Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க குழந்தையால் படிக்குறத ஞாபகம் வெச்சுக்க முடியலையா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட கொடுங்க..
Brain Boosting Foods In Tamil: தற்போது நிறைய குழந்தைகள் படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுகிறார்கள். இப்படி குழந்தைகளால் படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்களைக் கொண்ட உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது தான்.
இது தவிர இன்றைய குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல், வீட்டிற்குள்ளேயே மொபைலை பார்த்தவாறு நேரத்தை கழிக்கிறார்கள். இதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது.

உங்கள் குழந்தைகளும் இப்படி படிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்களா? அப்படியானால் அவர்களின் மூளை செயல்பாட்டை அதிகரிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளை நன்கு ஓடியாட விளையாட வைப்பதோடு, மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுகளை கொடுக்க வேண்டும். இப்போது சிறந்த நினைவாற்றல், வளர்ச்சி மற்றும் செறிவிற்கு எந்த மாதிரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
முட்டை
குழந்தைகளின் மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க வேண்டுமானால், காலை உணவின் போது கார்போஹைட்ரேட், புரோட்டின் மற்றும் சிறிது ஆரோக்கியமான கொழுப்புக்கள் அடங்கிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். இது அவர்களுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படத் தேவையான ஆற்றலை வழங்கும்.
அதுவும் முட்டையில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. கூடுதலாக, அதில் கோலைன் உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். எனவே தினமும் குழந்தைகளின் உணவில் முட்டையை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
கொழுப்புள்ள மீன்
மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன மற்றும் இது மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது உடலில் உள்ள செல்லின் கட்டுமானத் தொகுதிகளின் தேவையான கூறுகளாகும்.
எனவே குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க விரும்பினால், சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மத்தி மற்றும் ஹெர்ரிங் போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களை வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் கொடுங்கள். ஏனெனில் இந்த வகையான மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
பலவண்ண காய்கறிகள்
பலவண்ண காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது மூளையில் உள்ள செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுவும் தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், கேரட், பசலைக்கீரை போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த வகையான காய்கறிகள் மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும் சிறப்பான உணவுகளுள் ஒன்று. மேலும் இதில் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது.
ஓட்ஸில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஜிங்க் போன்றவை உள்ளன. இவை குழந்தைகளின் மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. அதுவும் ஓட்ஸை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அதன் மேல் ஆப்பிள், வாழைப்பழம், ப்ளூபெர்ரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தூவி கொடுங்கள். இது சுவையானதாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை விளைவிக்கும்.
பால், தயிர் மற்றும் சீஸ்
பால், தயிர், சீஸ் போன்றவற்றில் புரோட்டீன் மற்றும் பி வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இவை மூளை திசுக்கள், நரம்பியக்கடத்திகள் மற்றும் நொதிகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான சத்துக்களாகும். மேலும் இவை மூன்றும் மூளையின் செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
முக்கியமாக இந்த வகையான உணவுகளில் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் அதிகளவில் உள்ளன. எனவே தினமும் இவற்றை குழந்தைகளின் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
பீன்ஸ்
பீன்ஸில் குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக உள்ளன. அதுவும் கிட்னி பீன்ஸ், பிண்டோ பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 ஏராளமான அளவில் உள்ளன.
எனவே இந்த வகையான பீன்ஸ்களை வேக வைத்து, அவற்றை சாப்பிட கொடுக்கலாம். இல்லாவிட்டால், அந்த பீன்ஸ்களைக் கொண்டு மசாலா தயாரித்து சப்பாத்தியுடன் சாப்பிட கொடுக்கலாம். இதனால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் நினைவாற்றலும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications