Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க குழந்தை பொதுவெளியில் அழுகிறதா? அப்ப நீங்க இத பண்ணுங்க... உடனே அழுகையை நிறுத்திடுவாங்க!
குழந்தைகளை கவனித்து கொள்வது என்பது பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலான பணி. ஏனெனில், குழந்தைகள் செய்யும் சேட்டைகள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்கான பணி, பதில் மற்றும் உணவுகளை வழங்குவதற்குள் பெற்றோர்களுக்கு போதும் போதுமென்றாகிவிடும்.
அதிலும் பொதுவெளியில் அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்குள் பெற்றோர்கள் சோர்வடைந்து விடுவார்கள். பெற்றோர்களுக்குரிய பாணியை நீங்கள் கையிலெடுக்கும்போது, உங்கள் குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ செய்வது அவர்களின் அழுகையை கட்டுப்படுத்தலாம். ஆனால், அது நல்லதல்ல.

இது உங்கள் குழந்தையின் மனநிலை மற்றும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவு தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் பல நேரங்களில் அழுவது பொதுவானது. ஆனால், அவர்கள் ஏன் அழுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம்.
பொது இடத்தில் அழும் குழந்தையை எப்படி கையாள்வது?
பொது இடங்களில் அழும் குழந்தையைக் கையாள்வது கடினமான விஷயம் தான். ஆனால் கொஞ்சம் பொறுமையாக இரக்க குணம் உடையவர்களாக, குழந்தையை அமைதிப்படுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். பொது இடங்களில் அழும் குழந்தையை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அமைதியாக இருக்க வேண்டும்
உங்கள் குழந்தை விருப்பப்படும் பொருட்களை அல்லது உணவுகளை நீங்கள் வாங்கித் தராமல் இருக்கலாம். இதனால், உங்கள் குழந்தை அடம் பிடித்து அழலாம். அவ்வாறு உங்கள் குழந்தை அழும்போது, அதற்கு எதிராக நீங்கள் செயல்படக்கூடாது.
அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை என்ற மன அழுத்தத்தின் காரணமாக அழலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போது, சில ஆழமான மூச்சுபயிற்சி எடுத்து நிதானமாக உங்கள் குழந்தையை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.
அமைதியான குரலில் பேசுங்கள்
உங்கள் குழந்தை பொதுவெளியில் அழும்போது, சத்தம்போட்டு, நீங்களும் கத்த வேண்டாம். இப்படி செய்தால், உங்கள் குழந்தை அதிகமாக அழத்தொடங்கலாம். மெலிதான மற்றும் இனிமையான குரலில் பேசுவது ஒரு குழந்தையை அமைதிப்படுத்த உதவும். குழந்தைகளிடம் எப்போதும் மென்மையான தொனியைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இது அவர்களை எளிதில் சமாதானப்படுத்த உதவும்.
அவர்களை நன்றாக உணர வைத்தல்
உங்கள் குழந்தை என்ன காரணத்திற்காக அழுதாலும், அவர்களை கட்டிப்பிடிப்பது அல்லது முதுகில் தட்டுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இது துன்பத்தில் இருக்கும் குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதையும், எல்லாம் சரியாகிவிடும் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். இதனால், அவர்கள் அழுவதை நிறுத்த வாய்ப்புள்ளது.
திசை திருப்புதல்
உங்கள் குழந்தை எதற்காக அழுதுகொண்டிருக்கிறது என்ற காரணம் தெரிந்தால், அதிலிருந்து அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்யுங்கள். முடிந்தால், பொம்மை, புத்தகம் அல்லது விளையாட்டு மூலம் குழந்தையின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். இது அவர்களின் கவனத்தை மன அழுத்தத்தின் மூலத்திலிருந்து திசை திருப்ப உதவும்.
இடம் கொடுங்கள்
உங்கள் குழந்தை என்ன தவறு செய்தது? ஏன் அழுகிறது என்று கேளுங்கள். இது அவர்களின் அழுகைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க உதவும்.
உங்கள் குழந்தை அமைதியாக இருக்க சிறிது நேரம் தேவைப்பட்டால், அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும். அது ஒரு அமைதியான மூலையில் அல்லது கூட்டத்திலிருந்து விலகி இருக்கும் அறையாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கான நேரத்தை கொடுங்கள். பொறுமையான வழியில், நீங்கள் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications

