Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
கட்டிப்பிடி வைத்தியத்தால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் 7 நன்மைகள்
குழந்தையை மார்போடு அணைத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த உடன் நீங்கள் மயக்கத்தில் இருந்து எழுந்து உங்கள் குழந்தையை மார்போடு அணைக்கும் போது, குழந்தையை பெற்றெடுக்க பத்து மாதங்களாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாக பறந்துவிடுகிறது. குழந்தையின் சருமத்தை உங்கள் சருமதோடு படும் படி கட்டி அணைப்பதால், தாய்க்கும், குழந்தைக்கும் நிறைய நன்மைகள் உண்டாகிறது.
இது மன ரீதியாக மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் நல்ல பலன்களை தருகிறது. உதாரணமாக தாய்பால் குடிக்கும் போது கூட குழந்தைக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கின்றன. குழந்தையை கட்டியணைப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி விரிவாக காணலாம்.

1. குழந்தையின் உடல் வெப்பநிலை
குழந்தையின் உடல் சீக்கிரமாக குளிர்ச்சியடைந்து விடும். உங்கள் குழந்தையை மார்போடு அணைத்துக்கொள்வதால் உடல் மிதமான வெப்பநிலை நீடிக்கிறது. குழந்தை கதகதப்பாக உணருகிறது.

2. சுவாச கோளாறுகளை நீக்கும்
குழந்தை பிறந்த உடன் வெளியுலக காற்றை முதல் முறையாக சுவாசிக்க சற்று கடினமாக இருக்கும். குழந்தையை மார்போடு அனைத்துக்கொள்வது, குழந்தையின் இதய துடிப்புகளை சீராக்கி, குழந்தை எளிதாக சுவாசிக்க உதவுகிறது.

3. பிரவத்திற்கு பின் மன அழுத்தமா?
பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம், குழந்தையை கட்டி அணைக்கும் போது குறைகிறது. குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் போது மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

4. பிணைப்பை அதிகரிக்கிறது
குழந்தையை மார்போடு அணைத்துக்கொள்ளும் போது, குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு அதிகரிக்கிறது. இது தந்தைக்கும் பொருந்தும். இவ்வாறு செய்வதனால், குழந்தையின் உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும். குழந்தைக்கு பசிக்கிறதா? ஏதேனும் வலியா? என்பது போன்ற சில நுணுக்கமான விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

5.தாய்ப்பாலை அதிகரிக்கிறது
குழந்தை உடனான இந்த பிணைப்பு தாய்ப்பாலை அதிகரிக்கிறது. இது குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்துகிறது. பாட்டிலில் பால் கொடுக்கும் போதும் கூட குழந்தையை தனது மார்போடு அரவணைத்து கொடுப்பது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

6. எடை அதிகரிக்க உதவுகிறது
தொடர்ந்து தாயின் மிக நெருங்கிய அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு, பொதுமான அளவு எடை அதிகரிக்கிறது. இது பிறந்த குழந்தைகளின் எடையை அதிகரிக்க சிறந்த வழியாக சொல்லப்படுகிறது.

7.நன்றாக தூங்க உதவும்
குழந்தையை உங்கள் சருமத்துடன் சேர்த்து அரவணிப்பது, குழந்தை நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் கொள்ள உதவுகிறது.



Click it and Unblock the Notifications
