Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குடும்ப கட்டுப்பாடு செய்தவுடன் உடல் குண்டாவது ஏன்?

தற்போது உடல் எடை உயர்வு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் வந்ததும், உணவுப் பழக்கமும் காரணங்களாக இருந்தாலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் முக்கியக் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்
மருத்துவம்
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் இந்தியாவில் பெண்களுக்குத்தான் முதலிடம். 100க்கு 1 என்ற விகிதத்தில் கூட ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வருவதில்லை. இது ஒருபுறமிருக்க, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஹார்மோன் சுரப்பில் மாற்றம்
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது. பெரும்பாலான பெண்கள் லேசான மனஅழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
குடும்பப் பெண்கள் பலரும், குழந்தையும், கணவரும் மீதம் வைத்த உணவையும், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் இருப்பதும், டிவி பார்த்துக் கொண்டு நொறுக்குத் தீனி சாப்பிடுவதும், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் என்று சொல்லி 2 அல்லது 3 மணி நேரங்கள் தூங்குவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.
நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சேராமல் தடுப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த ஹார்மோன் சரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications