Latest Updates
-
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
உங்க குழந்தை அனைத்தையும் கஷ்டமா ஃபீல் பண்றாங்களா? அப்ப இத செய்யுங்க..
Parenting Tips In Tamil: எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளது. எதை எடுத்தாலும் கஷ்டமாக உணருவார்கள். தங்களைப் பற்றி எதிர்மறையாக உணருவார்கள் மற்றும் பேசுவார்கள். படிப்பதாக இருக்கட்டும், ஒரு படத்தை வரைவதாக இருக்கட்டும் எப்பொழுதும் கடினமாக உணருவார்கள். குழந்தைகள் ஏன் இப்படி செய்கிறார்கள்.
சில குழந்தைகள் தங்கள் மேல் கவனம் வருவதற்காக இதைச் செய்கின்றனர். அதே மாதிரி இப்படி கடினமாக உணரும் குழந்தைகள் மற்ற புதிய விஷயங்கள் மற்றும் கடினமான விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். எதிர்மறையான பேச்சுகள் உங்கள் குழந்தைகளிடம் அதிகமாக இருந்தால் அதைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்.

உங்கள் குழந்தை வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யாமல் இருத்தல், பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் இருத்தல், உங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருந்தால் அதை நீங்கள் கவனிக்க வேண்டும். குழந்தை எல்லாத்தையும் கஷ்டமாக பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சுய பேச்சு என்றால் என்ன?
சில குழந்தைகளின் சுய பேச்சு என்பது எப்போதுமே எதிர்மறையாகவே இருக்கும். காரணம் தங்களைத் தானே தாழ்த்திப் பேசுவது, எல்லா விஷயங்களையும் கடினமாக உணர்வது போன்ற விஷயங்களை செய்து வருவார்கள். இந்த மாதிரியான நிலையில் உங்கள் குழந்தைகள் இருந்தால் கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றி அவர்களை சரி செய்ய வேண்டும்.
இலக்குகளை கடினமாக உணர்தல்
சில குழந்தைகள் தங்கள் இலக்குகளை கடினமாக உணர்தல் அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி எதிர்மறை பேச்சுகளை உண்டாக்குகிறது. இதனாலயே அவர்கள் இலக்குகளை அடைவதில் சிக்கல்களை சந்திக்கின்றனர். தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அவர்களுக்கு தெளிவும் இருப்பதில்லை. எனவே பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களின் எதிர்மறை உணர்வுகளை மாற்றி நேர்மறை எண்ணங்களை விதைக்க முற்பட வேண்டும்.
பள்ளிகளில் சண்டை போடுதல்
சில தேர்வில் தோல்வியடைவது, குண்டாக இருப்பது போன்ற விஷயங்களால் குழந்தைகள் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள நேரிடலாம். இதுவே சமூகத்தில் அவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி பள்ளிகளில் சண்டைக்கு வழி வகுக்க வாய்ப்பு உள்ளது.
கொடுமைப்படுத்தப்படுவது
பள்ளிகளில் ஏற்படும் கேலி கிண்டல்கள் போன்றவை குழந்தைகளுக்கு எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனாலும் குழந்தைகள் தங்கள் அழகைப் பற்றி சிந்திப்பதும், எதைச் செய்வதாக இருந்தாலும் கஷ்டமாக உணருவதாக இருப்பார்கள். எனவே பள்ளிகளில் ஏற்படும் கேலி கிண்டல்களை எப்படி தவிர்க்க வேண்டும் என உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம்.
எப்போது கவலைப்பட வேண்டும்?
* சுய பேச்சு இயற்கையானது என்றால் கூட எதிர்மறை சுய பேச்சை கவனிக்க வேண்டும்.
* உங்கள் குழந்தைகளிடம் எதிர்மறை சுய பேச்சு நிலையானதாகவும், கடினமானதாகவும் இருந்தால் கவனிக்க வேண்டும்.
* உங்கள் குழந்தைகளின் உணவு முறை மற்றும் உறங்கும் முறை மாற்றம்
* அடிக்கடி உடம்பு சரியில்லை என்று கூறுவது
* மனச்சோர்வு அதிகரித்தல் போன்ற விஷயங்கள் தென்பட்டால் உடனே கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளிடம் கேட்க வேண்டும்
ஒரு குழந்தை எதிர்மறை உணர்வுகளுடன் பேசும் போது அவர்களை கவனிக்க வேண்டும். கவலைக்கு பின்னால் இருக்கும் காரணங்களை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
யதார்த்தமான அணுகுமுறையை குழந்தைகளுக்கு கொடுங்கள். உங்கள் குழந்தைகள் புதிய பள்ளியில் நண்பர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை என்றால் நாட்கள் போகக் போக நிறைய நண்பர்கள் உன்னிடம் பேசுவார்கள் . உன்னிடம் பழகுவார்கள் போன்ற விஷயங்களை எடுத்துக் கூறலாம்.
இணைந்து செயல்படுங்கள்
குழந்தைகளுக்கு ஒரு விஷயம் கஷ்டமாக இருந்தால் அவர்களுடன் நீங்கள் இணைந்து செயல்படலாம். அவர்களுக்கு உறுதுணையாக நீங்கள் நிற்பீர்கள் என்பதை நீங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களின் பயணம் முழுவதும் அவர்களுடன் இருந்து உற்சாகம் கொடுங்கள்.
ஊக்கமளிக்கும் மொழிகளை பயன்படுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் கடினமாக உணரும் போது அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு பதிலாக ஊக்கமளிக்கும் மொழிகளை எடுத்துக் கூறுங்கள். நீங்கள் அன்பாகவும் நேர்மறையாகவும் பேசும் போது உங்கள் குழந்தையும் அன்பாகவும் நேர்மறையாகவும் பேசும். அவர்களின் விரக்தியை சமாளிக்கும் சகிப்புத்தன்மையை வளர்க்க வேண்டும். உங்கள் குழந்தை தனது இலக்கை தவறவிட்டாலோ அல்லது ஒரு வேலையைத் தவறவிட்டாலோ அல்லது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் போனாலோ அவர்களுக்கு ஊக்கமளிக்கும் மொழிகளை வழங்கலாம்.



Click it and Unblock the Notifications