Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் போதுமா? அது குழந்தைக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது என்பது குறித்து சில யோசனைகள்
இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறையினருக்கு குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. வளர்ந்திருக்கும் மருத்துவ முறை, பெருகி வரும் தனிக்குடித்தனம்,நவீன வாழ்க்கை முறை ஆகியவை குழந்தை வளர்ப்பு என்பதை ஏதோ சவாலான விஷயமாக மாற்றியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
இளம் தாய்மார்கள் பலருக்கும் எழக்கூடிய சந்தேகம் தான் இது. நாள் முழுவதும் குழந்தை தாய்ப்பால்குடித்தாலும்... என் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா? குழந்தையின் தேவையை பூர்த்தி செய்கிறதா என்ற கவலைபடாத தாய்மார்களே இல்லை எனலாம்.
அவர்களை வழி நடத்தக்கூடிய கட்டுரை தான் இது. குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைத்து விட்டது என்பதை நீங்கள் சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

குழந்தை குடிக்கும் போது :
குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது.
குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.

அசைவு:
தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை முழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது.
தொடர்ந்து உறிந்து கொண்டேயிருக்கும் அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.

ஒரு மணி நேரம் :
பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.

டயாப்பர் :
குழந்தையின் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.அதே போல மலத்தின் நிறமும் இங்கே கவனிக்க வேண்டியது முக்கியம் .
குழந்தை பிறந்த முதல் நாள் கருப்பு நிறமாகவும் பின்னர் பச்சை.... நான்காம் நாள் அல்லது ஐந்தாம் நாளுக்குத் தான் மஞ்சள் நிறத்தில் மலம் வெளியாகும். இதன் பிறகு குழந்தை உட்கொள்ளும் உணவு பொறுத்தே மலத்தின் நிறமிருக்கும்.

உடல் எடை :
குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்யாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட ஐந்து முதல் ஏழு சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்சனை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.

மார்பகம் :
குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.

இடைவேளி :
குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும்.
இந்த இடைவேளியை கணக்கிடுங்கள். இடைவேளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.

தூங்கும் போது :
சில குழந்தைகள் தூங்கும் நேரத்தில் மட்டும் வந்து தாய்ப்பால் குடிக்க நினைப்பார்கள். அது தாய்ப்பால் தேவைக்காக அல்லாமல் ஒரு அரவணைப்புத் தேவையாக இருக்கும்.
பகல் நேரங்களில் அல்லது முழித்துக் கொண்டிருக்கும் போது தாய்ப்பால் கேட்காமல் சரியாக தூங்கும் போது மட்டும் தாய்ப்பால் கேட்டால்... அது குழந்தை பசியாற்ற அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.

அதிகமாக :
போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் என்றால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்துவிட்டோமா என்கிற பயமும் ஏற்படுவதுண்டு. தாயிடமிருந்து நேரடியாக குடிக்கும் குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் தனக்குத் தேவையான பாலை தானே உறிந்து குடிக்க வேண்டும். அதனால் குழந்தை தனக்குத் தேவையானளவு மட்டுமே உறிந்து குடிக்கும்.

பாட்டில் பால் :
பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலோ அல்லது பவுடரை கலந்து கொடுப்பது அல்லது பசும்பாலை கொடுப்பது போன்ற நேரத்தில் தான் குழந்தைக்கு அளவுக்கு அதிகமான பால் சென்றிடும். ஏனென்றால் பாட்டிலில் குடிக்கும் போது அதன் நிப்பில் வழியாக பால் வந்து கொண்டேயிருக்கும். அதனை நிறுத்த வேண்டும் தனக்குப் போதும் என்று குழந்தைகளால் உணர முடியாது அளவுக்கு மீறி குடித்து விடுவார்கள்.



Click it and Unblock the Notifications