Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
விந்தணுவை அதிகரிக்க சில சூப்பர் டிப்ஸ்...
இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வார்கள். அந்த நேரத்தில், "பின் எதற்கு ஆகவில்லை?" என்று தெரியாமல் நிறைய பேர் புலம்பிக் கொண்டிருப்பர்.
ஆனால் சிலருக்கு விந்தணு குறைவினால் கூட குழந்தையை பெற முடியாமல் இருப்பர். அவ்வாறு மருத்துவர் ஆண்களது விந்தணுக் குறைவினால் தான் தள்ளிப் போகிறது என்று சொன்னால் போதும், சிலர் அதற்காக என்னென்னவோ மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் சாப்பிட்டால், விந்தணு அதிகரிக்காது, உடல் தான் பெரிதும் பாதிக்கப்படும்.
மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ROS என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன. ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால், அந்த வைட்டமின்கள் ROS-ன் அளவைக் குறைக்கின்றன. மேலும் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும்.
ஆகவே விந்தணுவின் அளவு குறைவாக உள்ளது என்று நினைத்து மனதை தளர விடாமல், நம்பிக்கையோடு ஒரு சில இயற்கையான செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி, அதிகரிப்பதோடு உடலும் நன்கு அரோக்கியமாக இருக்கும். இப்போது அது என்னவென்று பார்ப்போமா!!!

புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது.

உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியை, அளவுக்கு அதிகமாக செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே அளவோடு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.

ஊட்டச்சத்து உணவுகள்
உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள சிறந்தது. முக்கியமாக வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், விந்தணுவிற்கு மிகவும் நல்லது. மேலும் காஃப்பைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மாத்திரைகள்
அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஸ்பெர்ம்களை அழித்துவிடும்.

மொபைல் மற்றும் லேப்டாப்
எப்போதும் மொபைல்களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

லூசான உள்ளாடை
உள்ளே அணியும் உள்ளாடையை டைட்டாக போடாமல், லூசாக போட வேண்டும். இது ஒரு மூடத்தனமாக இருக்கலாம். ஆனால் இது உண்மை.

யோகா
மனஅழுத்தம் இருந்தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, உடலும் புத்துணர்ச்சியடைந்து, விந்தணு உற்பத்திக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

ஆரோக்கியமான உறவு
ஆரோக்கியமான உறவை மேற்கொள்ள வேண்டும். அதிலும் எப்போதும் இருவரும் ஒரே நிலையான மனதோடு உறவில் ஈடுபட்டால், இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல், இனப்பெருக்க மண்டலம் நன்கு செயல்படும்.



Click it and Unblock the Notifications