்களுக்கு ஊக்கம் அளித்து, உறுதுணையுடன் இருங்கள்.

தன்னம்பிக்கையூட்டும் உரையாடலை மேற்கொள்ளுங்கள்
உங்கள் குழந்தையிடம் தன்னம்பிக்கையூட்டும் வகையில் உரையாடலை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இது அவர்களின் பயத்தை போக்கி, வலிமையானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் மாற்றும். நேர்மையாக இருக்க உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். அதிகாரமளிக்கும் உரையாடல்களின் மூலம் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் திறன்களை உங்கள் குழந்தைகள் வளர்க்க உதவி செய்யுங்கள்.

உடல் உணர்வுகளை
உங்கள் குழந்தைகளின் பதட்டத்துடன் தொடர்புடைய உடல் உணர்வுகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும். உங்கள் குழந்தையின் உடலைத் தளர்த்தவும் மற்றும் ஓய்வெடுக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் பயிற்சிகள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். தியானம் மற்றும் சுவாசம் போன்ற பயிற்சிகள் செய்ய அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். பதட்டத்தின் போது, சுவாச பயிற்சி செய்ய அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

உடல் தொடுதலின் மூலம் ஆறுதல்
கட்டிப்பிடிப்பது அல்லது உங்கள் குழந்தையின் கையைப் பிடிப்பது அவர்களின் கவலையைத் தணித்து, அவர்களுக்கு ஆறுதல் உணர்வைத் தரும். நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள் என்பதை உடல் தொடுதலில் மூலம் உங்கள் குழந்தைக்கு காட்டலாம். உங்கள் குழந்தையின் பயம் மற்றும் பதட்டம் குறையும் வரை உங்கள் கைகளால் குழந்தையைப் பற்றிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications