கர்ப்பக் காலத்தில் சாக்லேட் சாப்பிடுங்கள், கரு வளர்ச்சிக்கு உதவும்!!!

Posted By:
Subscribe to Boldsky

சாக்லேட் பிடிக்காத நபர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவு பட்டியலில் சாக்லேட் தான் முதலில் வந்து நிற்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கூட சமயத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சாக்லேட் சுவைக்க விரும்புவார்கள்.

குழந்தையின்மை பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இயற்கை வைத்திய டிப்ஸ்!!

சமீபத்திய ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் தினமும் சாக்லேட் சாப்பிடுவது கரு வளர்ச்சிக்கு பெருமளவு உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் சாக்லேட்

தினமும் சாக்லேட்

கர்ப்பிணி பெண்கள் தினமும் சாக்லேட் சாப்பிட்டு வருவது நஞ்சுக்கொடி மற்றும் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது என சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

தாய்மை மற்றும் கரு சமூகம் நடத்திய ஆராய்ச்சியில், தினமும் சாக்லேட் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை சீராக்கி கருவின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக் காலம்

ஆய்வுக் காலம்

இந்த ஆய்வில் 11 - 14 வார கர்ப்பத்தில் இருக்கும் 129 பெண்கள் பங்கெடுத்தனர், இவர்களை இரண்டு குழுவாக பிரித்து குறைந்த மற்றும் மிகுதியான ஃப்ளாவனால் (Flavanol) கொண்ட சாக்லேட் கொடுத்து 12 வாரங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.

வித்தியாசம் இல்லை

வித்தியாசம் இல்லை

இந்த இரண்டு குழுக்கள் மத்தியிலும் பெரியதாய் எந்த வித்தியாசமும் இல்லை. இரு குழுவில் பங்கெடுத்தவர்களும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மை தான் அடைந்திருந்தனர். இரு குழுவை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இரத்த ஓட்டம் சீரடைந்திருந்தது.

இம்மானுவல் புஜோல்டு கூறுகையில்

இம்மானுவல் புஜோல்டு கூறுகையில்

இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர் இம்மானுவல் புஜோல்டு," இந்த ஆய்வு சாக்லேட் உட்கொள்வது கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சியை வலுவாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது என கண்டறிய உதவியது. இதற்கு இதில் இருக்கும் ஃப்ளாவனால் (Flavanol) தான் நேரடி காரணமாக இருக்கிறது என்றும் கூறினார்.

அளவு

அளவு

இந்த ஆய்வு இத்தோடு நின்றுவிடவில்லை. எந்த வகையான சாக்லேட் எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து மேலும் ஆய்வுகளை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chocolate During Pregnancy Could Help foetal Growth

Chocolate During Pregnancy Could Help foetal Growth, Scientist says.
Subscribe Newsletter