குழந்தைகளுக்கான தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

குழந்தைகளை அதிகம் தாக்கி, அவர்களின் உயிரைப் பறிக்கும் தட்டம்மை ரூபெல்லாவை ஒழிக்க, டெல்லி அரசு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பிரச்சாரத்தை நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.

குழந்தைகளை அதிகம் தாக்கி, அவர்களின் உயிரைப் பறிக்கும் தட்டம்மை ரூபெல்லாவை ஒழிக்க, டெல்லி அரசு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பிரச்சாரத்தை நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. இதுவரை இந்திய அரசானது இந்த தட்டம்மை ரூபெல்லாவை ஒழிக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் இந்த தட்டம்மை ரூபெல்லாவை, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒழிக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டில் இந்த தட்டம்மை ரூபெல்லாவை ஒழிப்பதற்காக தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

MR Vaccination Campaign Starts From Today In Delhi: All You Need To Know Measles And Rubella In Tamil

இந்த தட்டம்மை ரூபெல்லாவை ஒழிப்பது ஒன்றும் இந்தியாவின் புதிய நோக்கமல்ல. ஏற்கனவே 2015 ம் ஆண்டில் இதற்கு முடிவு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பல காரணங்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. மேலும் காலம் தான் நீட்டிக்கப்பட்டது. அதன் பின் 2019 ஆம் ஆண்டு இந்த இரண்டு கொடிய நோய்களை ஒழிக்க முயற்சி எடுத்தது. ஆனால் கொரோனாவால் அதுவும் தடைப்பட்டது. இப்போது தட்டம்மை ரூபெல்லா என்றால் என்ன, அவற்றின் அறிகுறிகள் என்ன போன்ற தகவல்கள் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தட்டம்மை என்றால் என்ன?

தட்டம்மை என்றால் என்ன?

தட்டம்மை வைரஸானது உலகிலேயே மிகவும் வேகமாக தொற்றும் மனித வைரஸ்களில் ஒன்றாகும். இது குழந்தைகளை அதிகம் தாக்கும் ஒரு வைரஸாகும். ஒவ்வொரு ஆண்டும் 1,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் தட்டம்மையில் இறக்கிறார்கள். ஆனால் இந்த தட்டம்மையை தடுப்பூசி மூலம் தடுக்கலாம். அதுவும் தட்டம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு தவறாமல் போடுவதால், தட்டம்மையால் ஏற்படும் இறப்பைக் குறைக்கலாம். இந்த தட்டம்மையானது இருமல், தும்மல் அல்லது பேசும் போது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.

தட்டம்மையின் அறிகுறிகள்

தட்டம்மையின் அறிகுறிகள்

தட்டம்மையின் அறிகுறிகளானது வைரஸ் தாக்கிய 10-14 நாட்களுக்கு பின் வெளிப்படும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

* காய்ச்சல்

* வறட்டு இருமல்

* மூக்கு ஒழுகல்

* தொண்டை புண்

* கண்கள் சிவந்திருப்பது

* சருமத்தில் சிவப்பு நிற புள்ளிகள்

ரூபெல்லா என்றால் என்ன?

ரூபெல்லா என்றால் என்ன?

ரூபெல்லா என்பது ஒரு தொற்று வைரஸ் ஆகும். இது சருமத்தில் தனித்துவமான சிவப்பு நிற சொறியை உண்டாக்கும். இதை ஜெர்மன் தட்டம்மை என்றும் அழைப்பார்கள். இந்த தொற்று பெரும்பாலும் லேசான அறிகுறிகள் அல்லது எவ்வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் போது, அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு கடுமையான பிரச்சனையை ஏற்படுத்தும்.

ரூபெல்லா தட்டம்மை போன்றது அல்ல. ஆனால் இரண்டும் சருமத்தில் சிவப்பு நிற சொறியை ஏற்படுத்தும். ரூபெல்லா தட்டம்மையில் இருந்து வேறுபட்டது மற்றும் இது தட்டம்மை போன்று கடுமையானது அல்ல. மேலும் ரூபெல்லா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல் அல்லது தும்மலின் போது பரவுகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்களிடம் இருந்து வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு இரத்தத்தின் மூலம் பரவலாம்.

ரூபெல்லாவின் அறிகுறிகள்

ரூபெல்லாவின் அறிகுறிகள்

ரூபெல்லாவின் அறிகுறிகளை கவனிப்பது கடினமாக இருக்கும். பெரும்பாலும் இதன் அறிகுறிகளானது தொற்று ஏற்பட்ட 2-3 வாரங்களுக்குள் தோன்றும். மேலும் இந்த அறிகுறிகள் 1-5 நாட்கள் வரை இருக்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

* மிதமான காய்ச்சல் அதாவது 102 F

* தலைவலி

* மூக்கு ஒழுகல் அல்லது மூக்கடைப்பு

* கண்களின் அரிப்பு, கண் சிவத்தல்

* கழுத்து மற்றும் காதுகளுக்கு பின் லேசான வீக்கம் இருப்பது

* உடல் முழுவதும் சிவப்பு நிற சொறி

* மூட்டு வலி

தட்டம்மை ரூபெல்லாவை தடுக்கும் தடுப்பூசி

தட்டம்மை ரூபெல்லாவை தடுக்கும் தடுப்பூசி

தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளானது எம்எம்ஆர் (MMR) என்னும் தட்டம்மை-மம்ப்ஸ்-ரூபெல்லா ஒருங்கிணைந்த தடுப்பூசியாக போடப்படுகிறது. இந்த எம்எம்ஆர் தடுப்பூசி முதலில் 12 முதல் 15 மாதங்களுக்கு இடையே போடப்படுகிறது. அதன் பின் மீண்டும் 4 முதல் 6 வயது குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இந்த இரண்டு டோஸ் தடுப்பூசிகளை தவறாமல் குழந்தைகளுக்கு போடுவதன் மூலம், அவர்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் தட்டம்மை தடுப்பூசி 30 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களை தடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஆனால் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அதுவும் மகாராஷ்டிராவில் தட்டம்மை தொற்றானது 15 குழந்தைகளின் உயிரைப் பறித்ததோடு, நூற்றுக்கணக்கானோர் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் 2023-ல் இந்த இரண்டு தொற்றுகளையும் முற்றிலும் ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வெற்றியடைய, நீங்கள் உங்கள் 5 வயதிற்குட்ட குழந்தைகளுக்கு MMR தடுப்பூசியை போட தவறியிருந்தால், உடனே மருத்துவரை அணுகி, உங்கள் குழந்தைகளுக்கு உடனே போடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion