Latest Updates
-
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
பெற்றோர்களே! சம்மரில் உங்க குழந்தைக்கு ஏற்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை எவ்வாறு தடுக்கலாம் தெரியுமா?
Urinary Tract Infections In Tamil: சிறுநீர் பாதை நோய்தொற்று (UTI) என்பது கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பயங்கரமான தொற்றுகளில் ஒன்றாகும். பெரியவர்களே சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் கடுமையான அவதிப்படும்போது, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் என சிறுநீர் அமைப்பின் எந்தப் பகுதியிலும் இது நிகழலாம். கோடை காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை நோய்தொற்று ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
உங்கள் குழந்தையின் வயதின் அடிப்படையில் தினசரி தண்ணீர் தேவையை நீங்கள் சரியாக உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தையின் வயதை 250 மில்லியுடன் பெருக்கிக்கொள்ளுங்கள். இப்போது, அவர்களின் வயதிற்கு சரியாக வகையில் தண்ணீர் குடிப்பதை நீங்கள் உறுதி செய்யலாம்.
இரண்டு வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 500 மி.லி. மூன்று வயது குழந்தை ஒரு நாளைக்கு 750 மி.லி. நான்கு வயது குழந்தைக்கு கோடைகாலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் பெர்ரி மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களை தண்ணீரில் உட்செலுத்துவதன் மூலம், அவர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் வழங்கலாம். மேலும், இந்த நீர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றைத் தடுக்கவும் உதவுகிறது.
மலச்சிக்கலைத் தவிர்க்கவும்
மலச்சிக்கல் சிறுநீர் பாதை நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. எனவே, உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அதற்கு உங்கள் குழந்தையின் உணவில் நிறைய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கொடுங்கள். மேலும், உங்கள் குழந்தையை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த கோடையில் நிறைய தயிர் சாப்பிட கொடுங்கள். ஏனெனில் இது ஒட்டுமொத்தமாக குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
நல்ல சிறுநீர் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்
அனைத்து குழந்தைகளும் நல்ல சிறுநீர் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் சிறுநீர்ப்பையை எப்படி முழுவதுமாக காலி செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுவர்களும் சிறுமிகளும் எப்போதும் அவசரத்தில் இருப்பார்கள். ஏனெனில், இது கோடை காலம், விடுமுறை காலம்.
அவர்கள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பதால், சிறுநீர்ப்பையை சரியாக காலி செய்யாமல் இருக்கலாம். எனவே உங்கள் பிள்ளை அவர்களின் சிறுநீர்ப்பையை காலி செய்வதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீர் பாக்டீரியாக்கள் வளர காரணமாக அமைந்துவிடும்.
முன்னும் பின்னும் சுத்தம் செய்வது
பெருங்குடலில் இருந்து வரும் ஈ.கோலை பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை நோய்தொற்றுக்கு மிகவும் பொதுவான காரணமாக இருக்கிறது. பெண்களின் அந்தரங்க அப்பகுதியில், முன்னும் பின்னும் எப்படிச் சுத்தம் செய்வது என்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை நோய்தொற்று ஏற்படுவது என்பது அவ்வளவு பொதுவானதல்ல. உங்கள் குழந்தைக்கு யுடிஐ இருந்தால், சிறுநீர் பாதையில் அடைப்பு உள்ளதா எனப் பரிசோதித்து கொள்ளுங்கள்.
வெளியில் விளையாடிய பிறகு சுகாதாரப் பயிற்சி
கோடைகாலத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடிவிட்டு வரும்போது, சூடாகவும், வியர்த்தும், களைப்பாகவும் வருவார்கள். அப்போது, அவர்களை உடனடியாக குளிக்க வையுங்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், குழந்தைகளுக்கு சுத்தம் செய்து சலவை செய்யப்பட்ட புதிய உள்ளாடைகளை அணிவிக்க வேண்டும். சலவை செய்வது பாக்டீரியாவை உள்ளாடைகளில் அண்டாமல் பாதுகாக்கிறது.



Click it and Unblock the Notifications

