Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
தாயாவதில் பிரச்சினையா? பி.சி.ஓ.எஸ்' இருக்கலாம்!

தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் பி.சி.ஓ.எஸ் பாதிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சி.ஓ.எஎஸ் நோயின் அறிகுறிகளை உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40 சதவீதம் என்றால், 60 சதவீதம் பேர் அறிகுறியை உணராமல் அந்த நோய்த்தன்மையுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல் இதையும் தொடக்கத்திலே கண்டறிந்தால், எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
இந்த நோயாளிகளில் 30 சதவீதத்திற்கு குறைவானவர்களுக்கு மட்டுமே மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது. 9-10 வயது சிறுமிகளாக இருக்கும்போதே பெற்றோர், அவர்களை கவனித்தால், பி.சி.ஓ.எஸ். பாதிப்பை தொடக்கத்திலே கண்டறிந்து விடலாம். நோய் பாதிப்பை கண்டுபிடித்து, கட்டுப்படுத்தாமலே விட்டால் அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உருவாகும் சூழலை அதிகரிக்கும். குழந்தையின்மைக்கும் இது முக்கிய காரணமாகும்.
சிறுமிகளாக இருக்கும்போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப்பது பி.சி.ஓ.எஸ் ன் முக்கிய அறிகுறியாகும். மேலும் சிறுவயதிலே பூப்படைவது, அதிக எடை, அளவுக்கு அதிகமாக மெலிந்து போதல், எப்போதும் படுக்க வேண்டும் என்று தோன்றுதல், படுத்தால் தூக்கம் வராத நிலை ஏற்படும். பின் கழுத்து, கை மூட்டுகள், கையை மடக்கும் பகுதிகளில் கறுப்பு நிறம் படருதல், முகத்தில் கறுப்பு படை தோன்றுதல், முகத்தில் எண்ணைத் தன்மை அதிகரித்தல். காலை நேரங்களில் மூக்கில் மட்டும் அதிக எண்ணைத்தன்மை தோன்றுதல், ஒற்றைத் தலைவலி போன்றவையும் பி.சி.ஓ.எஸ் ன் அறிகுறிகளாகும்.
இவை அனைத்தும் இன்சுலின்- லெப்டின் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் தோன்றுவதாகும். முகத்தின் கீழ் பாகம் மட்டும் குண்டாகுதல், பற்கள் முன்நோக்கி துறுத்துதல், மார்பு பகுதியும்- தோள் பகுதியும் மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல் போன்றவை ஸ்டீராய்ட் ஹார்மோனால் ஏற்படும் பாதிப்பாகும்.
ஆறு மாதங்கள் வரை மாதவிலக்கு வராமல் இருத்தல், வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து போதல், அல்லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையின்மை, 90 நாட்களுக்குள் அபார்ஷன் ஆவது, மீசை வளர்தல், தாடி வளர்தல், உடலில் தேவையற்ற இடங்களில் எல்லாம் முடி வளர்தல், மிக அதிகமாக தலை முடி உதிர்தல் போன்றவைகளும் பி.சி.ஓ.எஸ். அறிகுறிகளாகும்.
பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு சரியான சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தினசரி 1200 கலோரி அளவுள்ள உணவுகளை சரிவிகிதமாக உட்கொள்ள வேண்டும். அதில் 40 சதவிகிதம் கார்போஹைடிரேட் உணவுகள் எடுத்துக்கொள்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மதிய நேரத்தில் கொழுப்பு குறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதனுடன் இனிப்பு சேர்க்காத யோகர்டு எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இரவு நேரத்தில் பழுப்பு அரிசி, வேகவைத்த மீன், ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் மொத்தம் 330 கலோரி உணவுகளை மட்டுமே உட்கொண்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் பி.சி.ஓ.எஸ் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications