Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புள்ளயைப் பார்த்து கொன்னுடுவேன்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!

தேவையற்ற விமர்சனம்
நம்முடைய நண்பர்களுக்கு நாம் செல்லப்பெயர் வைத்திருக்கலாம். அந்தப்பெயரை குழந்தைகள் முன்னிலையில் சொல்லி விமர்சிப்பது தவறான பழக்கம். ‘முட்டைக்கண்ணன்’ என்று பெயர் வைத்திருந்தால் அதை கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளும் குழந்தைகள், அடுத்தநாள் நண்பர் வரும்போது முட்டைக்கண்ணன் அங்கிள் வந்திட்டார் என்று கூற வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கை.
அதேபோல் அவர்கள் டீச்சரைப் பற்றி குழந்தைகளிடம் கமென்ட் அடிக்கக் கூடாது. இதனால் குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
சண்டை வேண்டாம்
எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடவேண்டும். அது குழந்தைகளை மனதளவில் பாதிக்கும். கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. எனவே அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தீயவை பேசாதீர்கள்
சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அதேபோல்
குழந்தைகள் முன்னிலையில் தீய சொற்களை பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொய் சொல்லாதீர்கள்
சில பெண்மணிகள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். அது குழந்தைகளுக்கு தெரிந்து விட்டால் "அப்பாகிட்டே சொல்லாதே என்று கூறுவர். இது தவறான பழக்கமாகும். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் குழந்தை "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று ப்ளாக்மெயில் செய்ய வாய்ப்புள்ளது.
கமிஷன் பழக்கம்
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
முன் உதாரணம்
குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை குழந்தை முன்னிலையில் மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
ஒப்பீடு வேண்டாமே
படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது. அதேபோல் உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.



Click it and Unblock the Notifications
