Latest Updates
-
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும்
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் உங்க குழந்தைகளுக்கு இந்த உணவுகள கொடுக்கவே கூடாதாம் தெரியுமா?
ஏப்ரல், மே மாதம் என்றாலே வெயில் காலம் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த சுட்டெரிக்கும் வெயில் காலம் குழந்தைகளுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும். ஏனென்றால் கோடை விடுமுறை காரணமாக பள்ளிகளுக்கு பை,பை சொல்லிவிட்டு எங்கு செல்லலாம், எதை சாப்பிடலாம் என்று அவர்கள் மனதுக்குள் பலவிதமான எண்ணங்கள் உதயமாகி கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இந்த கோடை விடுமுறையில் அவர்களை சமாளிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பெற்றோர்களுக்கு இருக்கும்.மேலும் இது போன்ற வேளைகளில், அவர்களுக்கு உண்ணக்கூடிய உணவை சரியான முறையில் கொடுப்பது என்பது சவாலாகவே அமையும்.

கண்டிப்பா சொல்லுங்க... ஐஸ் கிரீமுக்கு நோ... நோ...
எப்போதும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவை தர வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் இந்தக் கோடையில் அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், டெசர்ட்டுகள் போன்றவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புகளை புரிந்து கொண்டு இதனை அவர்களுக்கு தராமல் அதற்கு மாற்றாக ஆரோக்கியம் தரும் உணவுகளை கொடுப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு தர கூடாத உணவுகள்
கோடை காலத்தில் மசாலா பொருட்கள் அதிக அளவு போட்டு செய்யப்படுகின்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இந்த உணவு எளிதில் செரிமானம் ஆகாது. மேலும் உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பல பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.
எனவே மிதமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் சிறப்பானது என்பதை புரிந்து கொண்டு, இந்த கோடையில் அவர்களுக்கு பாரம்பரிய உணவுகளான கம்மங்கூழ், ராகி கூழ் போன்ற போன்ற கூழ் வகைகளை செய்து கொடுத்து அவர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.
மேலும் ஐஸ்கிரீம்கள், குளிர்பானங்கள், டெசர்ட்டுகளை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆரஞ்சு பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம் போன்ற பழ வகைகளை கொடுக்கலாம். குறிப்பாக நீர் சத்து அதிகமாக இருக்கும் வெள்ளரிக்காய், முலாம் பழம், தர்பூசணி போன்றவற்றை கட்டாயம் சாப்பிடுவதின் மூலம் வெயிலில் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்டுவதோடு குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க முடியும்.
அதிக அசைவம் வேண்டாம்
வீட்டில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இந்த இரண்டு மாதங்களும் நீங்கள் அதிகளவு அசைவ உணவை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதன் மூலம் இரண்டே மாதத்தில் அவர்கள் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் பல இன்னல்களுக்கு உள்ளாவார்கள். மேலும் அசைவ உணவுகளை உண்பதால் எளிதில் ஜீரணம் ஆகாமல் அவர்களுக்கு அஜீரண கோளாறுகளால் பாதிக்கப்படலாம்.
கோடையில் ஏற்படுகின்ற அம்மை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள குளிர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீர்மோர், தயிர் போன்றவற்றை அடிக்கடி நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். அது மட்டுமல்லாமல் நுங்கினை உங்கள் உணவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் உடல் வெப்பத்தின் காரணமாக எந்தவிதமான பாதிப்புகளும், சிறுநீரகத் தொற்றுக்களும் ஏற்படாமல் இருக்கும் .
மேலும் குழந்தைகளை தெருக்களில் விற்கக்கூடிய எண்ணெய் பதார்த்தங்களை அதிகளவு வாங்கி சாப்பிட விட்டு விடாதீர்கள். உங்கள் வீட்டிலேயே அவர்களுக்கு தேவையான உணவுகளை தயார் செய்து கொடுப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதன் மூலம் எந்த விதமான தொற்று நோய்களும் ஏற்படாமல் நீங்கள் தவிர்க்கலாம்.
எனவே மேற்கூறிய கருத்துக்களை நீங்கள் புரிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு உங்கள் பிள்ளைகளுக்கு தேவையான உணவு பொருட்களை குறிப்பாக உடலுக்கு கேடு விளைவிக்காத,உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவு பொருட்களை உங்கள் வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து இந்தக் கோடையில் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
