Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இரட்டை குழந்தைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!
குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு ஆனந்தம். அதுவும் இரட்டை குழந்தை என்றால் கேட்கவா வேண்டும். போனசாக ஒரே சமயத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்தால், அதை விட சந்தோஷம் என்ன இருக்க முடியும். நீங்கள் இரட்டையர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு ஏற்றதாகும். ஆம், உங்களை பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆவல் இருக்கிறது அல்லவா? இரட்டை குழந்தைகளை பெற்றவர்களை அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை கேட்டிருப்போம். அதற்கு காரணம் இரட்டையர்களில் ஒரு குழந்தை தாயை போலவும், மற்றொரு குழந்தை தந்தையை போலவும் பிரதிபலிக்கும்.
சில நேரங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரி வாழ்க்கையை தான் வாழ்வார்கள், அது அவர்களின் குணங்களாகட்டும் அல்லது உருவமாகட்டும். வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்களை விட ஒரே மாதிரியான இரட்டையர்கள் பொதுவாக குறைவு தான். நீங்கள் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்களில் ஒருவரா? அப்படியானால் மேலும் படித்து உங்களை பற்றியும் உங்களின் உடன்பிறப்பை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
இரட்டையர்களை பெற்றவர்களை சந்தித்து அவர்களிடம் கேட்டால், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதை விட, வேறு எந்த சொர்க்கமும் இல்லை என்று கூறுவார்கள். இருப்பினும் இரட்டையர்களுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்களுக்கு இடையே உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே டி.என்.ஏ-வை கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்காக அவர்கள் ஜெராக்ஸ் காப்பியோ, கார்பன் காப்பியோ அல்ல. கண்டிப்பாக அவர்களுக்கு இடையே பல வேறுபாடுகள் இருக்கும்.
மேற்கூறிய தகவலை போல இன்னும் உங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாமா? ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றவர்களா நீங்கள்? அப்படியானால் நாங்கள் கூறுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

தாய் நீண்ட ஆயுள் பெறுவார்கள்
ஒற்றை குழந்தையை பெற்ற தாயை விட, இரட்டையர்களை பெற்ற தாய் தான் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. இரட்டை குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள், ஒற்றை குழந்தையை பெற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உயிர் வாழ்வார்கள் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

30 வயதிற்கு மேல் அதிக வாய்ப்பு உள்ளது
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 30 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால், உடல் ரீதியாக கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வேறுபட்ட கைரேகை
ஒரே மாதிரியான இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியுமா உங்களுக்கு? அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான டி.என்.ஏ இருக்கும். இருப்பினும் அவர்களுக்கு ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. இந்த தகவல் உங்களுக்கு இதற்கு முன் தெரியுமா?

இடது கைப்பழக்கம்
இரட்டையர்களை பற்றிய இன்னொரு பொதுவான தகவல். அவர்கள் பொதுவாக இடது கைப்பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

மீண்டும் இரட்டைக்கு வாய்ப்பு உள்ளது
நீங்கள் ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றிருந்தால், உங்கள் அடுத்த பிரசவத்திலும் ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றெடுக்க வாய்ப்பு உள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதிலும் அதற்கு 50 சதவீத வாய்ப்பும் உள்ளதாம்.

வித்தியாசமான பேச்சு
உங்களான மற்றொரு சுவாரஸ்யமான தகவல். இரட்டை குழந்தைகள் அவர்களுக்கென, மற்ற யாருக்கும் புரியாத, ஒரு தனி பாஷையை உருவாக்கி கொள்வார்களாம். உங்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளார்கள் என்றால், அவர்கள் பேசுவதை கவனியுங்கள். அவர்களின் பேச்சில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் சத்தம் அடங்கிய உணர்வு வெளிப்பாட்டை காண நேரிடலாம்.



Click it and Unblock the Notifications