கற்பனை நண்பர்களோடு வாழும் உங்கள் குழந்தைகள்: ஏற்படும் பயங்கர விளைவுகள்!

குழந்தைப்பருவம் என்பது மிகவும் அழகான காலம். கற்பனை நண்பர்களோடு வாழும் உங்கள் குழந்தைகள்: ஏற்படும் பயங்கர விளைவுகள் குறித்து இங்கு படிக்கலாம்.

குழந்தைப் பருவம் என்பது மிகவும் அழகான, திரும்பக் கிடைக்காத விலை மதிப்பற்ற காலம். அந்த சமயத்தில் தான் களிமண்ணை பொம்மையாக வடிவமைப்பது போல, குழந்தையின் தூய மனது தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு ஒரு முழு மனிதனாக மாறுகிறது. பெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர்.

How To Handle Imaginary Friend In Kids

அவ்வாறு குழந்தைகள் சிறு பிராயத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனை நண்பன் எனும் விஷயம் அவர்களை பின்னாளில் எப்படி பாதிக்கிறது, குழந்தைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது போன்ற தகவல்களை இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இந்த கற்பனை நண்பன்?!

யார் இந்த கற்பனை நண்பன்?!

குழந்தைகளுக்கு கற்பனை நண்பர் என்று ஒருவன் இருக்கிறான் என்று கூறுகிறோமே அது யாராக இருக்கும் என்றால், அவர்களுக்கு பிடித்த பொம்மைகள், அல்லது செல்லப்பிராணிகள், பொருட்கள் போன்றவை தான்.

குழந்தைகள் பொம்மை, பிராணிகள், பொருட்கள் போன்ற இந்த விஷயங்களை தங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயமாக, உற்ற நண்பனாக கருதி அவர்களுடன் தனது அனைத்து இரகசியங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வர்.

எப்படி உருவாகிறார்கள்?

எப்படி உருவாகிறார்கள்?

குழந்தைகளின் கற்பனை நண்பன் உருவாகும் விஷயத்தில் இரண்டு வகைகள் உள்ளன; அவையாவன: ஒன்று குழந்தை இருக்கும், வளரும் சூழல், மற்றோன்று குழந்தையின் உணர்வுகள். குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்கள் கொள்ளும் உணர்வுகளின் அடிப்படையில் தான் தனக்கென ஒரு நண்பனை தானே உருவாக்கிக் கொள்ளும் நிலைக்கு செல்கிறார்கள் அது எப்படி என விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.

சூழ்நிலையால் ஏற்படுவது!

சூழ்நிலையால் ஏற்படுவது!

குழந்தைகளின் இந்த கற்பனை நண்பன் எனும் இந்த விஷயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தல், குழந்தைகளுக்கு விளையாட துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற சூழ்நிலைகளின் பொழுது குழந்தைகள் தங்கள் சூழலில் இருந்து விடுபட தேடி அமைத்துக் கொள்ளும் விஷயம் தான் இந்த கற்பனை நண்பன்.

உணர்வுகளால் ஏற்படுவது!

உணர்வுகளால் ஏற்படுவது!

குழந்தைகள் வெளி மனிதர்களோடு பேசி பழக வெட்கமாக உணரும் பொழுது, குழந்தைகளில் தன்னம்பிக்கை குன்றி காணப்படும் பொழுது, குழந்தைகள் பார்த்த படங்கள் மற்றும் கேட்ட கதைகளினால் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாறுபாடுகள், படங்களில் அல்லது மற்ற குழந்தைகள் பொம்மைகளை தங்கள் நண்பனாக காட்டி பேசுவதை பார்த்து தானும் முயற்சித்தல் போன்ற உணர்ச்சிகளின் காரணமாக கூட குழந்தைகள் தங்களுக்கென கற்பனையாக ஒரு நண்பனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எப்பொழுது ஏற்படுத்திக் கொள்கிறார்கள்?

எப்பொழுது ஏற்படுத்திக் கொள்கிறார்கள்?

குழந்தைகளுக்கு சற்று விவரம் தெரியும் பருவமான இரண்டு வயதினில் இந்த கற்பனை நண்பன் பழக்கம் குழந்தைகளில் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது; மேலும் குழந்தைகளின் இரண்டு அலல்து இரண்டரை வயது முதல் ஒன்பது வயது வரையிலான கால கட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தைகள் தங்கள் கற்பனை நண்பனை உருவாக்கிக் கொள்ள முயல்வர்.

எப்படி ஏற்படுத்துவர்?

எப்படி ஏற்படுத்துவர்?

குழந்தைகள் தங்கள் மனதிற்கு பிடித்த மற்றும் விருப்பமான விஷயங்களின் அடிப்படையில் தனது நண்பனை உருவாக்கி கொள்வர். இந்த கற்பனை நண்பன் உருவாக்கம் மற்றும் தேர்ந்தெடுப்பு ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் வேறுபாடும்.ஆண் குழந்தைகள் தங்கள் சக்திக்கு இணையாக அல்லது தங்களை விட சக்தி வாய்ந்தவனாக இருக்கும் ஒருவனை நண்பனாக வைத்துக் கொள்வர்; அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொம்மையை அவ்வாறு பலசாலியாக எண்ணிக் கொண்டு பழகுவர்.

பெண் குழந்தைகள் தங்களை விட அறிவு மற்றும் பலத்தில் குறைந்த பொருட்களை அல்லது பொம்மையை தங்களது கற்பனை தோழியாக எடுத்துக் கொள்வர்.

மனநிலை பாதிப்பா?

மனநிலை பாதிப்பா?

இவ்வாறு குழந்தைகள் தங்களுக்கென இல்லாத ஒரு உயிரை உயிரற்ற பொம்மைகளில் கண்டு, நண்பனாக நினைப்பது மனநிலை பாதிப்பா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கென பிடித்த பொம்மையை கொஞ்சுவது, அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாக பேசுவது போன்ற செயல்பாடுகள் குழந்தையிடத்தில் காணப்பட்டால் அது சாதாரணமே!

விபரீதம் ஏற்படும் சூழல்!

விபரீதம் ஏற்படும் சூழல்!

ஆனால் குழந்தைகள் அந்த வயது வரம்பை மீறி தனது கற்பனை நண்பனுடனான நட்பை நீட்டித்து அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுது பார்த்தாலும் தனது நேரத்தை செலவிட்டுக் கண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகி சென்றால், அந்த சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையை குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கலாம்.

மருத்துவ கலந்தாய்வு!

மருத்துவ கலந்தாய்வு!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழிவகை செய்ய வேண்டும்; உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்துவருடன் ஒரு கலந்தாய்வு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

பெற்றோர் கடமை!

பெற்றோர் கடமை!

இவ்வாறு மனநிலை மருத்துவரை சந்திப்பதால் உங்கள் குழந்தை பைத்தியம் ஆகிவிட்டது என்று எண்ண வேண்டாம்.! குழந்தைகளின் மனதை நிலைப்படுத்த தக்க சமயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமை என்பதை உணருங்கள்! அதே போல் குழந்தையையும் மனநிலை பாதித்தவர் போல் நடத்தாமல் இயல்பாக நடத்துங்கள். குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பை காட்டாமல், குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசி குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்த முற்படுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 1, 2018, 13:00 [IST]
Desktop Bottom Promotion