Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம்
உங்க குழந்தை அமைதியாவே இருக்கிறாரா? அப்ப நீங்க இந்த 8 விஷயத்த பத்தி தெரிஞ்சுக்கணும்!
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். சில குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டார்கள். அவர்களை கட்டி போட்டால் தான் வீட்டில் இருப்பார்கள் எனும் அளவிற்கு பெற்றோர் புலம்பித் தள்ளுவார்கள். சில குழந்தைகள் பெற்றோரே வெளியே அழைத்து சென்றாலும் போக மாட்டார்கள் டிவி பார்த்தபடியே இருப்பார்கள்.
இதற்கெல்லாம் நேர் எதிராக சில குழந்தைகள் அமைதியாகவே இருப்பார்கள். அவர்களது நட்பு வட்டாரம் மிக சிறியதாக இருக்கும். யாரிடமும் பெரிதாக பேசமாட்டார்கள். ஹாய் சொல்லிவிட்டு அவர்கள் இடத்திற்கு சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு ஏதோ பாதிப்பு உள்ளது போலவும், நோயாளி போலவும் பெற்றோர் காண்பார்கள்.
ஆனால், இவர்களும் மற்ற குழந்தை போல சாதாரணமாக இருக்கும் குழந்தைகள் தான். இவர்களிடம் அதிகமாக கவனிக்கும் திறன் இருக்கும். நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை உங்கள் குழந்தை அமைதியாக இருப்பவரா? அப்ப நீங்க இந்த 8 விஷயத்த பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

விஷயம் # 1
அமைதியாக இருக்கும் குழந்தைகள் மற்றவருடன் பழக வெட்கப்படுகிறார்கள் என்றில்லை. அவர்கள் நிறைய உள்வாங்குவார்கள். பேசுவதை ஆழ்ந்து கவனிப்பார்கள். மனம் விட்டு பேசமாட்டார்களே தவிர, நன்கு கவனிப்பார்கள். இவர்கள் பயப்படுகிறார்கள் என எண்ண வேண்டாம், இவர்கள் உள்ளுக்குள் எதையும் மறைக்கும் குணாதிசயம் இல்லாமல் இருப்பார்கள்.

விஷயம் # 2
அமைதியாக இருக்கும் குழந்தைகள் ஆக்டிவாக இல்லை, மந்தமாக இருக்கிறார்கள் என சிலர் கூறுவார்கள். ஆனால், அவர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை பற்றி உள்ளுக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

விஷயம் # 3
நாலு பேருடன் பேசி பழகாமல் இருக்கிறார்கள் என அவர்களை பேச சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்களுடன், பேச வேண்டும் என்ற சூழல் இருந்தால் மட்டுமே பேசும் குணாதிசயம் கொண்டிருக்கலாம். ஓர் மளிகை கடைக்கு சென்றால் நாம் அனைத்தையும் வாங்குவது இல்லையே, தேவையனாதை மட்டும் தான் வாங்குகிறோம். அப்படி தான் இவர்களும்.

விஷயம் # 4
அமைதியாக இருக்கும் குழந்தைகள் நன்கு கவனிக்கும் திறன் கொண்டுள்ளதால். அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் வெளிப்படும். கல்வி ரீதியாக, கலை ரீதியாக. முக்கியமாக இவர்களிடம் நிறைய நினைவாற்றலும், எழுத்தாற்றலும் இருக்கும்.

விஷயம் # 5
இவர்கள் எப்போதும் நான்கு பேருக்கு நடுவில் தனித்து, தலைமை வகித்து இருக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். இவர்கள் அதிகம் பேசாவிட்டாலும். நான்கு பேர் பேசுவதை கேட்டு, அதை ரசித்து கவனிக்கும் திறன் கொண்டிருப்பார்கள். இவர்களது நண்பர்கள் வட்டம் சற்று சிறியதாக தான் இருக்கும்.

விஷயம் # 6
இவர்கள் தாங்கள் இருக்கும் சூழல் எப்படி இருந்தாலும், அதில் அடங்கி கொள்வார்கள். தங்கள் சௌகரிய அளவை கூட்டிக் குறைத்துக் கொண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். உதாரணமாக, நீங்கள் சமைத்த உணவு பிடிக்காவிட்டாலும், அதை சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். குற்றம் குறை கூறிக் கொண்டு அடம் பிடிக்கமாட்டார்கள்.

விஷயம் # 7
இவர்களால் யாருக்கும் தொந்தரவு வராது. தங்களுக்கு பிடித்த வேலை என சொல்லி கொண்டு அது மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செய்ய மாட்டார்கள். சிறந்த மனிதம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

விஷயம் # 8
உங்கள் குழந்தை அமைதியானவராக இருக்கிறார் என்றால், அவரிடம் ஓர் சரியான சூழலில், உடன் அமர்ந்து பேசி பாருங்கள். அவர்களுக்குள் இருக்கும் விஷயங்கள் மற்றும் கனவுகள் குறித்து நிறைய பேசுவார்கள். ஏன் சில குழந்தைகள் பெற்றோருக்கே அறிவுரையும் கூறும். இவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிக முதிர்ச்சி பெற்று திகழ்வார்கள்.



Click it and Unblock the Notifications