Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கொரோனா வைரஸ் - கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமாக இருங்க...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதியை கிளப்பி வருகிறது. இந்த கொரோனா தாக்குதலில் இருந்து நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் பலரது உயிரை குடித்து வருகிறது. நோயாளிகளையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் நாம் சமைத்து சாப்பிடும் உணவுகள் சுத்தமானதாக இருக்கிறதா என்று பார்த்து சாப்பிடுங்கள். முக்கியமாக கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாதுகாப்பான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சனி தொந்தரவில் ஆரம்பித்து மூச்சை நிறுத்தும் நோயாக மாறி விடுகிறது கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் வடிவத்தை பார்த்தால் சூரிய கதிர் வீச்சை போலவே இருக்கிறது. சூரியனை பார்க்கும் போது தெரியும் கதிர்வீச்சு போல இந்த கொரோனா வைரஸ் தெரிகிறது. சூரியனுக்கு நிகரானது இந்த வைரஸ் பல இடங்களில் பற்றி பரவுகிறது.
கொரோனா வைரஸ் 10 ஆயிரம் வருடத்திற்கு முன்பே வன விலங்குகளை தாக்கியிருக்கிறதாம். உலகத்தில் ஆறு வகையான வைரஸ் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது ஏழாவது வகையான வைரஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த இந்த வைரஸ் வன விலங்குகளையும் பாலூட்டிகள், பறவைகளை தாக்கியுள்ளது. வுகானில் பற்றி இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

ஏழாவது வைரஸ் கொரோனா
சீனாவில் உள்ள வன விலங்குகள் மாமிசங்கள் விற்கும் சந்தையில் இருந்து பரவியிருக்கிறது என்று சொன்னாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள் என அனைத்தையும் கபளீகரம் செய்கிறது இந்த வைரஸ். கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வகையான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வைரஸ்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தற்போது ஏழாவது விதமான வைரஸ் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பீதி
இந்த வைரசுக்கு நாவல் கொரோனா வைரஸ் பெயர் வைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் சாதாரண சளி காய்ச்சல் என்று ஆரம்பிக்கிறது. உடம்பிற்குள் புகும் வைரஸ் முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. தொண்டையை பாதிப்பு சுவாசப்பிரச்சினையை தருகிறது. வயதானவர்கள், இதயநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பற்றி பரவுகிறது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

காற்றில் பரவும் நோய்கள்
கர்ப்பிணிகளை எந்த நோயும் எளிதாக தாக்கும். சின்னம்மை, சர்க்கரை நோய் போன்றவை எளிதில் பாதிக்கும். எனவே தான் கர்ப்ப காலத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசப்பிரச்சினைக்கு ஆளாகின்றனர். காற்றில் இந்த வைரஸ் 24 மணிநேரம் உயிரோட இருக்குமாம். காற்றின் மூலம் இந்த வைரஸ் யாரை எப்போது தாக்கும் என்று தெரியாது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகள் முகத்தை மூடி மாஸ்க் போட்டுக்கொள்வது அவசியம்.

நோய்களும் மருந்தும்
சீனாவில் பல லட்சக்கணக்கான மக்கள் இப்போது முடங்கிப் போய் இருக்கிறார்கள். காரணம் இந்த நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் சிக்கன் பாக்ஸ், அம்மை நோய், போலியோ நோய் சிக்கன் குனியா, பன்றிக்காய்ச்சல் என பல நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு குணப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதே போல சளி காய்ச்சல் சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த நோய்க்கும் நம்ம ஊர் சித்த மருத்துவத்தில் கண்டிப்பாக மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பலாம்.

சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள்
இந்த கொரோனா நோய் கோழிகளை எளிதாக தாக்குகிறது. எனவே சுகாதாரமான முறையில் கோழிகளை சரியாக சமைத்து சாப்பிட வேண்டும். சுகாதாரமானமுறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இந்த நோய் பற்றிய அச்சம் நீங்கும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

கைகளை கழுவுங்கள்
சாப்பிடும் முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கைகளை கழுவுங்கள், ஹோட்டலில் சாப்பிடப்போனால் அங்கே சரியான முறையில் சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா என பாருங்கள். வீட்டில் சாப்பிடும் தட்டுக்களை நன்றாக கழுவுங்கள். வீட்டு சாப்பாடுகளை சரியாக சமைத்து சாப்பிடுங்கள். குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்களை தவிர்த்து விடுங்கள். நீங்களாக சளி, இருமல் பாதிப்பிற்கு ஆளாக வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications
