கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்!!!

By Super

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலம் என்பது மிகவும் முக்கியமான காலமாகும். கர்ப்பிணி பெண் தன் ஆரோக்கியத்தையும், தன் சிசுவின் ஆரோக்கியத்தையும் காப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை எந்தவித குறைகளும் இன்றி, எந்தவித வளர்ச்சி குறைபாடுகளும் இன்றி ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கும்.

சரிவர உடல்நலத்தை பாதுகாக்காமல் போனால், அது சிசுவை பல வகைகளில் பாதிக்கும். சில விஷயங்கள் சிசுவை கருவில் இருக்கும் போதே பாதிக்கும். இன்னும் சில எதிர்ப்பு சக்தி வளர்ச்சியை பாதித்து, குழந்தைக்கு வாழ்க்கையின் பின்னாட்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க கர்ப்பமாக இருக்கும் போதே, ஆரோக்கியத்தை காத்திட என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுவாக பின்பற்றுவோம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பதை பல நேரங்களில் தெரிந்து கொள்வதில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். மேலும் புகைப்பிடிப்பவர்களின் மத்தியில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கூறிய இரண்டு சந்தர்பங்களிலும், அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தை விளைவிக்கும். அதிலும் சிகரெட் புகையை அடிக்கடி நுகர்ந்தால், குறை பிரசவம், உடனடியான கருச்சிதைவு, போதிய எடையுடன் பிறக்காத குழந்தை, சிசு உயிரிழப்பு அல்லது பிரசவத்தின் போது குழந்தை உயிரழிப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இது போக, குழந்தையின் வளர்ச்சியில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதற்கு காரணம் சிசுவின் இரத்த குழாய்கள் சுருங்கி, மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைவதே. இதனால் ஏற்படும் தீமைகள் நன்றாக தெரிந்தும் கூட, இன்னமும் பல கர்ப்பிணி பெண்கள் இந்த பழக்கத்தை கைவிடுவதில்லை.

மதுபானம் அருந்துவது

மதுபானம் அருந்துவது

அனைத்து கர்ப்பிணி பெண்களும் மதுபானங்களை தவிர்க்க வேண்டும். சிசுவுக்கு அது கண்டிப்பாக பாதுகாப்பை அளிக்காது. நீங்கள் எந்தளவு குடிக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு நேரம் குடிக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், குழந்தைக்கு ஏற்படும் ஆபத்து நிர்ணயிக்கப்படும். ஒருவேளை அளவு கூட கூட ஆபத்தும் அதிகரிக்கும். இதன் உச்சகட்டம் தான் ஃபீட்டல் ஆல்கஹால் சிண்ட்ரோம். அதனால் கடுமையான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும். இது மூளை வளர்ச்சியை கூட பாதிப்படையச் செய்யும். மேலும் பல பிறப்பு நிலைக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதில் மத்திய நரம்பியல் அமைப்பு கோளாறு, எலும்பு அமைப்பு கோளாறு, பிரசவத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் வளர்ச்சியில் குறைபாடு, முக அமைப்பில் கோளாறு மற்றும் உறுப்புகள் அமைப்பு கோளாறு ஆகியவைகள் அடங்கும். இதுவும் கூட அனைவருக்கும் தெரிந்த போதிலும், பல கர்ப்பிணி பெண்கள் குடிப்பழக்கத்தை தொடர்கின்றனர் என்பது துரதிர்ஷ்டமான ஒன்றாகும்.

பூனையின் கழிவுகளை அப்புறப்படுத்துவது

பூனையின் கழிவுகளை அப்புறப்படுத்துவது

கர்ப்பிணி பெண்கள் பூனையின் கழிவுகளை சுத்தம் செய்யக்கூடாது. பூனையின் மலத்தில் டோக்சோபிளாஸ்மோசிஸ் என்ற ஒரு வகை நோயை உண்டு பண்ணும் ஒட்டுண்ணி உள்ளது. இதனால் கருவில் இருக்கும் போதே சிசு மரணிப்பது, குறைபாடுடன் குழந்தை பிறப்பது மற்றும் இடம் மாறிய பிரசவம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். பல நேரங்களில் பூனையுடன் பல நாட்கள் வாழ்ந்த பெண்களுக்கு டோக்சோபிளாஸ்மோசிஸை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். இருப்பினும் பாதுகாப்பாக இருக்க, பூனையை ஒரு மருத்தவரிடம் பரிசோதித்து கொள்வது அவசியம்.

மாமிசத்தை பச்சையாக மற்றும் அறை வேக்காட்டுடன் உண்ணுதல்

மாமிசத்தை பச்சையாக மற்றும் அறை வேக்காட்டுடன் உண்ணுதல்

கர்ப்பிணி பெண்கள் மாமிசத்தை பச்சையாக மற்றும் அறை வேக்காட்டுடன் உண்ணக் கூடாது. மேலும் கடல் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மாமிசத்தை பச்சையாக மற்றும் அறை வேக்காட்டுடன் சாப்பிட்டால், டோக்சோபிளாஸ்மோசிஸ் என்ற ஒட்டுண்ணி நோய் உண்டாகும். அதனால் நன்றாக சமைத்த மாமிசங்களை மட்டுமே கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டும். இல்லையென்றால், சல்மோனெல்லா என்ற வயிற்றுப்போக்கு உயிரி பாக்டீரியா மற்றும் கோலிபார்ம் என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்படுவார்கள். இவை சிசு மரணித்தல், கருச்சிதைவு மற்றும் சிசுவின் மூளை பாதிப்பு ஆகிய சிக்கல்களை உண்டாக்கும்.

மீன் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்

மீன் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்

கர்ப்பிணி பெண்கள் மீன் உண்ணுவதை தவிர்க்க வேண்டும். மீன் உண்ணுவதால் எந்தவித ஆரோக்கிய கேடும் கிடையாது. ஆனால் பல தொழிற்சாலை கழிவுகள் தண்ணீர் வழியாக மீனில் கலப்பதால், அது சிசுவின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். சுறா மீன், ஈட்டி மீன் மற்றும் டூனா மீன் போன்றவை மெர்குரியை அதிகப்படுத்துவதால், அவை குழந்தையின் மூளை வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும்.

நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்களை தவிர்க்கவும்

நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்களை தவிர்க்கவும்

பூச்சி கொல்லிகள், கிருமி கொல்லி, களைக் கொல்லி, பூஞ்சை கொல்லி மற்றும் இதர நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்கள் பிறக்க போகும் சிசுவை பல வழிகளில் தாக்கும். அது அந்த பொருளின் நச்சுத்தன்மையை பொறுத்து அமையும். அதுவும் கருவுற்றது முதல் மூன்று மாதக் காலத்தின் போது, இந்த நச்சுகளால் பாதிக்கப்பட்டால், இது குழந்தையின் வளர்ச்சியை காலம் தாழ்த்தும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் பூச்சி கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தோட்டத்தில் இருக்கும் களை கொல்லிகள், பூச்சி கொல்லிகள், பூஞ்சை கொல்லிகள் போன்றவைகளும் தீமையை விளைவிக்கும். எனவே அனைத்து பழங்களையும், காய்கறிகளையும் உண்ணுவதற்கு முன்பாக நன்றாக கழுவுங்கள். உங்கள் வீட்டிலும், தோட்டத்திலும் ஆர்கானிக் பொருட்கள் மற்றும் ஆர்கானிக் முறைகளையே பயன்படுத்துங்கள்.

உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்து விடக்கூடாது

உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்து விடக்கூடாது

கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பம் திடீரென அதிகரித்து விடக் கூடாது. உடல் வெப்பநிலை 102 டிகிரிக்கு மேல் சென்றால், கருவில் இருக்கும் சிசு வெகுவாக பாதிக்கப்படும். உடலை வெளிப்புறத்தில் குளிர்ச்சியாக்க பல வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் கருவில் இருக்கும் சிசுவிற்கு வெப்பநிலை குறைய போவதில்லை. உடலின் உட்புறம் மற்றும் அதிலிருக்கும் சிசுவும் குளிர்ச்சியடைய நீண்ட நேரம் எடுக்கும். குளிர்ச்சியை ஏற்படுத்தும் இயக்க அமைப்பு சிசுவிற்கு இல்லாததால் அது பாதிப்புள்ளாகும். குறிப்பாக காய்ச்சல், கடுமையான உடற்பயிற்சி, வெயிலில் கடுமையாக வேலை செய்வது போன்றவைகளால் உடல் வெப்ப நிலை அதிகரிக்கும்.

வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்

வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்

மேலே கூறியதை போல் திடீர் வெப்பம் சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் சூடான நீரை கொண்ட தொட்டியில் குளிப்பது, நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பது போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் உடல் வெப்பத்தை 102 டிகிரிக்கு மேல் அதிகரிக்க செய்யும். அதனால் சிசுவின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொண்டு, கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும். அதனால் தான் எலெக்ட்ரிக் போர்வையையும் தவிர்க்க வேண்டும்.

ஆபத்தான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்

ஆபத்தான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்

லேசான உடற்பயிற்சி கர்ப்பிணி பெண்களுக்கு நன்மையை ஏற்படுத்தினாலும், காயம் ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். கூடைப்பந்து, ஹாக்கி, பனிச் சறுக்கு போன்ற விளையாட்டுக்களும் இதில் அடங்கும். விளையாட்டினால் ஏற்படும் காயங்களும், பலன்களும் உட்புற இரத்தக்கசிவு, கருச்சிதைவு மற்றும் சிசுவின் எலும்புகளில் காயம் போன்றவற்றை உண்டாக்கும். அதனால் குழந்தை பிறக்கும் வரை கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க வேண்டும்

எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க வேண்டும்

கர்ப்பிணி பெண்கள் எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், கருவுற்ற ஆரம்ப காலத்தில் எக்ஸ்ரே பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்து விடுங்கள். அதனால் எக்ஸ்ரே எடுப்பதை போதுமான வரை தள்ளி வைக்கலாம். மின்காந்த அலையில் சிறிதளவு பட்டாலும் போதும், அது சில உயிரணுக்களை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் தொலைகாட்சி அல்லது மைக்ரோ ஓவன் அருகில் அதிக நேரம் நிற்க கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, October 2, 2013, 13:25 [IST]
Desktop Bottom Promotion