Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
அம்மா டயட்ல இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வராது!

கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று ஆரோக்கியத்துக்கான தேசிய மையத்தின் ஆலோசனைப் பிரசுரம் ஒன்று தெரிவித்திருந்தது. பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே உடல் எடையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என இதில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாடுகள் உடல் எடையை மூலம் கட்டுக்குள் வைத்தால், இவ்விதமான பிரச்சினைகளைத் தவிர்க்க அது உதவுகிறதே ஒழிய வயிற்றிலுள்ள குழந்தையுடைய ஆரோக்கியத்தையோ தாயுடைய ஆரோக்கியத்தையோ அது பாதிக்கவில்லை என புதிய ஆய்வு தெளிவுபடுத்துகிறது
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதாலும், தனக்கும் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகமாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் கர்ப்பிணிப் பெண்கள் அளவுக்கதிகமாக உடல் எடை அதிகரிக்கின்ற பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்றும், மகப்பேறு தொடர்பாக ஏற்படக்கூடிய சில சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்றும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கிறது.
கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தவர்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்துவிடுகிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கர்ப்பகாலத்தில் பெண்கள் தமது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுவதாக தப்பாகப் புரிந்துகொள்ளக்கூடாது என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக உடல் எடை கூடிப்போனால், நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோய், தாயின் உடலில் உப்புசத்து கூடிப்போய்விடுவது, முன்கூட்டியே பிரசவம் ஆகிவிடுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏழாயிரம் கர்ப்பிணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த 44 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முன்பு செய்யப்பட்ட 44 ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றாக ஆராய்ந்து இந்த முடிவு தெரிவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் மருத்துவ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடும் உணவிற்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வீசிங் பிரச்சினை ஏற்படுவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். நாளடைவில் அதுவே ஆஸ்துமாவாக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கு கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுதான் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் வீசிங் பிரச்சினைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.



Click it and Unblock the Notifications