பண்டையக் காலத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் இன்று பின்பற்றி வரும் பெரும்பாலான மருத்துவ முறையகள் செயற்கையானவை ஆகும். ஆனால் நமது முன்னோர்கள், அறுவை சிகிச்சையில் இருந்து, கருத்தரிப்பதை தடுக்கும் முறை வரைக்கும் அனைத்திற்கும் இயற்கையான விஷயங்களை கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்!!

வேறு எந்த உபகரணமும் இன்றி, பக்க விளைவுகள் தரும் வேதியல் முறையில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை மருந்துகளோடு ஒப்பிடுகையில் பண்டைய காலத்து கருத்தரிப்பு தடை முறை வினோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றிய பொதுவான கேள்விகளும்... பதில்களும்...

இனி, பண்டைய காலாத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகளை பற்றிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்திரனை தவிர்க்கும் முறை

சந்திரனை தவிர்க்கும் முறை

கிரீன்லாந்து பகுதியில், சந்திரனால் (நிலா) பெண்கள் கர்பமடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. அதனால், கர்பத்தை தவிர்க்க நினைக்கும் பெண்கள், தூங்க போவதற்கு முன்பு, நிலவை பாராமல், தங்களது வயிற்றில் எச்சிலை தடவிக் கொண்டு படுத்தால், அவர்கள் கருத்தரிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்துவந்துள்ளது. கருத்தரிக்க வேண்டுமெனில், முழு நிலவு நாளில், நிலவின் முன்பு ஆடைகளை அவிழ்த்து நிற்பதால் கர்ப்பம் அடைய முடியும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது.

பாதரசம்

பாதரசம்

பண்டையக் கல சீனாவில், கருத்தரிப்பதை தவிர்க்கு ஓர் அதிர்ச்சியான பழக்கத்தை பின்பற்றி வந்துள்ளனர். ஓர் எண்ணெயுடன், பாதரசத்தை கலந்து அதை அப்பெண் வெறும் வயிற்றில் பருகினால் கருத்தரிக்க முடியாது என நம்பி வந்துள்ளனர். ஆனால், பாதரசம் விஷத்தன்மை உடையது என்பது தான் ஆச்சரியம் அளிக்கிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

பண்டைய கிரீஸ் நாட்டில், ஆலிவ் மற்றும் சிடார் எண்ணெய்யை கலந்து அதை உடலுறவுக் கொள்ளும் போது, மசகு எண்ணெய்யாய் (Lubricant) பயன்படுத்தினால் வெளிப்படும் விந்தின் திறனை அது குறைத்துவிடுமாம். எனவே, இதை கருத்தரிப்பதை தவிர்க்க பின்பற்றியுள்ளனர்.

கருப்பை வாயில் தேன்

கருப்பை வாயில் தேன்

பண்டைய எகிப்து பகுதியில், உடலுறவுக் கொள்வதால் கருத்தரிக்காமல் இருக்க, பெண்ணின் கருப்பை வாய் பகுதியில் தேனை தடவிய பிறகு உடலுறவில் ஈடுபடுவார்களாம். இது, கருத்தரிக்காமல் இருக்காமல் உதவுமாம். மற்றும் பெண்கள் தேனோடு முதலையின் மலத்தோடு கலந்தும் பயன்படுத்துவார்களாம்.

வினிகர்

வினிகர்

இயற்கை கடல் பஞ்சை வினிகரில் முக்கி, பெண்ணுறுப்பிற்குள் தடவுவார்களாம். இதன் மூலம் கருத்தரிப்பதை தடுக்க முடியும் என்ற நம்பிக்கை பழங்காலத்தில் இருந்துருக்கிறது. முக்கியமாக இளம் வயதில் பெண்கள் கருத்தரிக்காமல் இருக்க இதை பின்பற்றி வந்ததாக தெரிகிறது.

விலங்குகளின் குடல்

விலங்குகளின் குடல்

தற்போதைய ரப்பர் ஆணுறையை போல, அக்காலத்தில், விலங்குகளின் குடல் பகுதியை ஆணுறைப் போல பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்க நாட்டு வரலாற்று கோப்புகளில் இம்முறையினை பற்றி கூறப்பட்டுள்ளது. பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்க இம்முறையினை பின்பற்றிவந்ததாக கூறப்படுகிறது.

ஓநாயின் சிறுநீர்

ஓநாயின் சிறுநீர்

நடு காலத்தில் வாழ்ந்து வந்த பழங்கால மக்கள் நிறைய வினோத பழக்கங்களை பின்பற்றியுள்ளனர். அதில் மிகவும் வினோதமாக இருப்பது இந்த முறை தான். பெண் ஓநாய் சிறுநீர் கழித்த இடத்தில், உடலுறவுக் கொண்ட பெண் சிறுநீர் கழித்தலும் அல்லது அவ்விடத்தில் சுற்றி நடந்து வந்தாலும் கருத்தரிப்பதை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது.

Image Courtesy

டக்கஸ் கரோட்டா (Daucus carota)

டக்கஸ் கரோட்டா (Daucus carota)

டக்கஸ் கரோட்டா எனும் மலரின் விதைகளை, நான்காம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் (பி.சி) கருத்தரிப்பதை தவிர்க்க பயன்படுத்தியுள்ளனர். இது காரட் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உடலுறவுக் கொண்டதும் இந்த விதைகளை சாப்பிட்டால், கருத்தரிப்பதை தவிர்க்க முடியும் என்ற நம்பிக்கை அப்போது இருந்திருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Strange Methods Of Birth Control From History

Do you know about the strange methods of birth control from ancient history? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter