Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பிள்ளைப் பேறுக்கும், பிரசவத்திற்குப் பின்பும் என்ன செய்யலாம்?

பெண்களுக்கு கரு தரிக்க நாட்கள் ஆகும் பட்சத்தில் கருநொச்சி மூலிகை கசாயம் கண்கண்ட மருந்தாக உள்ளது. கருநொச்சி சாறு, கரிசாலை சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சிற்றாமணக்கு எண்ணெய், பசு நெய் போன்றவற்றை வகைக்கு 100 மில்லியும், நெருஞ்சில் விதை, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை வகைக்கு 6 கிராமுக்கு எடுத்து இடித்து கலந்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இவற்றை மாதவிலக்கான 3 நாட்கள் 16 மில்லி அளவு குடித்து வர மலட்டுத் தன்மை நீங்கி கர்ப்பம் உண்டாகும்.
கருப்பையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நாம் ஆங்கில மருத்துவத்தைத் தான் நாடுகிறோம். ஆனால் இயற்கையிலேயே பல்வேறு மருந்துகள் உள்ளன. அவற்றை நாம் முறையாக உட்கொண்டு வந்தால் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம்.
பெண்கள் பலரும் மாதவிடாய் சமயத்தில் அதிக சிரமப் படுகின்றனர். வயிற்று வலியால் அவதிப்படுகின்றனர். இதைத் தவிர்க்க பனை வெல்லத்துடன் பொரித்த பெருங்காயம் சேர்த்து மாதவிடாய் கண்ட 5 நாட்களுக்கு சாப்பிட்டு வர மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறையும்.
பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை பெற்ற பெண்களுக்கு உடல் வலி அதிகமாக இருக்கும்.உடல் வலி தீருவதற்கு நொச்சி இலையை நீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும்.
பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் அழுக்கை வெளிப்படுத்த பெருங்காயத்தை பொரித்து வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் உட்கொள்ள கொடுக்கலாம். இவ்வாறு தினமும் உட்கொண்டு வந்தால் பிள்ளைப் பெற்றப் பெண்களுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் வாய்வு தொந்தரவு போன்றவை ஏற்படாது.
வெள்ளைப்பூண்டினை வதக்கி அதனுடன் பனங்கருப்பட்டியை சேர்த்து சாப்பிட வயிற்றில் உள்ள தேவையற்ற அழுக்குகள் வெளியேறும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். ஒருவாரம் தொடர்ந்து இதனை சாப்பிட வயிற்றுப் பொருமல் குணமாகும்.
வெள்ளைப்பூண்டு, பனங்கருப்பட்டி, நல்லெண்ணெய், ஆகியவை சேர்த்த மருந்து பிரசவம் ஆன பெண்களுக்கு கண் கண்ட மருந்தாக உள்ளது.
சித்தரத்தை, சதகுப்பை, திப்பிலி, தேர்சாவரம், வால்மிளகு, வெள்ளைமிளகு, சுக்கு, கடுகு, பெருங்காயம், ஆகியவை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவும்.
வெள்ளைப்பூண்டினை நல்லெண்ணை ஊற்றி கூழ் போல வதக்கவும். இதனுடன் வெல்லத்தை பொடி செய்து போடவும். நன்கு கரைந்த உடன் இடித்து வைத்துள்ள மருந்து பொடிகளை சேர்த்து நன்கு காய்ச்சவும். லேகியம் போல வந்த உடன் ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இது தினசரி காலையில், இரவில் சாப்பிடலாம். உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறும். உடம்பு வலி ஏற்படாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications