For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களே! உங்க குழந்தைக்கு இருமல் இருக்கா? அப்ப இந்த 3 பழங்களை அவங்களுக்கு கொடுக்கவே கூடாதாம்!

தொடர்ச்சியான எரிச்சலூட்டும் இருமலில் இருந்து விடுபட, 15-20 நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் லிச்சி ஆகிய பழங்களை உங்கள் குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்

|

குளிர்காலம் என்றாலே, காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்தொற்றுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஆதலால், குளிர்காலத்தில் நோய்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும் உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்கு என்னும்போது இன்னும் கூடுதல் கவனிப்பு தேவைப்படும். குளிர்கால மாதங்கள் குளிர்ந்த காற்றுக்கு பெயர் பெற்றவை. இருப்பினும், இந்த பருவத்தில் வளரும் பல நோய்களுக்கும் இது பிரபலமாக இருக்கும். இந்த பருவத்தில் குழந்தைகள் தொடர்ந்து சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படலாம். குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் வரும் தொற்றுநோய்களால் பெற்றோர்கள் தொடர்ந்து மிகுந்த அழுத்தத்தின் கீழ் உணர்கிறார்கள்.

don-t-feed-these-three-fruits-to-your-child-if-she-has-cough-in-tamil

காய்ச்சல் போய்விட்டது என்று உணரும்போது, மற்ற ஒவ்வாமை அறிகுறிகளுடன் இருமல் மீண்டும் தோன்றலாம். இருமல் உங்கள் குழந்தையின் இயல்பான நாளை முற்றிலும் பாதிக்கும். அவர்களை மிகுந்த சோர்வாக உணர வைக்கும். இந்த நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதைத் தவிர்க்க வேண்டிய மூன்று பழங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் லிச்சி

ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் லிச்சி

தொடர்ச்சியான எரிச்சலூட்டும் இருமலில் இருந்து விடுபட, 15-20 நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் லிச்சி ஆகிய பழங்களை உங்கள் குழந்தைக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உங்கள் குழந்தை இருமலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, இவற்றை சாப்பிட கொடுக்க வேண்டாம்.

ஏன் சாப்பிடக்கூடாது?

ஏன் சாப்பிடக்கூடாது?

குளிர்காலத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, அதிக காய்ச்சல், டான்சில்லிடிஸ் மற்றும் காது தொற்று ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைக்கு சில நேரங்களில் இரும்பல் இடைவிடாதது மற்றும் தொடர்ச்சியாக இருக்கலாம். ஸ்ட்ராபெர்ரி ஹிஸ்டமைனை வெளியிடுகிறது, இது இருமலை தூண்டுகிறது. ஏற்கனவே இருக்கும் இருமலை மோசமாக்குகிறது. திராட்சை மற்றும் லிச்சி பழங்களில் இயற்கையான சர்க்கரை அதிகமாக உள்ளது. பாக்டீரியா வளர இது ஒரு நல்ல வழியாக இருக்கும். ஆதலால், இந்த மூன்று பழங்களையும் உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பெற்றோர்கள் என்ன கவனிக்க வேண்டும்?

பெற்றோர்கள் என்ன கவனிக்க வேண்டும்?

அதிகப்படியான நிறமுடைய, செயற்கை இனிப்பு, செயற்கை நிறமுடைய அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்குமாறு குழந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குளிர்காலம் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை பாதித்து, பாக்டீரியாவை வளரச் செய்கிறது, அதே நேரத்தில் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதை அதிகரிக்கும் வகையில், உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை நீங்கள் கொடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஐஸ்கிரீம், சாக்லேட்கள், மிட்டாய்கள், பேஸ்ட்ரிகள், டோனட்ஸ், கேக், ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, திராட்சை போன்ற உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ச்சியான எதையும் கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடாமல் தவிர்க்கும்போது, உங்கள் குழந்தையின் இருமல் சங்கிலியை நீங்கள் உடைக்கலாம். விடாப்பிடியாகவும், மோசமாகவும் இருக்கும் இருமலை தவிர்க்க ஆரோக்கியமான பானங்களை குடிக்க கொடுக்கலாம்.

ஆபத்தை குறைக்க செய்யக்கூடிய விஷயங்கள்

ஆபத்தை குறைக்க செய்யக்கூடிய விஷயங்கள்

சுத்தமான ஆரோக்கியமான இடங்களில் உங்கள் குழந்தையை இருக்க வையுங்கள். அதைவிடுத்து, குழந்தைகளை தூசி நிறைந்த இடங்கள், பெயிண்ட் வேலை செய்யும் இடங்கள், கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் போன்ற இடங்களுக்கு செல்ல விடாமல் தடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் இடங்களிலிருந்து அவர்களை விலகி இருக்க வையுங்கள். இது உங்கள் குழந்தையின் இருமலை குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Don’t feed these three fruits to your child if she has cough in tamil

Here we are talking about the Don’t feed these three fruits to your child if she has cough in tamil
Story first published: Friday, January 27, 2023, 18:29 [IST]
Desktop Bottom Promotion