Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
45 வயதிலும் கவர்ச்சி குறையாமல் சிக்கென்று இருக்கும் ஷில்பா ஷெட்டி - எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா?
திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் ஃபிட்டாக, கவர்ச்சி குறையாமல் இருக்கும் பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவருக்கு 45 வயது என்று கூறினால் நம்புவீர்களா?
திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும் ஃபிட்டாக, கவர்ச்சி குறையாமல் இருக்கும் பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவருக்கு 45 வயது என்று கூறினால் நம்புவீர்களா? நிச்சயம் முடியாது. ஏனெனில் இவர் இந்த வயதிலும் தனது உடலமைப்பை அழகாக சிக்கென்று பராமரித்து வருகிறார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ஃபிட்னஸிற்கு பின் இருக்கும் ரகசியத்தை அறிய பலரும் விரும்புவார்கள். அதோடு இந்த நடிகை ஆசனங்கள் செய்வது போன்ற தனது பல போட்டோக்களை சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி வெளியிடுவதைக் காணலாம்.
மேலும் இவர் தான் உண்ணும் உணவுகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதும் உண்டு. குறிப்பாக தனது மகன் வியான் பிறந்த பிறகு ஷில்பா ஷெட்டியின் மாற்றம், அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு உந்துதலாக இருக்கிறது. அந்த அளவில் இந்த நடிகை தனது கர்ப்ப கால எடையை முழுவதுமாக குறைத்து, தனது பழைய உடலமைப்பைப் பெற்றுள்ளார்.

கர்ப்பம்
கர்ப்பம் என்பது ஒவ்வொரு தாய்க்கும் ஒரு அழகான வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது உடலில் கொழுப்பை சேர்த்துவிடுவதோடு, அதைக் கரைக்க பல சிரமப்பட வேண்டியிருக்கிறது. சில பெண்களுக்கு அந்த கொழுப்பை கரைப்பதே முடியாத ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் சுமார் 15-30 கிலோ வரை எடை அதிகரிக்கிறார்கள். அதில் நடிகைகள் மட்டும் விதிவிலக்கல்ல. நிறைய பாலிவுட் நடிகைகள் பிரசவத்திற்கு பின் உடல் பருமனாகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க தங்களை அர்ப்பணிக்கிறார்கள். அதில் ஷில்பா ஷெட்டியும் ஒருவராவார்.

ஷில்பாவின் கர்ப்ப காலம்
ஷில்பா ஷெட்டி கர்ப்ப காலத்தில் 31 கிலோ எடை வரை அதிகரித்திருந்தார். இதற்கு அவர் கர்ப்ப காலத்தில் பால், நெய் மற்றும் பிற கொழுப்பு உணவுகளை உட்கொண்டது தான் காரணம். பிரசவத்திற்கு பின் உடல் எடை குறையாததைப் பற்றி அவர் மிகுந்த வருத்தம் கொண்டார். ஆனால் கடுமையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான டயட் திட்டத்தை மனம் தளராமல் பின்பற்றினார். மேலும் இவர் தனது எடை இழப்பு குறித்து உலகத்துடனும் பகிர்ந்து கொண்டார். அதை ஊட்டச்சத்து மிற்றும் உடற்பயிற்சி நிபுணரான லுக் கௌடின்ஹோ உடன் இணைந்து "தி கிரேட் இந்தியன் டயட்" என்ற புத்தகத்தை எழுதினார்.
இப்போது பிரசவத்திற்கு பின் ஃபிட்டாக விரும்பும் தாய்மார்களுக்காக, ஷில்பா ஷெட்டியின் ஃபிட்னஸ் மற்றும் டயட் ரகசியங்களைக் காண்போம்.

காலை உணவு
ஷில்பா ஷெட்டி காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பாராம். அதைத் தொடர்ந்து ஒரு தட்டு எலுமிச்சை சாறு பிழிந்த பப்பாளியை சாப்பிடுவாராம். அதன் பின் ஒரு கப் பால் டீ குடிப்பார். காலை உணவாக கஞ்சி அல்லது 2 முட்டை சாப்பிடுவாராம்.

மதிய உணவு
ஷில்பா மதிய வேளையில் 2 திணை ரொட்டி அல்லது ஒரு சிறிய பௌல் சாதம் மற்றும் தால், மீன் அல்லது காய்கறிகளை சாப்பிடுவார். முக்கியமாக மதிய உணவிற்கு பின் ஒரு துண்ட வெல்லத்தை சாப்பிடுவாராம்.

ஸ்நாக்ஸ்
ஸ்நாக்ஸ் வேளையில், அதாவது மதிய உணவு முடிந்து 2 மணிநேரம் கழித்து ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட மோர் குடிப்பாராம். மாலையில் வெல்லம் சேர்த்த டீ குடிப்பாராம்.

இரவு உணவு
இரவு நேரத்தில் காய்கறிகள், வான்கோழி துண்டு அல்லது சால்மன் டீ நிரப்பப்பட்ட லெட்யூஸ் சாலட் சாப்பிடுவாராம். சில சமயங்களில் பன்னீர் அல்லது வறுத்த காய்கறிகளை மற்றும் புரோட்டீனுக்காக சூப் குடிப்பாராம்.

பிரசவத்திற்கு பின்னான உடற்பயிற்சி
ஷில்பா ஷெட்டி பிரசவத்திற்கு பின் தனது உடல் எடையைக் குறைக்க வாரத்திற்கு 5 நாட்கள் உடற்பயிற்சியை தவறாமல் செய்வாராம். அதில் 2 நாட்கள் யோகா, 2 நாட்கள் உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மற்றும் 1 நாள் கார்டியோ பயிற்சியையும் மேற்கொள்வாராம். அதோடு தினமும் 10 நிமிடம் தியானம் செய்வாராம். யோகாவின் இறுதியில் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுவதாக ஷில்பா ஷெட்டி நம்புகிறார்.

ஷில்பா ஷெட்டியிடம் இருந்து வேறு சில டிப்ஸ்...
* ஷில்பா ஷெட்டி வாரத்திற்கு 6 நாட்கள் தவறாமல் டயட்டை மேற்கொள்வதில் உறுதியாக இருந்தார்.
* பிரசவத்திற்கு பின் ஒரு சீரான உணவில் கவனம் செலுத்தினார்.
* அவரது தினசரி கலோரி உட்கொள்ளல் 1800 ஆகும்.
* 8 மணிக்கு மேல் இரவு உணவை உண்ணமாட்டார் மற்றும் இவரது இரவு உணவானது படுக்கைக்கு செல்வதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பே முடித்துவிடுவார்.
* உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தினமும் 10 டம்ளர் நீரை தவறாமல் குடிப்பாராம்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளான வேர்க்கடலை வெண்ணெய், பாதாம் பால், கடுகு மற்றும் ஆளி விதைகளை உட்கொள்ள பரிந்துரைக்கிறார்.
* வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தனக்கு விருப்பமான உணவுகளை உண்பாராம்.



Click it and Unblock the Notifications