Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கர்ப்பமா இருக்கும் போது ஞாபக மறதி அதிகம் இருக்குதா?

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், பெண்களின் மூளைச் செல்களை பாதிக்கும். இதனால் தான் அவர்களுக்கு மறதி ஏற்படும். இதற்காக பயப்பட வேண்டாம். குழந்தை பிறந்த பின்பு இந்த பிரச்சனை சரியாகிவிடும். ஒரு சிலருக்கு மட்டும் தான், குழந்தை பிறந்த பின்பு, சில மாதங்களுக்கு பிறகு சரியாகும்.
மேலும் கர்ப்பத்தின் போது, எப்போதுமே பெண்கள் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பாள். இதன் காரணமாகவும் பெண்கள் மறந்துவிடுகின்றனர்.
அதிலும் இந்த நேரத்தில் நிறைய மனஅழுத்தம் இருக்கும். அவ்வாறு இருக்கும் போது பெண்ணானவள் அவள் உண்ணும் உணவு, மருந்துகள் போன்றவற்றை சாப்பிட வேண்டியுள்ளது. இவை அனைத்தும் அவர்களுக்கு மிகுந்த டென்சனை ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறக்கும் வரை அந்த அழுத்தம் இருக்கும். இதனால் தான் சிலருக்கு மறதி ஏற்படுகிறது.
கர்ப்பத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளில் பொதுவாக அனைவருக்குமே வருவது, தூக்கமின்மை. இந்த நேரத்தில் அவர்களால், உடலுக்கு தேவையான அளவு தூக்கத்தை பெற முடியாமல் இருப்பர். இந்த தூக்கமின்மையாலும் அவர்கள் மறந்து விடுகின்றனர்.
கருவில் குழந்தை இருக்கும் போது அதிகமாக மறதி ஏற்படுகின்றது என்பதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ? என்று பயப்பட வேண்டாம். இது சகஜமான ஒரு பிரச்சனை தான். இவை அனைத்துமே, பிரசவத்திற்குப் பின் போய்விடும்.
கர்ப்பத்தின் போது மறதியை சரிசெய்ய...
கர்ப்பத்தினால் ஏற்படும் மறதியைத் தடுக்க நிறைய வழிகள் இருக்கிறது. உதாரணமாக, மறதியைத் தவிர்க்க, செய்ய வேண்டியதை எழுதி வைத்துக் கொள்ளலாம். இதனால் மறந்திருப்பதை ஞாபகப்படுத்திவிடலாம்.
வேண்டுமென்றால் மொபைலில் அல்லது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருக்கும் ரிமைன்டரில் அலாரம் வைத்துவிட்டால், மறந்தது நினைவிற்கு வரும்.
பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் போது, வேலையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலையை வீட்டில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் எதையும் மறந்துவிட முடியாது. ஏனெனில் வேலை அதிகமாக இருந்தால் தானே, அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.
முக்கியமான ஒன்று போதுமான அளவு நன்கு தூங்கி எழுந்திருக்க வேண்டும். அதிலும் குறைந்தது 8-9 மணிநேரத் தூக்கமாவது வேண்டும். இதனால் அதிக மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது செய்து வாருங்கள். எதையும் மறக்காமல் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
