Latest Updates
-
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க..
பெண்களே! உங்க அடிவயிற்று கொழுப்பை கரைக்கணுமா? இதோ அதற்கான சில சக்திவாய்ந்த எளிய வழிகள்!
2023 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் வரப் போகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு, தொப்பையைக் குறைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும் ஒருசில சக்திவாய்ந்த இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது.
International Womens Day 2023: தற்போது தொப்பை பெரும்பாலானோரின் அழகை கெடுக்கும் மற்றும் ஆரோக்கியத்தை பாழாக்கும் ஒன்றாக உள்ளது. அதில் ஆண்களுக்கு தொப்பையானது மேல் வயிற்றில் இருந்து ஆரம்பிக்கும். ஆனால் பெண்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் தான் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். அதுவும் திருமணமானமாகி குழந்தை பிறந்த பிறகு தான், நிறைய பெண்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புக்கள் தேங்கி, அவர்களின் அழகை கெடுக்கிறது. பொதுவாக பிரசவத்திற்கு பின் சில பெண்களுக்கு வயிறு வீங்கிய நிலையில் இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

இருப்பினும், பிரசவத்திற்கு பின் ஒரு பெண்ணின் வயிறு பெரிதாக இருந்து, அதைக் குறைக்க முயற்சிக்காமல் இருந்தால், அது தொப்பையாக அப்படியே இருந்துவிடும். தற்போது தொப்பை தான் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே பிரசவத்திற்கு பின் நீங்கள் சிக்கென்று உங்கள் பழைய உடல் அழகை சீக்கிரம் பெற விரும்பினால், அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உடனே முயற்சிக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினம் வரப் போகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு, தொப்பையைக் குறைத்து, சிக்கென்ற உடலைப் பெற உதவும் ஒருசில சக்திவாய்ந்த இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

தாய்ப்பால் கொடுப்பது
பிரசவத்திற்கு பின் ஒரு பெண் தனது உடல் எடையைக் குறைக்க விரும்பினால், அதற்கு சிறந்த வழி தாய்ப்பால் கொடுப்பது தான். ஆம், தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைக்கு வேண்டிய பாலை உற்பத்தி செய்ய அதிகப்படியான கலோரிகள் உடலில் எரிக்கப்படும். இதன் விளைவாக அதிகரித்த உடல் எடையை எளிதில் குறைக்கலாம். பிரசவத்திற்கு பின் உடல் எடையைக் குறைக்க மிகச்சிறத்த வழி தாய்ப்பால் கொடுப்பது தான் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, தேன் சேர்த்து கலந்து குடித்து வருவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கொழுப்புக்களை எரிக்கவும் பெரிதும் உதவி புரியும். இந்த பானத்தை ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதன் விளைவாக கொழுப்புக்கள் வேகமாக குறையும்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் ஏராளமான செயலில் உள்ள பொருட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். முக்கியமாக க்ரீன் டீயில் உள்ள ஈஜிசிஜி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கின்றன. எனவே உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் க்ரீன் டீ மிகச்சிறந்த பானம்.

ஆப்பிள்
ஸ்நாக்ஸ் நேரத்தில் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆப்பிளை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பெக்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.

நீரேற்றம்
தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 லிட்டர் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நீரை எவ்வளவு அருந்துகிறோமோ, அந்த அளவில் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும். கூடுதலாக, உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களும் குறையத் தொடங்கும். எனவே தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தக்காளி
பிரசவத்திற்கு பின் சிக்கென்ற உடலைப் பெற உதவும் மற்றொரு அற்புதமான உணவுப் பொருள் தான் தக்காளி. ஏனெனில் இந்த தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் பீட்டா கரோட்டீன், கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. எனவே தினசரி உணவில் தக்காளியை சேர்த்து வாருங்கள்.

பூண்டு
அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவும் மற்றொரு அற்புதமான வழி, 2-4 பல் பச்சை பூண்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான். எலிகளின் மீது மேற்கொண்ட ஆய்வில், பூண்டு உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைப்பதோடு, கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை அதிகரிப்பது கண்டறியப்பட்டன. எனவே உடலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க விரும்பினால், காலையில் எழுந்ததும் பூண்டு பற்களை சாப்பிட்டதும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பட்டை நீர்
பட்டை உடல் கொழுப்பைக் கரைக்கும் அற்புதமான பொருளாகும். அந்த பட்டைத் தூளை 1/2 டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வடிகட்டி, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி காலை எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், விரைவில் நற்பலனைக் காணலாம்.

சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட ஆரோக்கியமான காய்கறி என்பதை அனைவரும் அறிவோம். இந்த சுரைக்காயை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து, தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, விரைவில் தட்டையான வயிற்றைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications