World IVF Day: IVF மூலம் குழந்தையை பெற்றெடுத்த இந்திய பிரபலங்கள்!

World IVF Day: தற்போது இந்தியாவில் கருவுறாமை ஒரு வளர்ந்து வரும் கவலையாக உள்ளது. திருமணமான பல தம்பதிகள் தற்போது குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

அதுவும் இப்படியான கருவுறாமை பிரச்சனையை சாதாரண தம்பதிகள் மட்டுமின்றி, நிறைய பிரபலங்களும் சந்திக்கின்றனர். இப்படி கருவுறுதலில் பிரச்சனையை சந்திக்கும் போது, மனம் தளர்வதை விடுத்து, அதற்கான மாற்று வழிகளை அறிந்து அவற்றை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

World IVF Day Indian Celebrities Who Welcomed Babies Through IVF

குழந்தைப் பிறப்பதில் பிரச்சனையை சந்திக்கும் தம்பதிகளுக்கு அழகான குழந்தையைப் பெற்ற உதவும் ஒரு வழி தான் IVF என்னும் In vitro fertilization. இந்த முறையின் ஒரு பெண்ணின் கருமுட்டையை எடுத்து, ஒரு ஆணின் விந்தணுவுடன் சேர்த்து ஒரு டெஸ்ட் ட்யூப்பில் வளரச் செய்து, அந்த கருமுட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, கருவை வளர்க்கும் ஒரு சிக்கலான மருத்துவ நடைமுறை ஆகும்.

கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு அழகான குழந்தையைப் பெற்றெடுக்க உதவும் இந்த முறையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதன்முதலாக IVF மூலம் பிறந்த முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான லூயிஸ் ப்ரௌன் பிறந்த தேதி உலக IVF தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போது இந்த IVF மூலம் குழந்தைகளைப் பெற்ற அந்த பிரபலங்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி

முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி தம்பதிகள் என்ன தான் கோடீஸ்வரராக இருந்தாலும், அவர்கள் இஷா மற்றும் ஆகாஷ் அம்பானியை IVF சிகிச்சையின் மூலம் தான் பெற்றெடுத்தனர். இதுக்குறித்து இன்டர்வியூ ஒன்றில், நிஷா அம்பானி தனது 23 வயதில் மருத்துவர் ஒருவர் தன்னால் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்று கூறியதை பகிர்ந்து கொண்டார். இதனால் இவர்கள் IVF வழியை தேர்ந்தெடுத்து இரட்டையர்களை பெற்றெடுத்தனர்.

ஃபரா கான் மற்றும் ஷிரிஷ் குந்தர்

ஃபரா கான் மற்றும் ஷிரிஷ் குந்தர் 2008 ஆம் ஆண்டு தங்களின் குடும்பத்தை விரிவுபடுத்த IVF முறையை தேர்ந்தெடுத்து 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அதுவும் இந்த குழந்தைகள் பிறக்கும் போது ஃபரா கானுக்கு 43 வயதாக இருந்தது. மேலும் ஃபரா கான் இயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான தனது போராட்டம் குறித்தும் வெளிப்படையாக கூறி, அதற்கு ஒரு சிறந்த தீர்வாக IVF முறை இருந்தாகவும் கூறினார்.

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானி வோக் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், 2022 ஆம் ஆண்டு நானும், எனது கணவரும் IVF மூலம் இரட்டையர்களான ஆதியா மற்றும் கிருஷ்ணா ஆகியோரை பெற்றெடுத்ததாக வெளிப்படுத்தினார். மேலும் இதுக்குறித்து யாரும் வெட்கப்பட தேவையில்லை. சொல்லப்போனால் இந்த செயல்முறையும் கடினமானது. இந்த சிகிச்சையின் போது

அமீர் கான் மற்றும் கிரண் ராவ்

நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் அவர்களின் மகள் ஆசாத் ராவ் கானை IVF மூலம் தான் பெற்றெடுத்தனர். என்ன தான் பிரபலமான நடிகராக இருந்தாலும், கருவுறாமையின் போது மருத்துவ உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தை இது வெளிக்காட்டுகிறது. மேலும் இச்செயல் நிச்சயம் பலருக்கும் நம்பிக்கையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஃபர்தீன் கான் மற்றும் நடாஷா மத்வானி

ஃபர்தீன் கான் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைத்துறையில் நுழைந்துள்ளார். இவர் இன்டர்வியூ ஒன்றின் போது, குழந்தையைப் பெற்றெடுக்க முயற்சிக்கும் போது அவரது மனைவி எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதற்காக அவர்கள் IVF முறையை தேர்ந்தெடுத்தது எப்பத என்பது குறித்து தெரிவித்தார். இத்தம்பதிகள் 2013 ஆம் ஆண்டில் தங்கள் மகளை பெற்றெடுக்கும் முன், 2011 ஆம் ஆண்டில் இவர்கள் தங்களின் 6 மாத இரட்டை குழந்தையை இழந்தது பற்றியும், அதன் பின் 2017-ல் ஒரு மகனை பெற்றெடுத்தது பற்றியும் கூறினார்.

எனவே குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிரமத்தை சந்தித்தாலோ அல்லது குழந்தை பெற்றெடுக்க முடியாவிட்டாலோ, ஒருமுறை IVF சிகிச்சையை முயற்சித்துப் பாருங்கள்.

Story first published: Thursday, July 25, 2024, 17:25 [IST]
Desktop Bottom Promotion