Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள்!
இங்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் இனிமையான அனுபவம். இக்காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். அது உடலளவிலும், மனதளவிலும் தான். வயிற்றில் குழந்தை வளர வளர கருப்பையின் அளவும் குழந்தைக்கு ஏற்ப வளரும்.

அதோடு, பெண்களின் இடுப்பளவு, அடிவயிறு, தொடை போன்றவையும் விரிவடையும். பெண்களின் வயிற்றுப் பகுதியில் மாற்றம் ஏற்படுவதால், பெண்கள் வயிற்றில் சற்று பிடிப்புக்களை உணர்வார்கள். இங்கு கர்ப்ப கால வயிற்றுப் பிடிப்புக்களைக் குறைக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவகேடோ
அவகேடோ பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது கருப்பையில் உள்ள காயங்கறைக் குறைக்க உதவும் மற்றும் கருப்பையில் மெல்லிய படலத்தை உருவாக்கி, பிடிப்புக்களைக் குறைக்கும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இதுவும் கர்ப்ப கால பிடிப்புக்களை சரிசெய்யும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், கருப்பையில் உள்ள காயங்களைக் குறைத்துப் பிடிப்புகளைக் குறைக்கும் மற்றும் வாழைப்பழம் மலச்சிக்கல் பிரச்சனைத் தடுக்கும்.

க்ரீன் டீ
கர்ப்பிணிகள் க்ரீன் டீயைக் குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வயிற்றுப் பிடிப்புகளைக் குறைக்கும்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இது கருப்பைச் சுவர்களை வலிமைப்படுத்தி, கர்ப்ப கால பிடிப்புக்களைக் குறைக்கும்.

பால்
பால் கர்ப்ப கால வயிற்றுப் பிடிப்புக்களைக் குறைக்க மட்டுமின்றி, அதில் உள்ள கால்சியம் குழந்தையின் எலும்புகளை வலிமைப்படுத்தவும் செய்யும்.

முட்டை
முட்டையில் புரோட்டீன் மற்றும் குறிப்பிட்ட பொருட்கள் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து, வயிற்றில் பிடிப்புக்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications