For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழக்கம் இருக்கும் குழந்தைகள் நோயில் விழும் வாய்ப்பு ரொம்ப குறைவாம்...உங்க குழந்தைக்கும் பழக்கப்படுத்துங்க

|

உங்கள் குழந்தைக்கு எப்பொழுதும் காய்ச்சல், சளி அல்லது இருமல் இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் அதைப் பற்றி ஆழமாகச் சென்று அதை அறிவியல்ரீதியாக அணுக முயற்சித்தால், அது கொஞ்சம் தந்திரமாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். உண்மையில் இது உங்கள் குழந்தை எவ்வளவு நன்றாகப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றியது.

உங்கள் பிள்ளையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கவும் உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சில ஆரோக்கியமான, தினசரி பழக்கங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கை சுகாதாரம் அவசியம்

கை சுகாதாரம் அவசியம்

தொற்றுநோய்களின் பரவலைத் தடுக்க கைகளை கழுவுதல் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் விளையாடும்போது, பொம்மைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, பொருட்களைத் தொடும்போது ஏற்படும் கிருமிகள் மற்றும் வைரஸ்களை அகற்ற கை கழுவுதல் ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக உங்கள் சுற்றுப்புறம், பள்ளிகள் அல்லது உங்கள் வீட்டில் கூட வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், உங்கள் குழந்தைகள் கை கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முகத்தை தொடாமல் இருப்பது

முகத்தை தொடாமல் இருப்பது

நோய்வாய்ப்பட்ட நபரால் இருமல் அல்லது தும்மினால் காற்றில் பரவும் துளிகளால் பல வைரஸ்கள் பயணித்து பரவுகின்றன. இது மூக்கு, கண்கள் மற்றும் வாய் வழியாக மற்றொரு நபரின் உடலில் நுழைகிறது. முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது ஏன் அவசியம் என்பதை உங்கள் குழந்தைக்குச் சொல்வது முக்கியம். பெரியவர்கள் கூட முகத்தைத் தொடாமல் இருப்பது நல்லது.

போதுமான தூக்கம்

போதுமான தூக்கம்

தூக்க நடைமுறைகள் பொதுவாக அனைவருக்கும் அவசியம், குறிப்பாக குழந்தைகளுக்கு. தூக்கமின்மை பெரும்பாலும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடையது. தரமான தூக்கம் இல்லாதவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது குழந்தைகளுக்கும் பொருந்தும். குழந்தைகள் போதுமான அளவு தூங்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுறுசுறுப்பாக இருப்பது

சுறுசுறுப்பாக இருப்பது

குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சுறுசுறுப்பாக இருப்பது முக்கியமானது. உடற்பயிற்சி செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதாக அறியப்படுகிறது, அதாவது உடலில் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகள் பெரியவர்களைப் போல தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியதில்லை என்றாலும், நாள் முழுவதும் அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

சமச்சீரான உணவு

சமச்சீரான உணவு

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். உங்கள் குழந்தையின் உணவுத் தட்டில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி, டி மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க முயற்சிக்கவும், இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நல்ல செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு எதிராக உங்கள் பிள்ளைக்கு தடுப்பூசி போடுவதன் நன்மைகளை மறந்துவிடாதீர்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களை நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் தடுப்பூசியும் ஒன்றாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் உடல் வெளிநாட்டு நோய்க்கிருமிகளுடன் போராட உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Habits to Keep Kids From Getting Sick in Tamil

Check out the healthy habits of kids who rarely get sick.
Desktop Bottom Promotion