Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
பிரசவத்திற்கு பின் அடிவயிற்றை குறைப்பதில் பிரண்டை செய்யும் மாயங்கள்!
Pirandai Benefits In Tamil: இன்றும் கிராமத்தில் பிள்ளை பெற்றவள் வயிற்றில் பிரண்டையைக் கட்டி என்ற ஒரு பழமொழி வழக்கத்தில் உள்ளது அனைவருக்கும் தெரியும். அப்படி இந்த பழமொழிக்குள் ஒழிந்திருக்கும் உண்மை என்ன என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
உண்மையில் எந்த பழமொழி எதை உணர்த்துகிறது என்றால் பிள்ளை பெற்ற பெண்களின் அடிவயிற்றை குறைப்பதற்கு எதை செய்ய வேண்டும் என்பதைத்தான் புடகமாக அவர்கள் உணர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதற்கு சிறப்பான மருந்துதினையும் கூறி சென்று இருக்கிறார்கள் என்று கூற வேண்டும்.

பொதுவாகவே பெண்கள் கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்ற பிறகு அவர்களுக்கு அடிவயிறு அதிகளவு பெருத்துவிடும். இப்படி பெருக்கின்ற அடிவயிற்றை குறைப்பதற்காக இன்றைய நவீன மருத்துவத்தில் அதற்காக பல வழிகளை கையாண்டு வருகிறார்கள்.
எனினும் அவையெல்லாம் தரும் பயனை விட கூடுதல் பயனை அள்ளி கொடுப்பதோடு அவர்களின் அடிவயிற்றை பிளேட் ஆக வைத்துக் கொள்ளக்கூடிய அற்புதமான மருந்தாக பிரண்டை என்ற மூலிகை உள்ளது.
அடிவயிற்றை குறைப்பதில் பிரண்டை செய்யும் மாயம்
பற்றி படரும் கொடி வகை தாவரமான பிரண்டை பொதுவாக வயல்வெளிகள் மட்டுமல்லாமல் வறண்ட பகுதிகளில் கூட செழிப்பாக வளர்ந்திருக்கும் தாவரமாகும். இந்த பிரண்டையில் அதிகளவு கால்சியம், சிஸ்டோஸ்டீரால்,இரிடாய்ட்ஸ்,குவர்சிடின்,கரோட்டின், குவாட்ராங்குலாரின் ஏ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இது கால்சிய சத்து அதிகம் கொண்டு இருப்பதால் பெண்களுக்கு உகந்த மூலிகை என்று கூறலாம். நமது முன்னோர்கள் ஆரம்ப நாட்களில் இந்த பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் அவர்கள் ஜீரண மண்டலத்தை மட்டுமல்ல உடம்பை வைரம் போல வலிமையாக்கி கொள்ளவும் இந்த மூலிகையை பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள்.
அடிவயிற்றில் இருக்கக்கூடிய அடிபோஸ் திசுக்களில் மறைந்திருக்கும் கொழுப்புகளை எரிக்க கூடிய அற்புத ஆற்றல் படைத்த இந்த பிரண்டையை பிரசவமான பெண்கள் துவையலாக சாப்பிடுவதின் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.
மேலும் பிள்ளை பெற்றவர்களின் வயிறா? இது என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் தட்டையான வயிற்றை அமைத்துக் கொடுப்பதில் இயற்கை முறையில் பிரண்டை பெரும் பங்கு வகிப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் இதை எடுத்துக் கொள்வதின் மூலம் எந்த விதமான பக்க விளைவும் இல்லாமல் எளிதில் அடி வயிற்று கொழுப்பினை கரைத்து தட்டையான வயிற்றை பெற்று விடலாம்.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் அவர்களது எலும்பின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அடிவயிற்றை குறைக்கவும் பிரண்டையை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தத்தான் பெத்தவ வயிற்றில் பிரண்டையைக் கட்டு என்ற பழமொழியை கூறி சென்றிருக்கிறார்கள்.
பசியை தூண்டக்கூடிய சக்தி இந்த பிரண்டைக்கு உள்ளது. வயிற்று கோளாறுகள், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை எளிதில் தீர்த்து விடும். எனவே நீங்களும் பிரண்டையை பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.
எலும்பு முறிவு, செரிமானம் போன்றவற்றுக்கு அருமருந்தாக இருக்கும் இந்த பிரண்டை பெண்களுக்கான அற்புதமான மூலிகை என்று கூறலாம். பிரண்டையிலிருந்து செய்யப்படும் பிரண்டை உப்பை நீங்கள் நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கி பயன்படுத்தலாம்.
பெண்களின் எலும்புகளுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும் இயன்ற பிரண்டையை இனிமேல் கட்டாயம் நீங்கள் வாரத்திற்கு ஒரு நாள் ஏதேனும் ஒரு வழியில் உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்வதின் மூலம் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றபடி உங்களது ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications