Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தாத்தாவிற்கு இருந்தால் பேரனுக்கும் இருக்கலாம் ! அது என்ன?
தாத்தாவிடமிருந்து பேரப்பிள்ளைகளுக்கு அப்படியே தங்களின் ஜீனை கடத்துவது உயிரியலில் அதிசய நிகழ்வுகளில் ஒன்று.
உருவத்திலும் மட்டுமல்ல, குணத்திலும் அவர்கள் அவர்களின் அப்பா, தாத்தாவைப் போலவே இருப்பார்கள். நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் மட்டும் அவர்களைப் போய் சேரவில்லை. உங்களின் மன நிலையும்தான். புரியவில்லையா?

நீங்கள் எப்போதும் மன அழுத்தத்துடனோ, அல்லது உங்கள் தந்தை மன அழுத்தத்துடன் இருந்தாலோ, அது உங்களின் அடுத்து வரும் சந்ததியினருக்கும் இதே பிரச்சனைகள் நீடிக்கும் என்று கொலம்பியா பல்கலைக் கழகம் தனது ஆய்வை சமர்ப்பித்துள்ளது.
சுமார் 19 வயதுள்ள 251 பேர் அடங்கிய டீன் ஏஜ் பருவத்தினரிடம் ஆய்வை மேற்கொண்டபோது, அவர்களின் சென்ற இரு தலைமுறைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் மன அழுத்தம், நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள், தற்கொலை தூண்டப்படும் எண்ணம் ஆகியவை பெற்றுள்ள பிள்ளைகளை ஆராய்ந்த போது, அவர்களின் தாத்தாவிற்கோ, அல்லது தந்தைக்கோ இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம் தாத்தாவிற்கு இல்லாமல் அப்பாவிற்கு மட்டும் இருந்தால், அது குழந்தையின் மனோ நிலையும் பாதிக்கின்றது. ஆனால் தாத்தாவிற்கும் இருந்து, அப்பாவிற்கும் இருந்தால் மூன்று மடங்கு பேரனுக்கும் வர வாய்ப்புள்ளது என வெயிஸ்மான் என்ற கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
எனவே மன அழுத்தம் என்பது உங்களோடு முடிந்துவிடுவதில்லை. உங்களையும் தாண்டி மூன்று தலைமுறைக்கு பாதிக்கிறது. இது வெறும் சுற்று சூழ் நிலை மட்டும் சார்ந்தது அல்ல, உடலின் மரபணு சார்ந்த நிலை எனவும் கூறியிருக்கிறார் வெயிஸ்மான்.
நாம் விதைப்பதை தான் அறுவடை செய்ய முடியும். நல்ல விஷயங்களை நீங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. உங்களிடம் கற்றுக் கொள்ளும்படி நீங்கள்தான் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அவர்களுக்கு சொல்வதை விட நாம் செய்வதைதான் அவர்கள் செய்வார்கள்.



Click it and Unblock the Notifications


