Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
கோடையில குட்டீஸ்க்கு பழம் குடுங்க!

கோடைகாலத்தில் தர்பூசணி, கமலா ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் போன்ற பழங்கள் அதிக அளவில் கிடைக்கும். இவற்றின் சுவையை படிப்படியாக அறிமுகப்படுத்தலாம். வெள்ளரிக்காயை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இனிப்பு சுவை பிடித்த குழந்தைகளுக்கு தேன் ஊற்றியும், காரச் சுவை பிடித்தவர்களுக்கு உப்பும், மிளகு தூளும் தூவிக் கொடுக்கலாம்.
நீர்ச்சத்தினை தக்கவைக்கும்
ஆரஞ்சு பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் எனவே உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம்.
தர்பூசணி பழத்தை மதிய நேரத்தில் உண்ணத் தரலாம். இது உடலில் தண்ணீர் சத்தினை தக்கவைக்கிறது.
திராட்சைப் பழம் உடம்பில் நீர் சத்தினை தக்கவைக்கிறது. காலை, மதிய உணவிற்கு இடைப்பட்ட நேரத்தில் திராட்சைப் பழத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மாம்பழத்தை வெறும் பழமாக கொடுப்பதை விட பாலோடு சேர்த்து மில்க் ஷேக்காக கொடுக்கலாம்.
இளநீர் பருகக்கொடுப்பது குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சினையை தீர்க்கும். வயிற்றில் புண்கள் எதுவும் இருந்தாலும் குணமாகும். வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்கக் கூடாது.
கண்கவர் வடிவங்கள்
குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள். பழச்சாறுகளைக் கொடுப்பதற்கு பதிலாக பழங்களாக உண்பதற்கு பழக்கப்படுத்துங்கள். இதனால் நார்ச் சத்தும் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரைச் சேராமல் தடுக்கலாம்.
தண்ணீர் கொடுங்கள்
குழந்தைகளை ஊட்டச்சத்தான உணவை உண்ணுமாறு நீங்கள் எந்த அளவிற்கு வற்புறுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு தண்ணீர் அருந்துவதையும் ஊக்கப்படுத்துங்கள். சுத்தமாக, காய்ச்சி வடிகட்டப்பட்ட நீர் குழந்தைகளுக்கு எப்போதும் கொடுங்கள். சாப்பிட்ட பிறகு முழுதாக ஒரு டம்ளர் நீராவது அவர்கள் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எங்கு சென்றாலும் தண்ணீர் கொண்டு செல்லும் பழக்கத்தையும் கொண்டு வாருங்கள். பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள்.
பொதுவாக, காய்கறிகள், பழங்கள் போன்றவை உடலுக்கு நன்மையை அளிக்கும். ஆனால் தற்போது விற்பனையில் பழச்சாறு என்று கூறி விற்கப்படும் பல பொருட்களில் எந்த பயனும் இல்லை.அதில் கெடுதலான விசயங்களே உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று.
வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் பழச்சாறு தவிர்த்து கடைகளில் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications
