Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
பிறந்த குழந்தைக்கு எவ்வளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் தெரியுமா?
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலில் ஆரோக்கியம் அதிக அளவு உள்ளது என்று பல மருத்துவர்களும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதிலும் முதல் ஆறு மாதங்கள் கட்டாயம் தாய்பால் கொடுப்பதின் அவசியம் அனைவருக்குமே நன்கு தெரியும்.
எனினும் பிறந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் என்பது பலருக்கு தெரியாத புதிராகவே உள்ளது. மேலும் குறைந்த அளவு பாலை கொடுப்பதாலும் பாதிப்பு ஏற்படும்.

அதிகளவு பாலை கொடுப்பதாலும் பக்க விளைவுகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என்பதால் எந்த அளவு பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது நலம் தரும் என்பது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டக்கூடிய விதம்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை விடுத்து, சீரான இடைவெளியில் தாய்ப்பாலை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் குழந்தைக்கு எந்த அளவு பாலை புகட்ட வேண்டுமோ அந்த அளவு பாலை புகட்டினால் போதுமானது. அளவுக்கு அதிகமாக நீங்கள் உணவை கொடுப்பதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படும்.
குழந்தைகளின் தேவையை புரிந்து கொண்டால் இதில் எந்த குழப்பமும் ஏற்படாது. குழந்தை அழுவதால் பசியின் காரணமாக அழுகிறது என்று எண்ணி உடனுக்குடன் நீங்கள் பால் புகட்டுவது தவறானது. குழந்தை பசிக்காக மட்டும் அழாது. சில உடல் பிரச்சனையின் காரணமாக அழ நேரிடலாம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுத்தக்கூடிய சமயத்தில் நீங்கள் அதிகமாக புகட்டி விட்டீர்களா என்பதை அறிந்து கொள்ள சில அறிகுறிகளை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.
குழந்தை அதிகமாக பால் குடித்ததை கண்டுபிடிக்கும் அறிகுறிகள்
குழந்தைகளுக்கு வழக்கத்தை விட நீங்கள் அதிக அளவு பாலை கொடுப்பதன் காரணமாக குழந்தை திடீரென்று உடல் எடை அதிகமாக காணப்படும். இதற்கு காரணம் நீங்கள் அபரிமிதமான பாலை புகட்டுவது தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் வழக்கத்துக்கு மாறாக குழந்தை அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது அதிகமாக பாலை குடித்து இருக்கிறது என்று அர்த்தம். குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதற்கும் காரணம் அதிக அளவு பால் புகட்டுவது தான். சில சமயம் இதுதான் செரிமான பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
சில சமயம் குழந்தைகள் திடீர் என்று அழுவதற்கான காரணம் பால் அதிகமாக குடித்ததன் காரணமாகத் தான். மேலும் பாலை வாயிலிருந்து கக்கினால் அதிக அளவு பாலை குடித்துள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மேலும் பாலை குடிக்க கொடுக்கும் போது அது குடிக்க மறுத்தால், வயிறு நிரம்பி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அளவுக்கு அதிகமாக பால் புகட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள்
அளவுக்கு அதிகமாக பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு வாயு தொல்லை ஏற்படலாம். இந்த வாயு தொல்லையானது அவர்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி விடும். மேலும் அளவுக்கு மீறி உடல் எடை கூடும் பொழுது பல பிரச்சனைகளைகுழந்தைகளுக்கு உண்டாக்கிவிடும். எனவே உணவளிக்கும் போது ஜாக்கிரதையாக குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
பால் புகட்டுவதற்கான நேரம்..
குழந்தைகளுக்கு பாலை கொடுக்கும் போது நீங்கள் நேரத்தை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் இடைவெளி விட்டு குழந்தைக்கு பால் ஊட்டுவது மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் குழந்தைகள் பால் குடிக்க விரும்பவில்லை என்றால் நீங்கள் மேலும் இடைவெளி எடுத்துக்கொண்டு பாலை கொடுக்க முயற்சி செய்யுங்கள். கட்டாயப்படுத்தாதீர்கள்.
எனவே குழந்தையின் தேவையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நீங்கள் பால் புகட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை புரிந்து கொண்டு உங்கள் குழந்தைக்கு தேவையான அளவு பாலை புகட்டி ஆரோக்கியத்தை அதிகரிங்கள்.



Click it and Unblock the Notifications