Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கர்ப்பமாக ஆசை.. ஆனா முடியலையா? அப்ப இந்த மாதிரியான உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...
பெண்களின் கருவளத்தை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைக் காண்போம். இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், விரைவில் ஒரு நற்செய்தியைப் பெற வாய்ப்புள்ளது.
Female Fertility: இன்றைய காலகட்டத்தில் திருமணமான தம்பதிகள் கருவுறுதலில் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தற்போதைய உணவுப் பழக்கங்களும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் தான். இவ்விரண்டும் தம்பதிகளின் கருவுறுதல் திறனை பெருமளவில் பாதிக்கின்றன.
என்ன தான் நாம் நவீன காலத்தில் வாழ்ந்தாலும், திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு குழந்தை அவசியமாகும். குழந்தையின்றி ஒருவரது வாழ்க்கையே பூர்த்தியாகாது என்றே கூறலாம்.

ஒரு பெண் கருத்தரிக்க முடியாமல் போக ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் காரணமாக இருக்கலாம். தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமானது முதலில் ஒருவரது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, இனப்பெருக்கத்தின் திறனை பாதிக்கின்றன. எனவே இனப்பெருக்க பிரச்சனைகளை சரிசெய்ய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் தம்பதிகள் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் கருத்தரிப்பதில் உள்ள பிரச்சனையைத் தடுக்கலாம்.
இப்போது பெண்களின் கருவளத்தை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைக் காண்போம். இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், விரைவில் ஒரு நற்செய்தியைப் பெற வாய்ப்புள்ளது.
தயிர் மற்றும் சீஸ்
இந்த இரண்டு பால் பொருட்களிலும் உள்ள கால்சியம், புரோபயோடிக்ஸ், வைட்டமின் டி போன்றவைகள் ஓவுலேசன் என்னும் அண்டவிடுப்பில் உதவுவதாக கருதப்படுகின்றன. ஆகவே இவ்விரு உணவுகளையும் திருமணமான பெண்கள் தங்களின் உணவில் சேர்த்து வர, கருவளம் மேம்படும். குறிப்பாக நீங்கள் கருத்தரிக்க திட்டமிட்டிருந்தால், காலை உணவில் தயிரையும், மதியம் அல்லது இரவு உணவில் சீஸ் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், விரைவில் கருத்தரிக்கலாம்.
பருப்பு மற்றும் பயறு வகைகள்
பருப்பு மற்றும் பயறு வகைகளில் நார்ச்சத்து மற்றும் புரோட்டின் அதிகளவில் உள்ளன. இவை ஹார்மோனை சமநிலையில் பராமரிக்க உதவுகின்றன. ஹார்மோன் சமநிலையில் இருந்தால், அது அண்டவிடுப்பை மேம்படுத்தும். மேலும் இந்த இரண்டு உணவுகளிலும் ஃபோலிக் அமிலம் அதிகளவில் உள்ளன. இது கருத்தரிப்பை மேம்படுத்துவதிலும், கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான சத்தாகும்.
அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகளவில் உள்ளன. இவை கருத்தரிக்க உதவி புரிவதோடு, வைட்டமின் உறிஞ்சுதலை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. கூடுதலாக இவற்றில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இது டயட்டரி நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தின் அற்புதமான மூலமாகும். இவை கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் மிகவும் முக்கியமான சத்துக்களாகும். ஆகவே நீங்கள் கருத்தரிக்க விரும்பினால், அவகேடோ பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
கடல் சிப்பி
கடல் சிப்பி கருவளத்தை மேம்படுத்தும் அற்புதமான உணவுகளில் ஒன்று. இதில் கருத்தரிக்க தேவையான ஜிங்க் சத்து அதிகளவில் உள்ளன. எனவே கடல் சிப்பியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கருவளம் மேம்படும். ஒரு பெண்ணின் உடலில் போதுமான அளவு ஜிங்க் சத்து இல்லாவிட்டால், அது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதோடு, தரமான கருமுட்டைகளின் வளர்ச்சியைத் தடுத்து, கருவுறும் திறனை குறைக்கும். ஆகவே கருத்தரிக்க விரும்பும் தம்பதிகள், தங்களின் உடலில் கடல் சிப்பியை அடிக்கடி சேர்த்து வருவது நல்ல பலனைத் தரும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் அனைத்தும் பெண்களின் கருவளத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கிய உணவுகளாகும். எனவே கருத்தரிக்க விரும்பும் பெண்கள் தங்களின் தினசரி உணவில் இவற்றை சேர்த்து வந்தால், விரைவில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications













