Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பெற்றோர்களே! இந்த நடத்தைகள் மட்டும் உங்களிடம் இருந்தா...அது உங்க குழந்தை வாழ்க்கையை நரகமாக்கிடுமாம்!
குழந்தை பருவம் என்பது மிகவும் அற்புதமானது. பெரியவர்கள் அல்லது இளைஞர்களிடம் இன்று கேட்டாலும், 'குழந்தையாகவே இருந்திருக்கலாம்' என்று கூறுவார்கள். ஏனெனில், குழந்தை பருவம் அவ்வளவு அழகானது. ஒவ்வொரு நபரும் தன் குழந்தை பருவத்தை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்திற்கு தகுதியானவர்கள்தான் என்றாலும், சில குழந்தைகளுக்கு அது கிடைத்திருக்காது. காரணம் அவர்களுடைய பெற்றோர் நடத்தையில் அவர்களின் பெற்றோர் சிறந்தவர்களாக இல்லாமல் இருந்திருக்கலாம். இதுபோன்ற பெற்றோரின் பாணி மற்றும் நடந்துகொள்ளும் விதம் குழந்தைக்கு பயனளிக்காது.

ஒழுங்கற்ற நடத்தை கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படுவது குழந்தையின் ஆளுமையை எதிர்மறையான முறையில் பாதிக்கலாம். ஆதலால், பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஒழுங்கற்ற நடத்தைக் கொண்ட பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே உள்ளன.
எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்
ஒரு குழந்தையாக, நீங்கள் எப்போதும் உங்கள் பெற்றோரைச் சுற்றி மிகவும் கவனமாக இருந்திருப்பீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது வரை அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால், உங்கள் பெற்றோர் ஒழுங்கற்ற நடத்தையை கொண்டிருக்கலாம்.
சில சமயங்களில் அவர்கள், மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய நபராக இருக்கலாம். மற்ற நேரங்களில் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமான அல்லது மோசமான நபராக நடந்துகொள்ளலாம்.
உங்கள் பிரச்சனைகளை நிராகரித்தார்கள்
ஒரு குழந்தையாக, உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருக்கலாம். அந்த பிரச்சனைகளின்போது, உங்கள் பெற்றோரிடமிருந்து ஆதரவையும் இரக்கத்தையும் பெற நீங்கள் அடிக்கடி போராடினீர்கள் எனில், ஒழுங்கற்ற நடத்தை கொண்ட பெற்றோரால் வளர்க்கப்பட்டுள்ளீர்கள்.
இதற்கு உங்கள் பெற்றோர் உங்களுக்கு துணையாக ஒருபோதும் இல்லை என்று அர்த்தமல்ல, ஆனால் உங்களுக்குத் தேவையான ஆதரவை அவர்களால் எப்போதும் உங்களுக்கு வழங்க முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.
அதிக பாதுகாப்புடன் இருப்பது
பள்ளியிலிருந்து சுற்றுல்லா செல்லவோ அல்லது உங்கள் நண்பரின் வீட்டில் இரவு தங்கவோ உங்களை அனுமதிக்கும் போது, உங்கள் பெற்றோர் சாதாரணமாக இருக்கவில்லை எனில், ஒழுக்கமற்ற நடத்தைகளை கொண்ட பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உலகமே பாதுகாப்பற்ற இடம் என்பதை உங்கள் மனதில் அவர்கள் பதிய வைக்க முயல்வார்கள். இதன் விளைவாக நீங்கள் யாரை நம்புவது, யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கலாம். இதனால், மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும்.
அதிக பொறுப்பாக உணர்வது
ஒழுங்கற்ற நடத்தை கொண்ட பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் வயதைக் காட்டிலும் அதிக பொறுப்பாக இருப்பார்கள். தங்கள் பெற்றோரின் உணர்ச்சி நல்வாழ்வை சரிசெய்வதற்கு, தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இது அவர்களின் சிறிய தோள்களுக்கு மிகப்பெரிய சுமையாகும். ஒரு விதத்தில், உங்கள் பெற்றோரின் மகிழ்ச்சியைக் கவனித்துக்கொள்வதற்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். இதனால், அதிக சுமையை உங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நீங்கள் பெற வேண்டியிருக்கும்.
கொடூரமாக தண்டிக்கப்பட்டுள்ளீர்கள்
அதிக கோபப்படும் தன்மை உடையவராக உங்கள் பெற்றோர் இருக்கலாம். எதுவுமே நடக்காமல் அவர்கள் அமைதியை இழந்து உங்கள் மீது கோபப்படலாம். மன மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தலை நீங்கள் சந்தித்து இருக்கலாம். மிகவும் இளம் வயதிலேயே உங்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அதன் வடுக்கள் ஆறாமல் இன்னும் உங்கள் மனதில் இருக்கலாம்.
உங்கள் பெற்றோரின் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியுடன் நீங்கள் இன்னும் போராடுகிறீர்கள் என்றால், ஒரு உளவியலாளரிடம் ஆலோசனை பெறுங்கள். இது உங்கள் மன நலனுக்கானது மற்றும் கடந்த கால கொடுமையிலிருந்து உங்களை வெளிக்கொண்டு வரும். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெற்றோராக மாற திட்டமிட்டால், இந்த விஷயங்கள் உங்களுக்கு பெரிதும் உதவும்.



Click it and Unblock the Notifications

