Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
ஆண்கள் தந்தையாவதற்கு தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
அனைத்து ஆண்களுக்கும் குழந்தைகளை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுவதில்லை. சில ஆண்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும். அதனால் திருமணமான சில நாட்களிலேயே அவர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். இருப்பினும் சில ஆண்களுக்கு இயற்கையாகவே அந்த எண்ணம் ஏற்படுவதில்லை. குழந்தை குட்டி எல்லாம் மெதுவாக நடக்கட்டும் என்று எண்ணுவார்கள். குழந்தைக்காக ஏற்படும் ஏக்கத்தை உணர்த்தக் கூடிய உணர்ச்சிகள் மற்றும் அறிகுறிகளுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். பல ஆண்கள் புதிதாக வந்த மனைவியுடன் நல்ல புரிதல் ஏற்பட குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போட நினைப்பார்கள். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் முன் பண ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தை பெரும் காத்திருப்பார்கள்.
குழந்தை வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு பல ஆண்களுக்கு அவர்கள் மனைவியிடம் இருந்து மன ரீதியான ஆதரவு தேவைப்படுகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம், ஆனால் அதற்கு தகுதியான நேரம் எது என்று தெரியாமல் அதற்கான அறிகுறிகளை தேடும் ஆண்களும் இருக்கின்றனர். அடிக்கடி அதிக குழந்தைகள் கண்ணில் தென்படுவது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குழந்தைகளின் மீது நாட்டம் ஏற்படுவது போன்றவைகள் எல்லாமே உங்களுக்கு குழந்தை வேண்டும் என்று எடுத்துக் காட்டும் அறிகுறியே. ஆனால் இது ஒன்றும் சுலபமாக எடுக்க கூடிய முடிவு அல்ல.

குழந்தைகளை பெற்றுக் கொல்வதற்கு முன்பு, பொதுவாக தங்களையும் தங்கள் குடும்பத்தின் (மனைவி மற்றும் குழந்தைகள்) வருங்காலத்தையும் பாதுகாப்பாக வைத்திட ஆண்கள் மெனெக்கெடுவார்கள். அவர்களின் அடிப்படை கனவுகள் மற்றும் ஆசைகள் தொழில் ரீதியாகவும் உறவு ரீதியாகவும் சிறிது காலத்தில் நிறைவேறி விட்டால், அதன் பின் குழந்தை பெற்றுக் கொள்ள ஆண்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது. குழந்தைகளை கையாளுவது மற்றும் அவர்களின் வருங்காலத்தை பற்றிய ஆறியாமை கூட குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்கச் செய்யும். குழந்தைகளை பெற்று வளர்க்கும் நம் வீட்டு பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு அவர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை பார்த்து சில ஆண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டாகும்.
குழந்தை வேண்டும் என்று தோன்றுவதற்கு சில அறிகுறிகள் உள்ளதென்று கூறினோம் அல்லவா? அவைகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?
அதிகமான குழந்தைகள் கண்ணில் தென்படுவது
சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அடிக்கடி உங்களை சுற்றி பல குழந்தைகளை கவனிக்க தொடங்குவீர்கள். இதற்கு முன்னரும் கூட இதே போல் உங்களை சுற்றி பல குழந்தைகள் இருந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு குழந்தை ஏக்கம் ஏற்படும் போது தான் அவர்கள் உங்கள் கண்களில் தென்படுவார்கள். உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ் மனதில் இந்த புது உறவுக்கான ஏக்கம் ஒரு கட்டத்தில் ஏற்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு குழந்தை வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் காட்டும் அறிகுறி இது.
நிலையான தொழில்/வேலை
நீங்கள் நிலையான ஒரு வேலையிலோ அல்லது தொழிலிலோ அமர்ந்து விட்டு, சம்பளம் அல்லது லாபத்தை தவிர்த்து அதன் நிலைப்புத்தன்மை மற்றும் நீண்ட கால வளர்ச்சியை எண்ணத் தொடங்கினால், குழந்தை குட்டி என்று நீங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அறிகுறியாகும் இது. ஆணைகள் தங்கள் குடும்பத்தையும் வருங்கால வாழ்க்கையையும் தங்கள் திட்டங்களுக்குள் கொண்டு வர ஆரம்பித்தால் அவர்கள் தங்களுடைய இடர்பாடுகளை கண்டு கொள்ளாமல் நிலைப்புத் தன்மை மீது கவனம் செலுத்துகிறார்கள் என்பதாகும்.
குழந்தையை பற்றி பேசுதல்
உங்கள் திருமண வாழ்க்கையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது நடக்கத் தான் போகிறது. ஆனால் ஆண்கள் தங்கள் உரையாடல்களில் அடிக்கடி குழந்தைகளை பற்றி பேசத் தொடங்கினால் அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆசை வந்து விட்டது என்பதன் அறிகுறியாகும் அது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அடிக்கடி குழந்தைகளை பற்றியும் அதற்கான திட்டங்களை பற்றியும் பேசுகிறீர்களா? உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டது. அதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகவே அதனை பற்றி அடிக்கடி பேசுகிறீர்கள்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புவது
தங்கள் நண்பர்களின் குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக ஆண்கள் இப்போது அதிக நேரத்தை செலவிடுகிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டது. இது மனைவி மார்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் நாட்டம் வந்து விட்டதற்கான அறிகுறியாகும்.
மறைமுகமாக பேசுவது
நீண்ட காலத்திற்கு குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட ஆண்களுக்கு, குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்து விட்டால், சில நேரங்களில் அதனை வெளிப்படுத்த வெட்கப்படுவார்கள். அதனால் தங்கள் விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்த மறைமுகமான அறிகுறிகளை காட்டுவார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், தங்கள் பெற்றோரை பார்த்து தாத்தா பாட்டியாக வேண்டுமா என்று கேட்கலாம் அல்லது மனைவியை பார்த்து தாயாக வேண்டுமா என்று கேட்கலாம்.
ஆராய்ச்சிகளும்... அறிவுரைகளும்...
ஆண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வந்து விட்டால், அதனை பற்றி அதிக தகவல்களை சேகரிக்க தொடங்கி விடுவார்கள். மேலும் தந்தையாவதை பற்றி ஒரு குட்டி ஆராய்ச்சியையே முடித்து விடுவார்கள். ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்படுவதற்கு இதை விட வலுவான அறிகுறி வேறு இருக்க முடியாது.



Click it and Unblock the Notifications











