Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
விரைவில் கர்ப்பமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த பொசிஷனில் உடலுறவு கொள்ள வேண்டும் தெரியுமா?
பெண்களின் கருப்பையில் இருக்கும் பிரச்சினைகள், ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவது போன்ற பல காரணங்கள் கருத்தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
பெண்ணாக பிறந்த அனைவருக்குமே தாய்மை என்பது வரம்தான். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பது என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சினை ஆண், பெண் இருவரையுமே சார்ந்தது.

பெண்களின் கருப்பையில் இருக்கும் பிரச்சினைகள், ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவது போன்ற பல காரணங்கள் கருத்தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் உடலுறவு கொள்ளும்போது செய்யும் சில செயல்கள் கருத்தரித்தலை விரைவாக்கும். இந்த பதிவில் வேகமாக கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

உங்கள் மாதவிடாய் சுழற்சியை அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் வேகமாக கர்ப்பமாக விரும்பினால் உங்கள் சுழற்சியை அறிவது மிக முக்கியமான விஷயம். இது உங்கள் அண்டவிடுப்பின் சுழற்சியைப் பற்றிய அடிப்படை யோசனையைத் தருகிறது, மேலும் கருத்தரிக்க சிறந்த நேரம் எப்போது என்பதை அறிந்து கொள்ள இது உதவும். சளி போன்ற நீர் வெளியேற்றம் மற்றும் கர்ப்பப்பை வாய் சளியில் ஏற்படும் மாற்றங்கள் அண்டவிடுப்பின் ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும்.

உடலுறவு கொள்ளும் நிலை முக்கியமா?
கர்ப்பம் தரிக்கும் போது பாலியல் நிலைகளுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் உள்ளன. டாக்கி பொசிஷனை விட மிஷனரி முறை கருத்தரிக்க சிறந்தது என்று கூறப்படுகிறது.ஆனால் இதுவும் ஒரு கட்டுக்கதை ஆகும். டாக்டர்களின் கூற்றுப்படி, அந்த பாலியல் நிலையை ஒருவர் எடுக்க வேண்டும், இது தம்பதியரை நன்றாக உணர வைக்கிறது. மேலும் கருத்தரித்தலையும் வேகமாக்கும்.

உடலுறவுக்குப் பிறகு படுத்துக் கொள்ளுங்கள்
இது பயனற்ற முறையாக பலராலும் கூறப்படுகிறது, ஆனால் உண்மையில் இது நல்ல பலனளிக்கிறது. சுமார் 10-15 நிமிடங்கள் உடலுறவுக்குப் பிறகு படுக்கையில் படுத்துக்கொள்வது கருப்பை வாயில் நுழையும் விந்தணுக்களின் இயக்கத்தை எளிதாக்குகிறது. மேலும் உடலுறவு முடிந்த பிறகு உடனே குளிக்க செல்வதைத்த தடுக்கவும், இது விந்தணுக்கள் எளிதில் கருப்பையை அடைய உதவுகிறது.
MOST READ: இத்தனை நிமிடத்திற்கு குறைவாக ஆணுறுப்பு விறைப்பிருக்கும் ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது...

கர்ப்பத்திற்கு முந்தைய பரிசோதனையை செய்யுங்கள்
நமது உடல் தனித்துவமானது மற்றும் நம்மில் சிலருக்கு ஸ்பைனா பிஃபிடா போன்ற பிறப்பு குறைபாடுகள் இருக்கலாம். நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சி செய்யத் தொடங்குவதற்கு முன் ஒரு பரிசோதனையைப் பெறுங்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் கொண்ட வைட்டமின்களை மருத்துவரிடம் கேட்டு பெறுங்கள். இது பிறப்பு குறைபாடுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது மற்றும் கருத்தரிக்கும் அளவுக்கு உங்களை பாலியல் ஆரோக்கியமாக ஆக்குகிறது.

மனஅழுத்தம் இல்லாமல் இருங்கள்
மன அழுத்தம் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானதாகும். மனஅழுத்தம் ஆண்களின் பாலியல் செயல்திறனை பாதிக்கிறது, இதனால் கருத்தரித்தல் தடுக்கப்படுகிறது. மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, உங்களைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுங்கள். இசை, தியானம் அல்லது எந்த சுவாச உடற்பயிற்சி மூலமாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட பிறகு உங்கள் உடலுறவில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.

பிறப்புக் கட்டுப்பாடுகளை தவிருங்கள்
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்வது இயற்கையான அண்டவிடுப்பின் செயல்முறைக்கு இடையூறாக இருக்கும். இந்த மாத்திரைகளின் நுகர்வு நிறுத்தப்பட்ட பிறகும், உங்கள் உடல் அந்த சாதாரண ஹார்மோன் அளவைப் பெற சிறிது நேரம் ஆகலாம். நீங்கள் கடைப்பிடிக்கும் பிறப்பு கட்டுப்பாட்டு முறை மற்றும் அண்டவிடுப்பின் செயல்முறையை திரும்பப் பெற எடுக்கும் நேரத்தைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

புகைபிடித்தல் மற்றும் மதுவை விட்டு விடுங்கள்
நீங்கள் புகைக்கிறீர்களா அல்லது குடிக்கிறீர்களா? உடனே அதை விட்டு விடுங்கள். கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும்போது ஒரு பெண் செய்யக்கூடிய மிக மோசமான செயல் இது. மேலும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் காஃபைன் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். கருத்தரிக்கும் செயல்பாட்டில் இந்த பொருட்களின் நுகர்வு உங்கள் எதிரியாக இருக்கலாம்.

எடையைக் குறைக்கவும்
இது முற்றிலும் பொருத்தமற்றது என்று தோன்றினாலும், ஆனால் ஒரு சிறிய எடையைக் கூட குறைப்பது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். கணிசமாக உடல் பருமனாக இருந்தால், ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும், ஏனெனில் இது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும்.

சரியாக சாப்பிட வேண்டும்
ஆரோக்கியமான உடல் அமைப்பை அடைய சரியான வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உட்கொள்வது அவசியம். மிகவும் பொதுவான ஹார்மோன் கோளாறு பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் ஆகும், இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. எனவே ஆரோக்கியமான உணவுமுறை கருத்தரித்தலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications