For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

By Maha
|

பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர்.

இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

How to Be a Good Mother

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

English summary

How to Be a Good Mother | சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

There's already a lot to cover when learning how to be the best parent you can be. But there are certain challenges a mother faces as a parent that are distinct from those of being a father. Here's how to overcome them and raise your child/children well.
Story first published: Friday, January 25, 2013, 15:29 [IST]
Desktop Bottom Promotion