முதல் முறை பெற்றோரானவர்கள் கேட்கும் 12 கேள்விகளும்... அதற்கான பதில்களும்...

By: Ashok CR
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பத்துடன் வாழ்வது குறைந்துவிட்டது. பெரும்பாலான இளம் தம்பதிகள் திருமணத்திற்கு பின் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். இப்படி தனிக்குடித்தனம் பெயர்வதால், பலரும் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அதிலும் குழந்தை பிறந்து விட்டால், குழந்தையை தனியாக பராமரிப்பதில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதே சமயம் பல கேள்விகளும் மனதினுள் எழும். அப்படி முதன்முறையாக பெற்றோராகுபவரின் மனதில் எழும் பொதுவான சில கேள்விகளுக்கான விடை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதில்

பதில்

முதல் 12 மாதத்திற்கு, குறிப்பாக முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க 'தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' பரிந்துரைக்கிறது. "தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற பயன்கள் இருந்தாலும் கூட, எப்போது ஒரு தாய் தாய்ப்பால் கொடுப்பதன் மீது விருப்பத்தை இழக்கிறாரோ, அப்போது அவர் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடலாம்," என நியூயார்க் நகரத்தில் மவுண்ட் சினாயில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் உள்ள பீடியாட்ரிக் ப்ரெஸ்ட்ஃபீடிங் மெடிசினின் இயக்குனரான எரிக்கா ப்ராடி, எம்.டி. கூறியுள்ளார். மறுபுறம், குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெற்றவுடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. தாய்ப்பால் கொடுப்பதை நீட்டித்தால் இரண்டு பேருக்குமே சந்தோஷம் தான்.

பதில்

பதில்

இதற்கு ஆம் என்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். "ஆனால் பல பெற்றோர்களுக்கு நடைமுறையில் இது சாத்தியப்படாது. அதனால் ஒவ்வொரு முறை பால் கொடுத்த பின்னரும் பால் பாட்டிலை சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கழுவிக் கொள்ளவும். இரவு நேரத்தில் மட்டும் ஸ்டெரிலைஸ் செய்து கொள்ளவும்," என குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் "மயோ கிளினிக் கைட் டு யுவர் பேபி'ஸ் ஃபர்ஸ்ட் இயர்"-ன் ஆசிரியரான எஸ்தர் க்ரிஷ், எம்.டி. கூறியுள்ளார். பராமரிப்பாளர் மூலமாக குழந்தைகளுக்கு செல்லக்கூடிய பாக்டீரியாக்களும் கிருமிகளும் இதன் மூலம் கொல்லப்படும். அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வதும் சுத்தமாக இருப்பதும் கூட ஸ்டெரிலைஸ் செய்வதை போலவே முக்கியமான ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள். மேலும் குழந்தைகளின் பொருட்களை வாயில் வைத்துக் கொண்டு எப்போதும் கழுவக் கூடாது. "உலகத்திலேயே மிகவும் அழுக்கான இடம் எது என்றால் அது மனிதனின் வாய் தான் - நாயை காட்டிலும் மோசமானது!" என டாக்டர் க்ரிஷ் கூறியுள்ளார்.

பதில்

பதில்

இது நடக்கும், ஆனால் அதற்கு நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும். பெரும்பாலும் இரண்டு மாத குழந்தைகள் ஐந்து மணி நேரத்திற்கு மட்டுமே தொடர்ச்சியாக தூங்குவார்கள்; பின் பசியால் எழுந்து விடுவார்கள் என ஜெர்னல் பீடியாட்ரிக்ஸில் வெளிவந்த ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, அடுத்த நான்கு மாதங்களில் 8 முதல் 12 மணி நேரம் வரை தூங்க தொடங்குவார்கள் என பிலடெல்பியாயில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் ஸ்லீப் சென்டரின் இணை இயக்குனரான ஜோடி மிண்டெல், பி.எச்.டி. கூறியுள்ளார். ஆனாலும் கூட இரவு முழுவதும் தூக்கம் என்பது முழுமையாக இருக்காது. காரணம் உங்கள் குழந்தை தூங்குவது இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரையாக இருக்கும். "5 மாதம் முடியும் வரை இரவு முழுவதும் குழந்தைகள் தூங்க மாட்டார்கள்," என டாக்டர் மிண்டெல் கூறுகிறார்.

பதில்

பதில்

இல்லை. "பரிணாமவியல் படி பேசுகையில், குழந்தைகள் என்றால் தூக்கி வைத்துக்கொள்ளப்பட வேண்டியவர்களே. அதனால் தான் அவர்கள் அரவணைப்பை எதிர்ப்பார்க்கிறார்கள்," என டாக்டர் ப்ராடி கூறுகிறார். பகல் நேரத்தில் உங்கள் குழந்தையை உங்கள் அரவணைப்பில் வைத்துக் கொள்வது நல்லது தான்; ஆனால் இரவு கதையே வேறு. இரவு நேரத்தில் தூங்குவதற்காக தூக்கி வைக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கும் குழந்தைகள் சார்பில்லா முறையில் தூங்குவது சிரமமாகும். அதேப்போல் அவ்வகையான குழந்தைகள் இரவு நேரத்தில் விழித்துக் கொண்டாலும் அவர்களை மீண்டும் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பது சிரமமாகும். உங்கள் குழந்தைக்கு தூக்கம் சொக்கும் நேரத்தில் தொட்டிலில் போடுங்கள். அப்போது தான் தனியாக தூங்கிக் கொள்ள பழகுவார்கள்.

பதில்

பதில்

அமைதி! பொதுவாக தங்கள் தூக்கத்தின் பெரும்பாலான நேரத்தை வெட்டி இழுத்தல், அசைதல், சூப்பும் சத்தங்கள், கைகளை அசைத்தப்படியே தான் கழிப்பார்கள் என டாக்டர் மிண்டெல் கூறுகிறார். முனைப்புடனான தூக்கம் என்பது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என வல்லுனர்கள் நம்புகின்றனர். 6 மாதத்தில், உங்கள் குழந்தை பெரும்பாலான நேரத்தில் அமைதியாக தூங்குவார்கள்.

பதில்

பதில்

கண்டிப்பாக. பழுப்பு, வெளிறிய மஞ்சள் மற்றும் கடுகு விதை நிறங்களும் கூட இயல்பானதே. இப்படி நிறத்தில் வேறுபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது உங்கள் குழந்தை பசும்பால் குடிக்கிறதா அல்லது தாய்ப்பால் குடிக்கிறதா என்பதை பொறுத்து அமையும். வெள்ளையாக, கருப்பாக அல்லது சிவப்பாக இல்லாத வரை மருத்துவரை அணுக தேவையில்லை என டாக்டர் க்ரிஷ் கூறுகிறார். அப்படி இல்லையென்றால் அது சுகவீனத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். அது என்னவென்பதை உங்கள் மருத்துவர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒரு நாளைக்கு குழந்தை எத்தனை முறை போகிறது, நாளுக்கு 10 முறையா அல்லது வாரத்திற்கு சில முறையா என்பதை எல்லாம் தீர்மானித்து வைக்காதீர்கள். மிக முக்கியமாக: ஒரு நாளைக்கு 6 முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு நல்லபடியாக நீரேற்றம் நடைபெற்று, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது என அர்த்தமாகும்.

பதில்

பதில்

இல்லை. சொல்லப்போனால், அது பயனுள்ளதாக இருக்கும் தருணங்கள் உள்ளது. "உங்கள் குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றால், அவர்களை தூக்கத்தில் சீரான இடைவேளையில் எழுப்பி பால் கொடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்துவார். அப்போது தான் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்," என டாக்டர் மிண்டெல் கூறுகிறார். அதேப்போல் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பாகவும் ஒரு முறை பால் கொடுப்பதும் கூட நல்ல மூலோபாயமாகும். அப்படி செய்வதால், இரவு நேரத்தில் அவர்கள் தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு தூங்குவார்கள். 6 மாதங்கள் முடிவடைந்த பிறகு, நீண்ட தூக்கத்திற்குப் பிறகு உங்கள் குழந்தையை நீங்கள் தாராளமாக எழுப்பலாம்.

பதில்

பதில்

எப்போதும் அணிவதற்கு மேல் மேலும் ஒரு அடுக்கு ஆடையை அணிவிக்கவும். "ஒரு சட்டையும் மெல்லிய கோட்டும் அணிவித்தால், அதன் மீது ஒரு போர்வையையும் போர்த்திக் கொள்ளுங்கள்," என டாக்டர் ப்ராடி கூறுகிறார். ஆனால் குழந்தையை நீங்கள் பெல்ட் போட்டு உங்கள் உடலுடன் கட்டிக்கொண்டால், இது தேவையில்லை. அதற்கு காரணம் உங்கள் உடலின் வெப்பமே அதற்கு போதுமானதாக இருக்கும்.

பதில்

பதில்

ஏற்படலாம். மதுபானம் குடித்தவுடன் அது உங்கள் மார்பக பாலில் கலக்கும். உங்கள் அமைப்பு மீண்டும் சுத்தமாவதற்கு 2-3 மணி நேரங்களாகும். அதனால் தாய்ப்பால் கொடுத்த பிறகு குடித்தால் சரியாக இருக்கும்; ஏனென்றால் மீண்டும் தாய்ப்பால் கொடுக்க மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் அல்லவா என டாக்டர் ப்ராடி கூறுகிறார். ஆனால் சீக்கிரமாகவே உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய இடைவெளி இருந்தால் அல்லது ஒரு கிளாஸிற்கு மேல் குடித்தாலோ அல்லது அதிக போதையுள்ள பானத்தை குடித்தாலோ, அதற்கு முன்னரே சேர்ந்திருக்கும் மார்பக பாலை எடுத்து விடுங்கள். அந்த பாலை புட்டியில் வைத்து குழந்தைக்கு கொடுங்கள்.

பதில்

பதில்

அப்படியெல்லாம் இல்லை. பொதுவாக குழந்தையின் தலை உடலின் மற்ற அங்கங்களை விட பெரியதாக இருக்கும். இதனால் வெப்ப இழப்பு அதிகமாக இருக்கும். அதனால் அதன் தலையில் 24 மணி நேரமும் தொப்பியை போட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. "குளிர் நிறைந்த நாளில் வெளியே செல்லும் போது குழந்தைக்கு தொப்பி அணிவிக்கலாம்," என டாக்டர் க்ரிஷ் கூறுகிறார்.

பதில்

பதில்

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து அடுத்த முறை கொடுப்பதற்கு முழு மூன்று மணி நேரம் இருக்க வேண்டும் என்பதை தான் உங்கள் மருத்துவர் குறிப்பிட்டிருப்பார். முதலில் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நீண்ட செயல்முறையாக தெரியும். நாளடைவில் அது வேகமடையும். "சில வாரங்களில் எல்லாம் உங்கள் குழந்தை 20 முதல் 30 நிமிடங்களில் குடிக்க பழகி விடுவார்கள்," என டாக்டர் க்ரிஷ் கூறுகிறார். அப்படி இல்லையென்றால், ஊட்டச்சத்திற்கு பதிலாக அது சூப்புவதை அதிகம் விரும்புகிறது என அர்த்தமாகும். அப்படியானால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, வாயில் சூப்பும் பொம்மையை கொடுக்கவும்.

பதில்

பதில்

கண்டிப்பாக. "இது எப்போதும் நடைபெறும். அதனால் குழந்தையின் அகநிலைக் கடிகாரத்தை தூண்டி விட நீங்கள் உதவிட வேண்டும்," என டாக்டர் மிண்டெல் கூறுகிறார். வாக்கிங் செல்லும் போது அல்லது சூரிய ஒளியில் அழைத்து செல்லுங்கள், குறிப்பாக காலை வேளையில். அது பகல் நேரம் என்பதை குறிக்கும் வகையில் குழந்தையிடம் சந்தோஷமாகவும், ஆற்றல் மிக்க தோணியிலும் பேசுங்கள். மாலையில் வெளிச்சத்தை குறைவாக வைக்கவும். குழந்தையிடம் மெல்லமாக பேசவும். அது தூங்கும் நேரம் என்பதை தெரிவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Twelve Questions Every First-Time Parent Asks

Here are 12 Questions Every First-Time Parent Asks. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter