Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பிணிகளுக்கு சின்னம்மை தாக்கினா உடனே கவனிங்க!

சின்னம்மை அறிகுறிகள்
வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.
சின்னம்மை தாக்கியவர்களுக்கு மார்பு பகுதியில் சிவப்பு நிற சிறிய கொப்பளங்கள் காணப்படும். பின்னர், மெதுவாக உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும். காய்ச்சல், தலைவலி இருக்கும். கொப்பளங்களால் ஏற்படும் பாதிப்பு சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். தும்மல், இருமல் மற்றும் உடலில் ஏற்படும் கொப்பளங்களில் இருந்து வரும் நீர் போன்றவற்றால் சின்னம்மை பரவுகிறது.
உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும். மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்தலாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு தாக்குதல்
கர்ப்பிணி மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சின்னம்மை எளிதில் தாக்குகிறது. கருதரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கர்ப்ப காலத்தின் ஆரம்பத்திலேயே சின்னம்மை தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கருக்கலைப்பு செய்வது நல்லது. இல்லையெனில் கரு வளரும்போது நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. மேலும், குழந்தைக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். தாய்க்கு நர்வெஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு முறை
சின்னம்மை எளிதில் பரவும் என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது. அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.
வெயிலின் தாக்கத்தில் இருந்து சின்னம்மை நோய் வராமல் தடுக்க பாதுகாப்பு முறை அவசியம் சின்னம்மை தாக்கிய காலத்தில் திரவ உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும். தனியறையில் ஓய்வு எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications