Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
கொரோனா வைரஸ் அபாயம்: கர்ப்பிணி பெண்கள் கொரோனா குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!
கொடூரமான கொரோனா வைரஸ் தாக்குதலில் உலகம் தவிக்கும் போது, இது பற்றி கர்ப்பிணி பெண்களுக்கு எழக்கூடிய பயமும் சந்தேகங்களும் இயற்கை தான். இந்த வைரஸ் கர்ப்பிணிகளை தாக்கினால், குழந்தையையும் அது தாக்கக்கூடுமா?
உலகை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது 70 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வுஹான் என்னும் இடத்தில் உருவான இந்த வைரஸானது தற்போது வரை 4000-த்திற்கும் அதிகமான உயிர்களை வாங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் சுமார் 3000-த்திற்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து ஈரானில் பாதிக்கப்பட்ட 7000 பேரில் 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 47 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸூக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலக மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும், வைரஸ் தாக்கத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை தொடர்ந்து தேடியும், பின்பற்றியும் வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி இணையதளங்களில் ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து வலம் வந்த வண்ணம் உள்ளன. பூண்டு கொண்டு கொரோனா வைரஸை குணப்படுத்துவது, அந்த மருந்து சாப்பிட்டால் போதும், இந்த மருந்து சாப்பிட்டால் போதும் என்று கணக்கற்ற தவறான செய்திகளை யாரும் நம்படக்கூடாது. இது போன்ற விஷயங்களால், தன்னை பற்றியும், தன் குடும்பத்தால் பற்றியும் மக்களுக்கு இருக்கும் கவலை அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.

கொரோனா வைரஸ் குறித்து கர்ப்பிணி பெண்களுக்கான அறிவுரை
ஒரு குழந்தையை இந்த உலகிற்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. எனவே, இத்தகைய கொடூர வைரஸ் தாக்குதலில் உலகம் தவிக்கும் போது. இது பற்றி கர்ப்பிணி பெண்களுக்கு எழக்கூடிய பயமும் சந்தேகங்களும் இயற்கை தான். இந்த வைரஸ் கர்ப்பிணி பெண்களை தாக்கினால், குழந்தையையும் அது தாக்கக்கூடுமா அல்லது இல்லையா என்பன போன்ற கேள்விகள் மனதில் தோன்றுவது இயல்பு. எனவே, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இருக்கக்கூடிய கொரோனா குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்காக இப்போது இந்த கட்டுரை பதிவிடப்பட்டுள்ளது. இதனை படித்து மனதை அமைதிப்படுத்தி கொள்வதோடு, எச்சரிக்கையோடும் இருப்பது அவசியம்.

கொரோனா வைரஸூம், கர்ப்பிணி பெண்களும்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் குறித்து இப்போது வரை, மிகவும் குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) வெளியிட்டுள்ள அறிவியல் அறிக்கைகளில், கர்ப்பிணிப் பெண்கள் COVID-19 க்கு பாதிக்கப்பட்டது குறித்து போதுமான தகவல்கள் எதுவும் இல்லை.
இயற்கையாகவே கர்ப்பம் தரிக்கும் பெண்கள், உடலியல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் ரீதியாக பல மாற்றங்களை சந்திப்பதால், COVID 19 உள்ளிட்ட வைரஸ் சுவாச நோய்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாகக்கூடும்.

தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுமா?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளதன் அடிப்படையில், கொரோனா வைரஸானது, பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மூச்சுக்காற்றின் மூலமாக தான் பரவுகிறது. சமீபத்திய சில வழக்குகளில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து பிறந்த குழந்தை எதற்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் COVID-19 இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்ப்பால் மூலம் வைரஸ் பரவுமா?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சில வழக்குகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில், தாய்ப்பாலில் COVID-19 வைரஸ் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் என்றால் என்ன?
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு புதிய வகையாகும். ஏனென்றால், முன்பு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் என்பது மனிதர்களில் கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவின் வுஹான் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்டது தான் இந்த வைரஸ். கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே ஒரு ஜூனோடிக், அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. ஆனால், தற்போது பரவி வரும் COVID-19, மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவுகிறது.

கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள்:
1. சாதாரண சளி
2. மூக்கு ஒழுகுதல்
3. தொண்டை வலி
4. இருமல்
5. தலைவலி
6. காய்ச்சல்

கர்ப்பிணி பெண்கள் நிச்சயம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
கொரோனா வைரஸ் குறித்த போதிய முன்னெச்சரிக்கை செயல்கள் குறித்த தகவல்கள் கிடைக்காத பட்சத்தில், உலக சுகாதார மையம் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முன்னெச்சரிக்கை குறித்த பொதுவான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாருங்கள் அவற்றை பின்பற்றி நோய் தாக்கத்தில் இருந்து நம்மை காத்து கொள்வோம்...
* கை கழுவும் போது குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்காவது கழுவ வேண்டும். குறிப்பாக, இருமல், தும்மல், கழிவறை பயன்பாட்டிற்கு பின்பு நிச்சயம் கை கழுவ மறக்க வேண்டாம்.
* இருமல் அல்லது தும்மல் பிரச்சனை உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் அளவிற்காவது இடைவெளியை பின்பற்றுங்கள்.
* உடல் நலக்குறைவு ஏற்படுவது போன்று தோன்றினால் வீட்டிலேயே இருங்கள்.
* இருமல் அல்லது தும்மல் வரும் போது முழங்கையை வாயில் வைத்து செய்வது சிறந்தது. மறந்தும் உள்ளங்கையை மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள்.
முடிந்தவரை இவற்றை முறையாக பின்பற்றி சுத்தமாக இருந்தாலே வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் சற்று கூடுதல் கவனத்தோடு அனைத்து விஷயங்களையும் செய்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications