Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் வாழ்க்கையின் புதிய கட்டமான கர்ப்பமாகும் தருணத்தில் ஆச்சரியமான பல விஷயங்களை உணர்வதோடு, மன அழுத்தத்துடனும் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்குமே கருத்தரிப்பது என்பது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படி கருத்தரிக்கக்கூடிய தருணத்தில், கருத்தரித்து விட்டோமா என்பதை அக்காலத்தில் மருத்துவரிடம் சென்று தான் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
அவசியம் படிக்க வேண்யவை: கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்கள்!!!
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக உள்ளோமா என்பதை கர்ப்ப சோதனைக் கருவியைக் கொண்டு வீட்டிலேயே உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் சிலருக்கு அந்த கர்ப்ப சோதனைக் கருவியை எப்போது பயன்படுத்தினால், சரியான முடிவு தெரியும் என்பது தெரியவில்லை.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகைய பெண்களுக்காக, கர்ப்ப சோதனைக் கருவியை எப்போது பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அந்த அறிகுறிகளைக் கொண்டு கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தினால், நிச்சயம் சரியான முடிவு கிடைக்கும்.

மாதவிடாய் தவறுதல்
கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் முதன்மையானது தான் மாதவிடாய் தவறுவது. அப்படி திடீரென்று மாதவிடாய் சுழற்சியானது தவறினால், கர்ப்ப சோதனைக் கருவியை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

வாந்தி மற்றும் குமட்டல்
காலை வேளையில் அதிகப்படியான சோர்வையோ அல்லது வாந்தி, குமட்டல் போன்றவற்றையோ சந்தித்தால், அதுவும் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மென்மையான மார்பகங்கள்
கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தும் போது சரியான முடிவு தெரிய வேண்டுமானால், மார்பகங்கள் திடீரென்று மிகவும் மென்மையாக இளகி காணப்படும் போது மேற்கொள்ள வேண்டும்.

லேசான இரத்தக்கசிவு மற்றும் பிடிப்புகள்
இந்த முறை சற்று கடினமானதாக இருந்தாலும், ஓவுலேசன் காலம் முடிந்து 6-12 நாட்களுக்குள் இத்தகையவற்றை உணர்ந்தால், அப்போது கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.

உணவின் மீது நாட்டம்
கர்ப்பமாகும் போது ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி ஏற்பட்டால், உடனே தவறாமல் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும்.

ஆரம்பத்தில் வேண்டாம்
முக்கியமாக மாதவிடாய் தவறிய ஆரம்ப கட்டத்திலேயே கர்ப்ப சோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அப்போது சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு குறைவாக இருக்கும். இதனால் தவறான முடிவுகள் தான் தெரியும். எனவே மாதவிடாய் தவறிய 1-2 வாரத்திற்கு பின், கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஏனென்றால் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு அதிகரிக்கும். இதனால் சரியான முடிவு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
