Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
ஒரு தந்தை தன் மகனுக்கு கட்டாயம் கற்றுத் தர வேண்டியவைகள்!!!
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
கருவுற்றவுடனேயே ஒரு பெண் தாயாகிவிடுகிறாள். அதே நேரம் ஒரு ஆண் தன் குழந்தையை சுமக்கும் போது தான் தந்தையாகிறான் என சொல்லப்படுவதுண்டு. தாயின் இந்த பிணைப்பு தந்தை வரை நீளுவதில்லை. அதே நேரம் அந்த தந்தை இவ்வுலகிற்கு வருகை தரவிருக்கும் தன் குழந்தைக்கு எவ்வாறு வாழ வழிசெய்வது என்பதை சிந்திக்கத் துவங்கிவிடுவான்.
அது பெண்ணோ அல்லது ஆண் குழந்தையோ, தன் கையினால் குழந்தையை தூக்கும் பொழுது அதை தன்னுடைய அங்கமாகவே நினைத்து மகிழ்வார். ஒரு தந்தை தன் மகன் மற்றும் மகளிடம் ஒரு வித்தியாசமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வார்.
ஏன், நீங்களும் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்து இறுதிவரை அவருடனேயே வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். இதை நீங்களும் செய்ய வேண்டுமென்றால் உங்களின் ஒரு பகுதியையே நீங்கள் உங்கள் மகனுக்காக தியாகம் செய்ய வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? ஒரு உண்மையான மனிதனாக உங்கள் மகன் வளர்ந்து நிற்க பத்து குறிப்புக்களை நீங்கள் அவனுக்குத் தர வேண்டியது அவசியம். எனவே என்ன கற்றுத் தர வேண்டும் என்பதற்கு பல்வேறு விடைகள் உள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானது ஒரு உண்மையான மனிதனாக உருவெடுப்பது.
நீங்கள் ஒரு புதிய தந்தையாக தன் மகனுக்குப் புகட்டும் அறிவாக இந்த 10 குறிப்புக்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்:

பெண்களை மதிக்க வேண்டும்
உங்கள் மகனுக்குக் குழந்தையிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கிய பாடம் இது. உங்கள் மனைவியிடம் குழந்தையின் எதிரிலேயே நீங்கள் தவறாக நடக்க முயன்றால் அவன் அதிலிருந்து என்ன கற்றுக் கொள்வான்? எனவே பெண்களை உணர்வு மற்றும் உடல் ரீதியாக மதிக்கக் கற்றுக்கொடுக்கவும். இதன் மூலம் அவனுக்கும் அந்த மதிப்புத் திரும்பக் கிடைக்கும்.

அவனை ஒரு நல்ல மனிதனாக்குங்கள்
ஒரு தந்தை மகனுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்? உங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் குடும்பதினரிடையே நீங்கள் ஒரு பாதுகாவலனாக, நல்ல பண்புகளுள்ளவராக நல்ல பழக்கங்களுள்ளவராகவும் இன்னும் பல நல்ல இயல்புகளுக்காக நல்ல பெயரை எடுத்துள்ளீர்கள். உங்கள் மகனும் அதைப் போலவே பெயரெடுக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் அல்லவா? எனவே தன்னம்பிக்கையுடனும், அதே வேளை பண்பாட்டுடனும் விளங்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

நேர்மையைக் கற்றுக் கொடுங்கள்
இது ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்குக் கற்றுத்தர வேண்டிய முக்கிய பாடம். எவரும் கவனிக்காத நிலையிலும் கூட சரியானவற்றையே செய்வது உங்கள் நேர்மையினைக் குறிக்கும். இந்த உண்மையாய் இருக்கத் தூண்டும் நற்பண்பை, உங்கள் மகனுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பது அவசியம்.

கடினமாக உழைக்க வையுங்கள்
நீங்கள் உங்கள் மகனுக்குக் கற்றுத்தரவேண்டிய 10 பாடங்களுள் இது மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்வதற்கான எளிய முறையை அதாவது கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்பதை உணர்த்துங்கள். கடின உழைப்பு என்பது ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

அவனை பொறுப்புள்ளவனாக்குங்கள்
அவனை வலிமையுடன் வளர்ப்பதன் மூலம் அவன் சிறு வயதிலேயே பொறுப்புகளை ஏற்க முடியும். தன்னை மட்டுமே சார்ந்திருக்குமாறு வலிமையாக இருக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அவனை பொறுப்புள்ளவனாக்கினால், பிற்காலத்தில் கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளில் முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தன்னம்பிக்கைக் குறைவால் அல்லல் படாமல் இருப்பான்.

அன்பு செலுத்துதல்
உங்கள் மகனை அனைவருக்கும் பிடித்து இருந்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் தானே? அவனை அவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் மனிதனாக மாற்ற, அவனை அனைவரின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறுங்கள். இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் அதன் மூலம் மற்றவர்களின் துன்பங்களைப் புரிந்து கொள்பவனாக நெறியுள்ளவனாக அவன் மாறவும் கற்றுக் கொடுங்கள்.

பணத்தின் அருமையைப் புரிய வையுங்கள்
உங்கள் மகனை ஊதாரியாய் இருக்க அனுமதிக்காதீர்கள். அவனின் முக்கியமற்ற அர்த்தமில்லாத தேவைகளைக் கட்டுப்படுத்தி பணத்திற்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். அவனுக்கு பணத்தை சேமிப்பதன் சாதகங்களை சிறுவயது முதலே கற்றுத் தந்தால், அதனை அவன் பிடித்துக் கொண்டு தன்னுடைய வாழ்வில் பயன்பெறுவான்.

தன் மனைவியிடம் ஒரு சிறந்த ஆணாக இருக்கக் கற்றுக் கொடுங்கள்
ஒரு மனைவி கிடைக்க நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தீர்கள். இப்பொழுது அவனுக்கு தன் மனைவியை தன் வாழ்வின் முக்கியமான பெண்ணை மதிக்கவும், அவளுக்காகப் போராடவும், அவளை சிறப்பாக வைத்துக் கொள்ளவும் மற்றும் பாதுகாக்கவும் கற்றுக்கொடுங்கள். நீங்கள் அவனுடைய தாய்க்கு இதையெல்லாம் செய்து அவனுக்கு உதாரணமாக இருங்கள்.

சொல்லின் செல்வனாக அவனை ஆக்குங்கள்
நீங்கள் கற்றுத் தரவேண்டியவற்றுள் இதுவும் ஒரு முக்கியமான பாடம். ஒருவருக்குத் தரும் வாக்கைக் காப்பாற்ற உங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மாறாக, உங்களால் இயலாத காரியங்களுக்கு வாக்களிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சுயமரியாதை
ஒட்டுமொத்தமாக, ஒரு மனிதன் தன்னுடைய சுயமரியாதையை இழக்காமல் இருந்தால் எங்கு சென்றாலும் அவனுக்கு வெற்றி நிச்சயம். நீங்கள் வாழ்ந்த வரை கவுரமாக தலை நிமிர்ந்து வாழ்ந்ததைப் போல அவனுக்கும் வாழக் கற்றுக் கொடுங்கள்.



Click it and Unblock the Notifications











