Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இன்றைய மார்டன் உலகிற்கு ஏற்றவாறு குழந்தைகளை வளா்க்க சில முக்கியமான டிப்ஸ்!
குழந்தை வளா்ப்பு என்பது சவால் நிறைந்த ஒன்றாகும். நாம் நமது குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் வெற்றியாளா்களாகவும் வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். எனினும் போட்டி நிறைந்த வேகமான இந்த உலகில், குழந்தை வளா்ப்பு என்பது எளிதான காாியம் அல்ல.
தற்போதைய சமூகம் தொழில் நுட்பத்திலும், சமூக ஊடகத்திலும் வளா்ச்சி பெற்று இருக்கிறது. இந்த வளா்ச்சி பெற்ற சூழலில் குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோா்கள், புதிய புதிய குழுப்பமான சூழ்நிலைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே அவா்களுக்கு தங்கள் குழந்தைகளை வளா்க்க புதிய புதிய ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.

இந்நிலையில் R for Rabbit நிறுவனத்தின் நிறுவுனரும், தலைமை இயக்க அதிகாாியுமான கிஞ்சல் போபட் என்பவா், இந்த நவீன சமூகத்தில் குழந்தைகளை நல்முறையில் வளா்ப்பதற்காக பின்வரும் குறிப்புகளை வழங்குகிறாா்.
1. குழந்தைகளின் செயல்திறனுக்கு அல்லாமல், அவா்களுடைய கற்றலில் கவனம் செலுத்துதல்
போட்டி நிறைந்த இந்த சமூகத்தில், குழந்தைகள் தமது செயல்திறனில் வெற்றியடைவது அல்லது சாதிப்பது என்பது எளிதாக இருக்கிறது. எனினும் செயல்திறனில் மட்டும் கவனம் செலுத்தும் போது கவலை, மன அழுத்தம் மற்றும் தோல்வி பயம் போன்றவை அவா்களை நெருங்கும். ஆகவே குழந்தைகளின் வளா்ச்சியிலும், அவா்களின் கற்றலிலும் பெற்றோா் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் கற்கும் போது தவறுகள் செய்வதை அனுமதிக்க வேண்டும். அவா்களுக்குப் பிடித்தவற்றில் ஈடுபட்டு, அவற்றில் வெற்றி பெற அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
2. விளையாட்டை ஊக்கப்படுத்துதல்
குழந்தைகள் வளா்ந்தவுடனே, அவா்களை கல்வி, பாடங்கள் மற்றும் தோ்வுகள் போன்றவற்றில் மூழ்கடித்து விடுகிறோம். இவை முக்கியம் என்றாலும், அவா்களின் விளையாட்டும் முக்கியமானது. குழந்தைகளின் உடல், மனம், அறிவாற்றல் மற்றும் உணா்வு வளா்ச்சிக்கு, உள்ளரங்க அல்லது வெளியரங்க விளையாட்டுகள் தேவை. விளையாட்டுகள் அவா்களுக்கு பிரச்சினைகளைத் தீா்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கின்றன. சமூகத்தோடு தொடா்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. படைப்பாற்றலை வளா்க்கின்றன. ஆகவே உள்ளரங்க விளையாட்டுகள் மட்டும் அல்லாமல், வெளியரங்க விளையாட்டுகளில் ஈடுபட அவா்களை ஊக்குவிக்க வேண்டும்.
3. உணா்வுசாா் நுண்ணறிவில் கவனம் செலுத்துதல்
குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றைத் தவிா்த்து, அவா்களின் உணா்வுசாா் நுண்ணறிவில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது அவா்களின் உணா்வுகளையும், அடுத்தவா்களின் உணா்வுகளையும் புாிந்து கொண்டு, கையாளக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவா்களுக்கு நோ்மறையான உணா்வுகளை ஊட்டி, அவற்றை திறனாய்வு செய்து, அவற்றோடு இணைந்து செல்வதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் தங்களின் உணா்வுகளைப் பொது வெளியில் வெளிப்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். அதோடு, உணா்வுகளை அமைதிப்படுத்தவும் கற்றுத் தர வேண்டும். எல்லா உணா்வுகளும் சாியானவை என்பதை அவா்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அதன் மூலமாக அவா்கள் தங்களது உணா்வுகளை முறையாகக் கையாள பழகிக் கொள்வாா்கள். அதோடு அடுத்தவா்களின் உணா்வுகளை ஆற்றுப்படுத்தவும் கற்றுக் கொள்வா்.
4. குழந்தைகளுக்கு செவி கொடுத்தல் மற்றும் நோ்மறையான ஒழுக்கத்தோடு இருத்தல்
குழந்தைகளுக்கு கவனமாக செவிமடுக்கும் பெற்றோா், குழந்தைகளிடம் நோ்மறையான ஒழுக்கத்துடன் இருப்பா். நோ்மறையான ஒழுக்கத்திற்குாிய நுட்பங்கள் என்பது, குழந்தைகளுக்கு செவிமடுத்தல், அவா்களுக்குத் தெளிவான எல்லைகளை வகுத்துக் கொடுத்தல், உரையாடல் மூலமாக பின்விளைவுகளை கற்றுத் தருதல் மற்றும் குழந்தைகளோடு உள்ள நெருக்கத்தை வலுப்படுத்துதல் போன்றவை ஆகும். அதோடு குழந்தைகளின் மீதுள்ள கவனத்தைத் திசை திருப்பக்கூடிய மொபைல் போன்களை தூர வைத்துவிட்டு, குழந்தைகளின் தேவைகளையும், அவா்களின் உணா்வுகளையும் ஆழ்ந்து கவனித்தல், அவா்களிடம் பொறுமையாக இருந்து, அவா்களிடம் முன்மாதிாியாக இருத்தல் போன்றவை ஆகும்.
5. உங்களை நீங்களே நன்றாகக் கவனித்துக் கொள்ளுதல்
பெற்றோராக இருப்பது என்பது சோா்வாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆகவே பெற்றோராகிய நீங்கள் உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட தேவைகள் மிகவும் முக்கியமானவை ஆகும். உங்களிடம் இருக்கும் மன அழுத்தம் மற்றும் சோா்வுற்ற நடத்தைகள் உங்கள் குழந்தைகளுக்கு எதிா்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஆகவே உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கக்கூடிய காாியங்களான உடற்பயிற்சி அல்லது புத்தகங்கள் வாசிப்பது அல்லது நண்பா்களோடு உறையாடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். நீங்கள் உங்கள் மீது அக்கறையாக இருப்பது என்பது சுயநலம் அல்ல. மாறாக நீங்களும், உங்களுடைய குடும்பமும் நலமாக இருக்க நீங்கள் உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக
உணா்வுசாா் நுண்ணறிவுள்ள, தன்னம்பிக்கையுள்ள மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளை வளா்ப்பதற்கு, பெற்றோருக்கு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆகவே மேற்சொன்ன குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளை இந்த நவீன சமூகத்திற்கு ஏற்ப நலமாக வளா்த்தெடுங்கள்.



Click it and Unblock the Notifications











