Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
உங்க குழந்தைங்க இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுறீங்களா? அப்ப அவங்களுக்கு இந்த ஆபத்து கண்டிப்பா வரும்!
உடல் பருமன் என்பது ஒரு நபருக்கு அதிக எடை அல்லது உடல் கொழுப்பைக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவ நிலை என வரையறுக்கப்படுகிறது, அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
உடல் பருமன் என்பது ஒரு நபருக்கு அதிக எடை அல்லது உடல் கொழுப்பைக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவ நிலை என வரையறுக்கப்படுகிறது, அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 30 க்கு மேல் இருப்பது, ஒரு நபர் பருமனாக இருப்பதைக் குறிக்கிறது. உடல் பருமன் என்பது ஒரு தீவிரமான நிலை, மேலும் அதைக் கண்டறியும் குழந்தைகள் நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற பல நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சினைகளுக்கான ஆபத்தில் உள்ளனர்.

அதிர்ச்சியளிக்கும் வகையில், இப்போது குழந்தைகளும் உடல் பருமனால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவு முறையுமே முதன்மைக் காரணாமாக இருக்கிறது. இந்த பதிவில் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணாமாக இருக்கும் முக்கிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குளிர் பானங்கள்
குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. குளிர்பானங்களில் நிறைய சர்க்கரை இருப்பது அனைவரும் அறிந்ததுதான், ஆனால் இந்த பானங்களில் உள்ள கலோரிகள் திரவ வடிவில் உள்ளன, மேலும் திரவ கலோரிகள் உடலால் விரைவாகவும் எளிதாகவும் உறிஞ்சப்படுகின்றன. இது எடை அதிகரிப்பதற்கான அதிக ஆபத்தில் உங்களை வைக்கிறது, மேலும் இதன் வழக்கமான நுகர்வு உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கடைகளில் விற்கப்படும் சுவையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான், ஆனால் சுவையால் ஏமாறாதீர்கள். அவற்றில் டிரான்ஸ் கொழுப்புகள், அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப், சர்க்கரை மற்றும் நிறைய கலோரிகள் போன்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் பல ஆபத்தான பொருட்கள் உள்ளன. அவை சிறிதளவு ஊட்டச்சத்துக்களைக் கொண்டிதாலும், அவை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமற்றவை மற்றும் உடல் பருமனை அதிகரிக்கும்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள்
தீங்கற்றதாகத் தோன்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை, தொடர்ந்து உட்கொண்டால், அது குழந்தைகளின் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான தொகுக்கப்பட்ட உணவுகள் ஆழமாக வறுக்கப்பட்டவை மற்றும் அவை எண்ணெய் கலோரி எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் பொதுவாக கணிசமான ஊட்டச்சத்து இல்லாதது மற்றும் கலோரிகளால் நிரப்பப்படுகிறது.

உறையவைக்கப்பட்ட உணவுகள்
சமைப்பதற்கு தயாராக இருக்கும் உணவுகள் பேக் செய்யப்படும் முன் நிறைய செயலாக்கத்திற்கு உட்படுகின்றன, இது அவற்றின் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீக்குகிறது. மேலும் அவற்றில், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன, மேலும் ஆரோக்கியமற்ற சில வேதிப்பொருட்கள் அவற்றின் ஆயுளை அதிகரிக்க சேர்க்கப்படுகின்றன. இந்த காரணிகள் அனைத்தும் எடை அதிகரிப்பில் முடிவடைகின்றன, மேலும் உறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

துரித உணவுகள்
பர்கர், பீட்சா மற்றும் பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளை விரும்பாத குழந்தைகளே இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை டிரான்ஸ் கொழுப்புகள், உப்பு, சர்க்கரை மற்றும் கலோரிகள் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்களால் நிரம்பியுள்ளன, இவை அனைத்தும் கொழுப்பு திரட்சிக்கு பங்களிக்கின்றன. குழந்தைகள் இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும்போது அவர்கள் விரைவில் உடல் பருமனுக்கு ஆளாவார்கள்.

மிட்டாய்கள்
மிட்டாய்களின் சுவை மற்றும் தோற்றம் குழந்தைகளை ஈர்க்கிறது, அவர்களில் பலர் அதனை சாப்பிட விரும்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, அதை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்தும். மிட்டாய்களில் சுவைக்காக செயற்கை சர்க்கரைகள் ஏற்றப்படுகின்றன, மேலும் இந்த சர்க்கரைகள் வெற்று கலோரிகளால் ஏற்றப்படுகின்றன, இது ஊட்டச்சத்து இல்லாதது மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

காலை உணவு தானியங்கள்
தானியங்கள் காலை உணவுக்கு ஆரோக்கியமான தேர்வு என்று அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகிறது, ஆனால் அது உண்மையல்ல. அவை நல்ல சுவையூட்டுவதற்காக அதிகப்படியான சர்க்கரையால் நிரப்பப்படுகின்றன, அதனால்தான் பல குழந்தைகள் காலை உணவாக தானியங்களை விரும்புகிறார்கள். காலை உணவு தானியங்கள் எடையை அதிகரிப்பதற்கான செயல்முறையாகும், மேலும் அதை அதிகமாக சாப்பிடுவது சிறு வயதிலேயே உடல் பருமனை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
