Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!
ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் என்பது ஒரு முக்கியமான ஒன்று. கர்ப்பத்திற்கு பிறகு பெண்கள் சில மாறுதல்களை பெறுகின்றனர். அதுமட்டுமின்றி, ஒருசில செயல்களிலும், வாழ்க்கை முறையிலும் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் உண்ணும் உணவுகள், பயணங்கள், பளுவுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்த்தல் என்பனவற்றை மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் இன்னும் பல செயல்களில் மிகவும் கவனத்துடன் நடக்க வேண்டும்.
உதாரணமாக, கர்ப்பத்தின் போது உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால், வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். எனவே கர்ப்பிணிகளுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, ஒருசில ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் என்னவென்று, அனுபவசாலிகளிடமிருந்து சேகரித்து, அவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்து சந்தோஷமாக இருங்கள்.

ஹீல்ஸ் அணிவது
கர்ப்பிணிகள் உணரமான ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை முதுகு வலியை உண்டாக்குவதோடு, கால் வலியுடன், சில சமயங்களில் தவறி விழுகவும் வாய்ப்புள்ளது.

பளு நிறைந்த பொருட்களை தூக்குதல்
பொதுவாக பளு நிறைந்த பொருட்களை தூக்குவது நல்லது தான். ஆனால் முதல் மூன்று பருவம் முடிந்த பின்னர், பளுவுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். ‘

குழந்தைகளை அழைத்துச் செல்லுதல்
இரண்டாம் முறையாக கருத்தரித்திருந்தால், வெளியே செல்லும் போது முதல் குழந்தையை தனியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் திடீரென்று தூக்கு என்று சொல்வார்கள். எனவே தனியாக அழைத்துச் செல்ல கூடாது.

ஸ்கேட்டிங்
தற்போது நிறைய பேர் ஸ்கேட்டிங் விளையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த விளையாட்டை கர்ப்பிணிகள் அறவே தவிர்க்க வேண்டும். இநத் விளையாட்டில் போதிய பேலன்ஸ் கொடுக்காவிட்டால், பின் கருவில் உள்ள சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

நீராவிக்குளியல்
கர்ப்பமாக இருக்கும் போது நீராவிக்குளியல் மேற்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் நீராவிக்குளியலின் போது, உடலில் உள்ள இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் சீராக இருப்பதால், அது வயிற்றில் உள்ள சிசுவிற்கு சில கெடுதலை உண்டாக்கிவிடும்.

உடற்பயிற்சி
கர்ப்பத்தின் போது மிகவும் கடினமான உற்பயிற்சிகளை செய்தால், இதய துடிப்பு அதிகரித்து, நஞ்சுக் கொடிக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நிலைமை ஏற்படும்.

இரத்தம் தானம்
இரத்தம் தானம் செய்வதால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பினும் கர்ப்பிணிகள் கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே இரும்புச்சத்து குறைவாக இருக்கும்.

தீம் பார்க்
நிச்சயம் தீம் பார்க்கிற்கு கர்ப்பிணிகள் செல்லலாம். ஆனால அங்கு இருக்கும் ரைடுகளில் ரோலர் கோஸ்ட், கார் ஓட்டுதல் போன்றவற்றை விளையாடக்கூடாது. இது மிகவும் ஆபத்தான விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

குதிரை பந்தயம்
தற்போதைய பெண்களுக்கு குதிரை பந்தயம் என்றால் விருப்பத்துடன் விளையாடுகின்றனர். என்ன தான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும், கர்ப்பமாக இருக்கும் போது விளையாடக்கூடாது. இல்லாவிட்டால், கருசிதைவு ஏற்படும்.

பரவும் நோய்கள்
பரவும் நோய்களான அம்மை, டெங்கு அல்லது இதர வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து, தள்ளிளே இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
