Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பிரசவ அறைக்குள் ஒரு ஆண் சென்றால் அவன் என்ன ஆவான் தெரியுமா?
தந்தையின் பார்வையில் சிசேரியன் அனுபவம் எப்படி இருந்தது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு ஆனந்தத்தை தருகிறதோ, அதே போல தான் ஒரு ஆணுக்கும். ஒவ்வொரு ஆணுக்கும் தனது கருவில் இருக்கும் போது அசையும் ஒவ்வொரு சின்னச்சின்ன அசைவுகளையும் உணர முடியவில்லையே என்ற தவிப்பு இருக்கும்.
அதுமட்டுமின்றி, தனது மனைவிக்கு பிரசவ வலி வரும் போது ஒரு ஆண் செய்வதறியாமல் திகைத்து போகிறான். அவனது மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் அளந்துவிட முடியாது. ஒரு ஆண் என்பவன் குழந்தையை சுமக்கவில்லையே தவிர, தனது மனைவி மற்றும் தன் குழந்தை மீது கொண்ட அன்பினால், தனது மனைவி மற்றும் குழந்தையை மார்ப்பில் எந்த நேரமும் சுமந்து கொண்டே தான் இருக்கிறான் என்பதற்கு உதாரணம் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்து கொண்ட தனது மனைவியின் சிசேரியன் கதை!

சிசேரியன்
கிட்டத்தட்ட 35 வாரங்கள் ஆகியிருக்கும், மருத்துவர் எனது மனைவிக்கு சிசேரியன் மூலமாக தான் குழந்தை பிறக்கும் என்று தெரிவித்துவிட்டார். நாங்கள் மருத்துவர் குறித்து கொடுத்த நாளுக்காக மிகவும் ஆவலுடனும், மனதில் ஏதோ ஒரு பயம் கலந்த எதிர்பார்பையும் சுமந்து கொண்டு காத்திருந்தோம். மருத்துவர் கூறிய நாளும் வந்தது.

காத்திருந்தோம்!
சிசேரியன் செய்வது ஒன்றும் சாதாரணம் இல்லை என்பது அப்போது தான் புரியவந்தது. சிசேரியன் செய்ய காத்திருப்பவர்களது வரிசை ஒரு நீண்ட வரிசையாகும். நல்லவேளையாக நாங்கள் அன்று வெகுவிரைவாகவே சென்றுவிட்டோம். அதனால் வரிசையில் இரண்டாவது இடம் கிடைத்தது. சிசேரியன் செய்வதினால், என் மனைவி முந்திய நாள் இரவில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. அவள் வலியுடன் பசியுடனும் இருந்தது எனக்கு புரிந்தது.

பாவம் என் மனைவி
ஆனால் நான் எனது காலை உணவை, ஒரு பள்ளி குழந்தையை போல டிப்பன் பாக்ஸில் கொண்டு வந்து, அவள் முன்னரே சாப்பிட்டேன். ஒரு டீயையும் குடித்தேன்! நான் சாப்பிட்டதை பார்த்து அவளுக்கும் பசித்திருக்கும். ஆனாலும் எப்படியோ எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவள் அமைதியாக இருந்தாள். நான் என்னை சுற்றி இருந்த சிலரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்து எனது நேரத்தை நகர்த்தினேன்..

புதிய உடைகள்!
சிசேரியனுக்காக எனது மனைவியை ஒரு அறைக்குள் அழைத்து சென்றுவிட்டனர். என்னையும் உள்ளே அனுமதித்தினர். ஆனால் அதற்கு முன்னர் அந்த அறையினுள் உள்ள மருத்துவர்களை போலவே எனக்கு உடையும், தலைக்கு வலை போன்ற ஒன்றையும் மாட்டிவிட்டார்கள். அந்த ஒற்றை அறையில் பலர் இருந்தார்கள். சிலர் உள்ளேயும் வெளியேயும் உலவி கொண்டிருந்தார்கள். எனக்கு எரிச்சலானது, எதற்கு இந்த அறையில் இத்தனை பேர் என்று.. எனக்கு மருத்துவத்தை பற்றி எதுவும் தெரியாததால் அமைதி காத்துவிட்டேன்.

பதற்றம் வந்தது..!
சிசேரியன் ஆரம்பிக்க போகும் சமயம் அது, எனக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்தது போல் இருந்தது.. உடல் எல்லாம் ஒரே நடுக்கம். எங்களுக்கு பிறக்க போவது இரட்டை குழந்தை தான் என்று எங்களுக்கு முதலிலேயே கூறியிருந்தார்கள். மருந்துவரும், நர்ஸ்சும் சிசேரியன், குழந்தையை பாதுக்காக்கும் முறை, கவனிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.. எனக்கோ அதை எல்லாம் கேட்டவுடன், கால்கள் ஒரு மாரத்தான் வீரனை போல நின்ற இடத்தில் ஓடுவது போல நடுக்க ஆரம்பித்துவிட்டது.

எரிச்சலடைந்தேன்!
நான் நான் நர்ஸ்களிடம் ஒரிரு வார்த்தைகளை பேசி பேசி என் உதறலை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தேன். நான் சிசேரியன் நடக்கும் அறை மிகவும் அமைதியாக இருக்கும் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், அது அவ்வாறு இல்லை... ஒரு ரேடியோ பாடிக்கொண்டிருந்தது... நர்ஸ்கள் அரட்டையடித்து கொண்டிருந்தார்கள்....
எனக்கோ, இதுவும் அலுவலகம் போல் தானே, இப்படியா பேசிக்கொண்டே வேலை செய்வார்கள் என்று தோன்றியது. அதுமட்டுமில்லாமல் இது உயிர்கள் சம்பந்தப்பட்டது, நானோ நடுக்கி கொண்டிருக்கிறேன் ஆனால், இவர்கள் என்னவென்றால் அசால்ட்டாக இருக்கிறார்களே என்று கோபம் வந்தது.

என் குழந்தை...!
அதே சமயம், சிசேரியன் வேகவேகமாக நடந்தது... என் குழந்தை வெளி வருவதை பார்க்க எனக்கும் ஒரு அனுமதியளித்தார்கள். எனது குழந்தையை நான் கண்டுவிட்டேன். அந்த பக்கமாக இருந்து ஒரு சத்தம் வந்தது.. வாவ், இந்த குழந்தை நாங்கள் நினைத்ததை விட நல்ல எடையுடன் உள்ளது.. நானும் என் மனைவியும் புன்னகையை பரிமாறிக்கொண்டோம். மூன்று நீண்ட நெடும் நிமிடங்களுக்கு பிறகு எங்களது குழந்தை வெளியில் வந்தது... அந்த நிமிடங்கள் எல்லாம் எனக்கு வருடங்களாக தோன்றியது. எங்கள் குழந்தை அழுதது....! அப்பாடா... என்று மனது லேசானது..!



Click it and Unblock the Notifications











