ஆண்களின் வயது அதிகரிப்பதால், ஆண்மையில் தடை ஏற்படுமா?

கருவுறுதல் என்பது தான் குழந்தை உருவாக்கத்தின் அடிப்படை; வயது அதிகரிப்பதால், ஆண்மையில் தடை ஏற்படுமா என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கென ஒரு வாரிசை பெற்றுக் கொள்ள வேண்டும்; தான் இறந்த பிறகும் கூட தன் பிரதிபலிப்பு, தன் வம்சத்தின் வேர் வளர வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கும். ஆனால், ஒரு பெண்ணை மணந்து தனக்கான வாரிசை உருவாக்கிக் கொள்ள பல அடிப்படை தகுதிகள் ஆண்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

impact of age on male fertility

எந்த வித தகுதியும் காட்டாமல் தனது ஆண்மையை நிரூபிக்க பல இடங்கள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், தனக்கென ஒரு குழந்தை மற்றும் குடும்பம் என்பதை அமைத்து வாழ்வதையே சமூகம் நல்ல முறையில் ஏற்கிறது; அதுவே நிரந்தரமும் கூட. இப்பொழுது இப்படி ஒரு குடும்பத்தை அமைக்க ஆணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆணுக்கான தகுதி!

ஆணுக்கான தகுதி!

ஒரு ஆண் நல்ல கை நிறைய சம்பளம் வாங்கி, தான் மணந்து கொள்ள போகும் பெண், பிறக்க போகும் பிள்ளை என அனைவரையும் வைத்து வாழ்வில் காப்பாற்றும் அளவு தகுதியுடன் இருக்கிறாரா? என்பது கண்டிப்பாக பார்க்கப்படுகிறது; இந்த தகுதி ஆண்களுக்கு ஏற்பட்ட பின்னரே அவருக்கு பெண் பார்த்து மணம் முடிக்க பெற்றோரும், பெண் கொடுக்க மற்றோரும் தயாராகின்றனர். இந்த ஒரு தகுதியை ஆண்கள் குடும்பம் அமைத்து வாழ, தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது!

வயது பறந்து விடும்!

வயது பறந்து விடும்!

ஆனால், இப்படிப்பட்ட ஒரு தகுதியை உருவாக்கிக் கொள்வதற்கு முன், ஆணின் வாலிபம் மற்றும் வயது பறந்து ஓடி, முதுமை வந்து ஆணை தஞ்சம் அடைய தொடங்கி விடும். ஒரு சில ஆண்களுக்கு மட்டும் தான், வாலிப வயதிலேயே இந்த தகுதியை பெற்று திருமணம் வாய்ப்பு கிடைக்கிறது; மற்ற அனைத்து ஆண்களும் இருபதுகளின் முடிவில், முப்பதின் தொடக்கத்தில் தான் இந்த தகுதியை ஓரளவாவது பெற்று, திருமணம் செய்து கொள்கின்றனர்!

என்ன பயன்?

என்ன பயன்?

வயதும் வாலிபமும் அழிந்து போகும் நிலையில் திருமணம் செய்து என்ன பயன்? ஆம் நண்பர்களே! சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆண்கள் 30 வயதை எட்டிய பின்னர், 30 வயதிற்கு பின்னான ஒவ்வொரு வருடமும் ஒரு சதவிகிதம் ஆண்மை அவர்களில் இருந்து குறைவதாகவும், சில ஆண்களில் இந்த ஆண்மை குறைவு 35 வயதிற்கு மேல் தொடங்குவதாகவும் கண்டு அறியப்பட்டு உள்ளது.

விந்து திரவம்!

விந்து திரவம்!

30 வயதிற்கு பின்னர், ஆண்மை குறைகிறது என்று கூறுவது விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவதை தான். ஆனால், மேலும் ஒரு வியப்பான விஷயம் ஆண்களின் உடலில் நடக்கிறது, அது தான் விந்து திரவம் குறைதல். என்ன தான் விந்து அணுக்கள் அதிகமாக இருந்தாலும், அவற்றை சரியாக பெண்ணின் கருப்பையில் அண்டத்திடம் சேர்ப்பது இந்த விந்து திரவம் தான்.

அப்படிப்பட்ட இந்த திரவம் 25 வயதிலேயே ஆண்களுக்கு குறைய ஆரம்பிக்கிறது. ஆண்கள் 55 வயதை அடையும் பொழுது, அவர்தம் உடலில் இருந்து 50 சதவிகிதம் குறைந்து விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றங்கள் நிகழலாம்!

மாற்றங்கள் நிகழலாம்!

30 வயதை தாண்டிய ஆண்களின் தம்பதிய வாழ்க்கையிலும் சரி, அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் சரி விரும்பத்தகாத பல மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது; அதாவது கருக்கலைப்பு, கரு உருவாகாமல் இருத்தல், தாம்பத்தியத்தில் சந்தோசம் இன்மை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் 30 வயதிற்கு மேல் குடிப்பழக்கம், புகை மற்றும் பிற பழக்கங்கள் இருந்தால், அப்பாவாக மாறுவது என்பது மிகவும் கடினமாகி விடலாம்.

வயதை தவிர வேறு காரணம் உண்டா?

வயதை தவிர வேறு காரணம் உண்டா?

ஆண்மை குறைவு ஏற்பட வயது மட்டுமே ஒரு காரணம் அல்ல; நாவு பழக்கம், புகை மற்றும் மது பழக்கம், உடற்செயல்பாடு, மரபு அதாவது தலைமுறை மற்றும் மன அழுத்தம் போன்ற விஷயங்கள் கண்டிப்பாக ஆண்களில் ஆண்மை குறைவு ஏற்பட சில முக்கிய காரணங்களாக உள்ளன! இந்த காரணங்களை அறிந்து, ஆண்கள் திருத்திக் கொண்டால் மட்டுமே அவர்களால் அப்பாவாக முடியும்.

சில உண்மைகள்!

சில உண்மைகள்!

45 வயதிற்கு பின் ஆண்கள் மணம் புரிந்து கொண்டால் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள முயன்றால், அப்பொழுது கண்டிப்பாக பெண்களில் கருக்கலைப்பு ஏற்படும்; கரு அவர்களின் வயிற்றில் தாங்காது. ஏனெனில் வயது முதிர்ச்சியின் காரணமாக, விந்து அணுவும் வயது முதிர்ந்து செயல்பாட்டினை இழந்து விட்டு இருக்கும். மேலும் அதனை மீறி குழந்தை பிறந்தால், கண்டிப்பாக குழந்தைக்கு ஆட்டிசம், மனநலம் பாதிப்பு போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சரியான வயது எது?

சரியான வயது எது?

ஆண்கள் குழந்தை பேரருட் கொள்ள மிகவும் சரியான வயது என்பது 22 முதல் 25 வயது வரையிலான கால கட்டம் தான். இந்த சமயத்தில் தான் ஆண்களின் ஆண்மை மிகச்சரியான நிலையில் இருக்கும்; குழந்தை பிறப்பும் விரைவில் நடக்கும்; குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்! மேலும் 25 வயதில் ஆண் கலவி கொண்டு குழந்தை பெற்று கொள்ள முயற்சித்தால் நான்கரை மாதங்களில் கருத்தரித்தல் நிகழ வாய்ப்பு உண்டு; இதுவே 45 வயது ஆண் முயற்சித்தால் கரு உருவாகவாக இரண்டு ஆண்டுகள் தேவைப்படலாம்.

மருத்துவ கலந்தாய்வு!

மருத்துவ கலந்தாய்வு!

ஆண்கள் தங்களின் ஆண்மை குறித்த விவரம் மற்றும் நிலை அறிந்து கொள்ள ஒரே வழி, மருத்துவரை நாடி பரிசோதனை செய்து கொள்வது தான். ஆண்களின் ஆண்மை குறைவு தாம்பத்தியத்தில் சந்தோசம் இல்லாத பொழுது, குழந்தை பிறக்காத பொழுது தான் தெரிய வரும்; அப்பொழுது வயது கடந்து போய் இருக்கும். அந்த ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் குழந்தை பெற்று கொள்ள முயற்சிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம்.

மலடி பட்டம் வேண்டாம்!

மலடி பட்டம் வேண்டாம்!

ஆகையால், திருமணம் அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான திட்டமிடல் செய்யும் பொழுதே மருத்துவ பரிசோதனை செய்து உங்கள் உடலின் நிலை பற்றி அறிந்து செயல்பட்டால், நிகழ்வுகளை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். மேலும் குழந்தை பிறப்பு நிகழாமல், தடை பட்டு போனால் பெண்கள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம் அல்ல, ஆண்களிலும் பிரச்சனை இருக்கலாம் என்று புரிந்து கொண்டு, இனி மேலாவது பெண்களை மலடி என்று பட்டம் கட்டி காயப்படுத்த வேண்டாம் என்ற சிறு வேண்டுகோளை உங்கள் முன் வைத்து, பதிப்பினை நிறைவு செய்கிறேன்!

பதிப்பு உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், கண்டிப்பாக பதிப்பை பகிர்ந்து மற்றவர்கள் விழிப்புணர்வு பெற உதவவும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 8, 2018, 12:50 [IST]
Desktop Bottom Promotion